search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38,120-ல் இருந்து ரூ.38.200 ஆக அதிகரித்து உள்ளது.
    • தங்கம் விலை ஒரேநாளில் கிராம் ரூ.10-ம் பவுன் ரூ.80-ம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ.4,765க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4,775 ஆக உயர்ந்து உள்ளது.

    ஒரு பவுன் ரூ.38,120-ல் இருந்து ரூ.38.200 ஆக அதிகரித்து உள்ளது. தங்கம் விலை ஒரேநாளில் கிராம் ரூ.10-ம் பவுன் ரூ.80-ம் அதிகரித்து உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.30-க்கும் கிலோ ரூ.66,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ரூ.67-ல் இருந்து ரூ.66.30 ஆகவும், கிலோ ரூ.67 ஆயிரத்தில் இருந்து ரூ.66,300 ஆகவும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் கிராம் ரூ4,775-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,765 ஆக விற்கப்படுகிறது.

    இதே போல் பவுன் ரூ.38,200-ல் இருந்து ரூ.38,120 ஆக குறைந்துள்ளது. தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ரூ.67-ல் இருந்து ரூ.66.30 ஆகவும், கிலோ ரூ.67 ஆயிரத்தில் இருந்து ரூ.66,300 ஆகவும் குறைந்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.66-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,040-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.38,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4755-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,775-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.66-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,000-க்கு விற்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை 1 ரூபாய் 30 காசு குறைந்து 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 30 காசு குறைந்து 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வைகாசி முகூர்த்தத்தையொட்டி ஏராளமானோர் நகைகள் வாங்கி வருகிறார்கள்.
    • தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 480 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று கிராம் ரு4,775 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று 4,835 ஆக உயர்ந்து உள்ளது. பவுன் நேற்று ரூ.38,200 ஆக இருந்தது. இன்று ரூ.38,680 ஆக அதிகரித்து உள்ளது.

    தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராம் ரூ.60-ம், பவுன் ரூ. 480-ம் உயர்ந்து விட்டது.

    இதே போல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.67-ல் இருந்து ரூ.67.50-ஆகவும் கிலோ ரூ.67 ஆயிரத்தில் இருந்து 67,500-ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    தற்போது வைகாசி முகூர்த்தத்தையொட்டி ஏராளமானோர் நகைகள் வாங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    • சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது.
    • தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4795-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.4775-ஆக குறைந்துள்ளது.

    பவுன் ரூ.38,360-ல் இருந்து ரூ.38,200 ஆக குறைந்துள்ளது.தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் கிராம் ரூ.68.01-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ.68 ஆயிரத்து 10-ல் இருந்து ரூ.67 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ. 68 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வந்த நிலையில் இன்று 2-வது நாளாக விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 795 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ. 68 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.68 ஆகவும் உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,080-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38 ஆயிரத்து 80-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 760 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ.68.50 ஆகவும் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 500 ஆகவும், ஒரு கிராம் ரூ.68.50 ஆகவும் உள்ளது.

    தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தெற்குதெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தனகுமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர் தென்னமநாட்டில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை ரெயிலடியில் இறங்கிய தனகுமாரி தான் வைத்திருந்த ஹேண்ட்பைக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த சிறிய பையையும் அதில் இருந்த 5 பவுன் தங்க நகையையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையை அபேஸ் செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இது குறித்து தனகுமாரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.
    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போட வேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிற போது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்கு மெண் டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட் டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர் களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரிய வரும். அதற்கு நம்பிக் கையான இடத்தில் தங்கத்தை வாங்கு வது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.
    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை உடையில் மறைத்து கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Hyderabadcustomsaction #Manarrested
    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகாவில் இருந்து வந்த  பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த நபர், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை உடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட தங்க பேஸ்ட் 1.16 கிலோ கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 36,99,782 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #Hyderabadcustomsaction  #Manarrested
    ×