search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 31-ந்தேதி இதுவரை இல்லாத வகையில் பவுன் ரூ.44,720 ஆக அதிகரித்தது. அதன்பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44,480-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.5560-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5535-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.77,100-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

    கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590-க்கும், ஒரு சவரன் ரூ.44,720-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.
    • ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    சென்னை :

    பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத்தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    இவ்வாறான முறைகேடுகளைத்தடுக்க ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) சென்னை பிரிவுத்தலைவர் பவானி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

    இது பொருட்களுக்கான தர உரிமம் (ஐ.எஸ்.ஐ. முத்திரை), மேலாண்மை திட்டச்சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வக சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக்கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

    ஹால்மார்க்கிங் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம்.

    இந்தியாவில் முதற்கட்டமாக 288 மாவட்டங்களில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது பி.ஐ.எஸ். (இந்திய தர நிர்ணய அமைவனம்), தங்கத்தின் தூய்மை, நேர்த்தி மற்றும் 6 இலக்க தனித்த அடையாள எண் ஆகிய 3 அடையாளங்களைக்கொண்டுள்ளது.

    BIS CARE எனப்படும் செயலியில் உள்ள VERIFY HUID என்ற ஐகானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

    வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

    ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) முதல் நகைக்கடைகளில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே விற்கவேண்டும்.

    ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது.
    • தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

    ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது. நேற்று கிராம் ரூ, 5,545-க்கும், பவுன் ரூ. 44,360 -க்கும் விற்பனை ஆனது.

    இன்று கிராம் ரூ.20-ம் பவுன் ரூ.160-ம் அதிகரித்து உள்ளது. இன்று கிராம் ரூ.5,565-க்கும் பவுன் ரூ.44,520-க்கும் விற்பனை ஆகிறது. 10 நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை பவுன் ரூ.44 ஆயிரத்துக்கும் மேலாக விற்பனை ஆகி வருகிறது. இடையில் 22-ந்தேதி மட்டும் பவுன் ரூ.44 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பிறகு இறங்கவில்லை.

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராம் ரூ.75.70-ல் இருந்து ரூ.76.20 ஆகவும், கிலோ ரூ.76 ஆயிரத்தில் இருந்து ரூ.76,200 ஆகவும் விற்பனை ஆகிறது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

    கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,545-க்கும், ஒரு சவரன் ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

    • கடந்த 4 நாட்களாக நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.
    • வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    சென்னை:

    தங்கத்தின் விலை இந்த மாதம் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து விலை ஏறுமுகமாக இருந்ததால் பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடந்த 4 நாட்களாக நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.5,540 ஆகவும், பவுன் ரூ.44,320-ஆகவும் இருந்தது. இன்று கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,510-க்கு விற்பனை ஆகிறது.

    பவுன் ரூ.240 குறைந்து ரூ.44,080-க்கு விற்பனை ஆகிறது.

    வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.76-ல் இருந்து ரூ.75.70-ஆகவும் கிலோ ரூ. 76 ஆயிரத்தில் இருந்து ரூ.75,700 ஆகவும் குறைந்து உள்ளது.

    • தென்மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் தங்கம் வென்றது.
    • கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தென் மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 19-ந்தேதி வேலு மாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் கலந்து கொண்டன.

    மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

    ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, கர்நாடக அணியை ஜூட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

    இறுதி போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச்செயலர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், மாவட்ட ஆக்கி சங்க சீனியர் துணைத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, ஆக்கி சங்க மாவட்ட துணைத்தலைவர் அரவிந்த்ராஜ், துணைத்த லைவர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதத்தில் உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினமும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44, 320-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,550-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.44,320-க்கு விற்கப்பட்டது. இன்று அது ரூ.44,480-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5540-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5560-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.75.70-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது.

    நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அவசர தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும் ஒரு பொருள் வீட்டில் இருக்கிறது என்றால் அது தங்கமாக மட்டுமே இருக்க முடியும்.

    அந்த அளவுக்கு மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் மருத்துவ செலவாக இருந்தாலும் சரி கல்வி கட்டணமாக இருந்தாலும் சரி தங்கம் மட்டுமே அவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    இதனால் நகைக்கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி சிறுக சிறுக சேமித்து 12 மாதங்கள் முடிந்த பிறகு தங்களது பெண் குழந்தைகளுக்கு தேவையான நகைகளை சேர்க்க வேண்டும் என்பதே மாதச் சம்பளம் வாங்கும் ஒவ்வொரு தந்தையின் கனவாகவே இருந்து வருகிறது.

    தங்களது வருமானத்துக்கு ஏற்ப ரூ. 500 முதல் ஐந்தாயிரம் வரை சேமிப்பவர்களும் உண்டு. இப்படி பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சீட்டு போட்டு நகை வாங்கி சேமித்து தங்களது ஆசை மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் பலரே நடுத்தர வர்க்கத்தில் நிறைந்திருப்பார்கள்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகள் தான் அவசர தேவைக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது. கொரோனா காலத்துக்கு பிறகு மிகவும் குறைந்த இடைவெளியில் இதுபோன்று தங்கத்தின் விலை இவ்வளவு அதிகமாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்கிறார்கள் நகை வியாபாரிகள்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்கள் அமெரிக்காவில் வங்கிகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் மற்றும் திவால் நடவடிக்கைகளால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 18-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு ரூ.5,520 ஆக இருந்தது.

    நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து ரூ.5,570 ஆக அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்து 560 ஆக உள்ளது.

    கடந்த 3, 4 மாதங்களாக பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, அமெரிக்க வங்கிகளின் திவால் போன்றவற்றால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் கூறுகிறார் சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளரான சாந்தகுமார்.

    தங்கத்தின் விலை குறித்து அவர் மேலும் கூறும்போது, "அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்கிற வங்கி உள்பட 4 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. மேலும் 8 வங்கிகள் இந்த வரிசையில் உள்ளன. அந்த வங்கிகளும் திவாலாகும் நிலை ஏற்பட்டால் தங்கத்தின் விலை இதைவிட மேலும் உயரும் ஆபத்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மட்டுமின்றி மும்பையில் உள்ள நகை வியாபாரிகளும் இதனை எச்சரிக்கையாகவே தெரிவித்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் வரும் காலங்களில் அது சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

    வருகிற காலகட்டங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,100 முதல் ரூ.6,200 வரையிலும் உயரலாம் என்றும் கூறப்படுகிறது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 10 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் ரூ.62 ஆயிரம் வரையில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுபோன்ற நிலை ஏற்பட்டு விட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் தங்கம் இனி தங்குமா என்பதும் பெரிய கேள்வியாகவே மாறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 30 ஆயிரத்து 900 ஆக இருந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 10 கிராமுக்கு 25 ஆயிரம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது.

    2020-21-ம் ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 980 என்ற அளவில் இருந்தது. இதன் பின்னர் 2022-ம் ஆண்டு உக்ரைன்- ரஷியா போரின் போதும் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு வங்கிகள் திவாலான காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது திருமண ஏற்பாடுகளை செய்துள்ளவர்கள் தாங்கள் திட்டமிட்டபடி நகைகளை வாங்க முடியாமல் அதிகப்படியான செலவினத்துக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    மாப்பிள்ளை வீட்டில் பேசியபடி நகைகளை போட வேண்டுமே என்கிற தயக்கத்துடன் கூடுதல் சுமையாகி போன தங்கத்தின் விலை உயர்வை எண்ணி பெண்ணைப் பெற்ற பெற்றோர் தவிக்கும் நிலையே காணப்படுகிறது.

    அதே நேரத்தில் வசதி படைத்த பெரும் பணக்காரர்கள் தங்கத்தில் லட்சங்களையும், கோடிகளையும் முதலீடு செய்வதும் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி தங்கத்தின் விலையேற்றம் ஏழை எளியவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் பெரிய அளவில் கூடுதலாக குடும்பச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ள தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் பால் வார்க்குமா? இல்லை இதைவிட மேலும் விலை அதிகமாகி குடும்ப பாரத்தை மேலும் அதிகமாக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,320-க்கும் ஒரு கிராம் ரூ. 5,540-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கும் விற்கப்படுகிறது.

    • தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,570-க்கு விற்கப்பட்டது.
    • வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10-ந்தேதி பவுன் ரூ.41,520 ஆக இருந்தது. அதன் பிறகு தங்கம் விலை தினமும் அதிரடியாக உயரத் தொடங்கியது.

    அடுத்தடுத்த நாட்களில் ரூ.42,000, ரூ.43,000 என உயரத்தொடங்கிய தங்கம் விலை கடந்த 18-ந்தேதி ரூ.44,480 ஆக அதிகரித்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு 80 அதிகரித்து ரூ.44,560-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் 12 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறையத் தொடங்கியுள்ளது. இன்று தங்கம் விலை ரூ.44 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.44,560-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.43,760-க்கு விற்கப்படுகிறது.

    தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,570-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    ×