search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
    • வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை :

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் தாறுமாறாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது. அந்த வகையில் கடந்த 2-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 505-க்கும், ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது.

    அதனைத்தொடர்ந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், மறுநாளே விலை சரிந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்துக்கு வந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்துகொண்டே வந்து, ரூ.43 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.

    விலை குறைந்து வந்த சூழ்நிலையில், கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 383-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.43 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

    தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

      சென்னை:

      சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 984-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 373 ஆக உள்ளது. தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

      வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரமாகவும், ஒரு கிராம் ரூ.74 ஆகவும் உள்ளது.

      • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.5,335 ஆகவும், பவுன் ரூ.42,680 ஆகவும் இருந்தது.
      • வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74 ஆக விற்பனையாகிறது.

      சென்னை:

      பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத வகையில் கடந்த 2-ந்தேதி ரூ.44 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது.

      இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.5,335 ஆகவும், பவுன் ரூ.42,680 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365 ஆக இருந்தது. பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.42,920 ஆக விற்பனையானது.

      அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74 ஆகவும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரமாகவும் இருந்தது.

      • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது.
      • வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

      சென்னை:

      பாராளுமன்றத்தில் கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது.

      இதன் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 505-க்கு விற்றது.

      இதற்கிடையே நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43 ஆயிரத்து 520-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

      சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5 ஆயிரத்துக்கு 335 ஆக உள்ளது.

      தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

      தங்கம் பவுன் 2 நாட்களில் ரூ.1,360 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்ததால் வரும் நாட்களில் மேலும் விலை உயரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து விலை குறைந்துள்ளது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆறுத லாக அமைந்துள்ளது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
      • தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

      சென்னை:

      பங்குச்சந்தைகளின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது.

      இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை எட்டியது. தொடர்ந்து ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என புதிய உச்சத்தை தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

      இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் 1-ந்தேதி அன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.

      பட்ஜெட்டின் தங்கத்தால் கிராமிற்கு ரூ.77 அதிகரித்தது. ஒரு பவுனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.43,320-க்கு விற்கப்பட்டது.

      இந்த நிலையில் நேற்று மேலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ.5,505 ஆக அதிகரித்து பவுன் ரூ.44,040-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் கிராமிற்கு ரூ.90 அதிகரித்தது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

      கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமிற்கு இன்று ரூ.65 குறைந்து பவுனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்தது. நேற்று கிராமிற்கு ரூ.90 உயர்ந்து பவுனுக்கு ரூ.728 அதிகரித்த நிலையில் இன்று கிராமிற்கு ரூ.65 வீதம் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

      இன்று ஒரு பவுன் ரூ.43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கடந்த 10 நாளில் பவுனுக்கு ரூ.760 கூடியுள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளது.

      தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

      • தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்யும்.
      • இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்

      சென்னை :

      தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.

      இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதியதால், தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது.

      நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இதன் தாக்கம் உடனடியாக தங்கம் விலை எதிரொலித்ததை பார்க்க முடிந்தது.

      காலையில் கிராமுக்கு ரூ.22-ம், பவுனுக்கு ரூ.176-ம் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 338-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 704-க்கும் விற்பனை ஆன தங்கம் விலை, நேற்று மாலை கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் அதிரடியாக உயர்ந்தது.

      இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 415-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் தங்கம் விற்பனை ஆனதுதான் வரலாறு காணாத புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.

      அந்தவகையில் நேற்றைய தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நெருங்கி இருக்கிறது. இன்றோ (வியாழக்கிழமை), நாளையோ (வெள்ளிக்கிழமை) விலை அதிகரிக்கும்பட்சத்தில், தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்யும்.

      தங்கம் விலை உயர்வு குறித்து மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, 'மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்' என்றார்.

      தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 74 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கப்பட்டது.
      • இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

      சென்னை:

      தங்கம் விலை கடந்த ஒருவார காலமாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,704-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,338-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.5,360-க்கு விற்கப்படுகிறது.

      இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கப்பட்டது.

      இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

      • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்தது.
      • வெள்ளி ஒரு கிராம் ரூ.74.20-க்கு விற்கிறது.

      சென்னை:

      சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 800-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 350-ஆக உள்ளது.

      வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • தங்கம் விலை இன்று குறைந்தது.
      • ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கப்படுகிறது.

      சென்னை:

      தங்கம் விலை கடந்த 9-ந் தேதி பவுனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.

      நேற்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.48 ஆயிரத்து 40-க்கு விற்றது. சுமார் 2½ ஆண்டுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.

      இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. இதனால் பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

      சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42 ஆயிரத்துக்கு 760-க்கு விற்றது.

      கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ. 5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

      • தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
      • தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது.

      சென்னை:

      தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு உள்ளேயே இருந்தது.

      கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது.

      அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நவம்பர் 11-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39240 ஆக உயர்ந்தது.

      டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. டிசம்பர் 2-ந்தேதி தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் ரூ.40,160-க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் டிசம்பர் மாதம் 31-ந்தேதி பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.41,040 ஆக விற்கப்பட்டது.

      அதன்பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 9-ந்தேதி பவுன் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.42,080-க்கு விற்கப்பட்டது.

      இந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.

      தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது.

      நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5345-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5380-க்கு விற்கப்படுகிறது.

      இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

      தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
      • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

      சென்னை:

      தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 840-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42 ஆயிரத்து 760-க்கு விற்றது.

      ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆக உள்ளது.

      • கடந்த 13-ந்தேதி மீண்டும் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.
      • வெள்ளி ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

      சென்னை :

      தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது.

      கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாத இறுதியில் ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே நீடித்தது.

      ஆனால் பெரும்பாலும் தங்கம் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதி விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தையும் கடந்தது. அதற்கு மறுநாளே விலை குறைந்து, ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சென்றாலும், தொடர்ச்சியாக விலை உயர்ந்து கடந்த 13-ந்தேதி மீண்டும் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.

      பின்னர், இடையில் ஓரளவுக்கு விலை குறைந்து காணப்பட்டாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை இருந்தது.

      அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 323-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 584-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.32-ம், பவுனுக்கு ரூ.256-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 355-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதே நிலை நீடித்தால், இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்தை தொட்டுவிடும்.

      இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அப்போது ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

      வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு 70 காசும், கிலோவுக்கு ரூ.700-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

      ×