search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்தது. கடந்த 9-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு நேற்று சற்று குறைந்து ரூ.41,896-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41840-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5237-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5230-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.73.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74000-க்கு விற்கப்படுகிறது.

    • விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையானது நடப்பு ஆண்டில் டாலருக்கு எதிராக 2.36 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
    • மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    சந்தை முதலீட்டாளர்கள் ஜெரோம் பவலின் பேச்சு மற்றும் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறித்தான தரவினை முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆக வரவிருக்கும் நாட்களில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தற்போது சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இது தேவையினை ஊக்கப்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இந்த ஆண்டில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையானது நடப்பு ஆண்டில் டாலருக்கு எதிராக 2.36 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பார்க்கும்போது தங்கம் விலையானது 14.55 சதவீதம் ஏற்றத்தில் காணப்பட்டது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது ஏற்கனவே மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இது இனியும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலை இன்னும் அதிகரிக்கலாம். தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது அதிகரித்துள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். நடப்பு ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

    குறிப்பாக சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இந்த போக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது.

    இதற்கிடையில் இன்னும் 6 காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

    குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, டாலர் மதிப்பு, சீனா தைவான் பிரச்சனை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

    தங்கம் கடந்து வந்த பாதை...

    ஒரு சவரன் தங்கம் விலை 1930-ம் ஆண்டு முதல்...

       ஆண்டுவிலை நிலவரம்
    1930ரூ.14
    1935ரூ.24
    1940ரூ.28
    1945ரூ.49
    1950ரூ.79
    1955ரூ.63
    1960ரூ.88
    1965ரூ.56
    1970ரூ.147
    1975ரூ.432
    1980ரூ.1064
    1985ரூ.1544
    1990ரூ.2520
    1995ரூ.3600
    2000ரூ.3480
    2005ரூ.4640
    2006ரூ.7680
    2007ரூ.7600
    2008ரூ.9200
    2009ரூ.10944
    2010ரூ.12500
    2011ரூ.21120
    2015ரூ.21424
    2020ரூ.31168
    2021ரூ.37880
    2022ரூ.36472
    2023ரூ.40160
    • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது.
    • இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    என் தங்கம்..பொன்னு... செல்லம்...

    இப்படி குழந்தைகளை கொஞ்சுவதில் இருந்தே தங்கம் நம் மனதில் ஆழமான இடத்தில் பதிந்துள்ளது என்பதை அறியலாம். ஒரு காலத்தில் மிக குறைவான விலையில் இருந்த தங்கம் இன்று விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனாலும் அதை வாங்குவோர் சளைக்கவில்லை.

    திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் என எந்த விழா என்றாலும் தங்கம் இல்லாத விழாவா...கடுகளவு வாங்கி கொடுத்தாலும் கவனத்தை ஈர்க்கும் பரிசு தங்கம்தான்... ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்க காரியங்கள் நடப்பது இல்லை. அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடியானால் தங்கத்தை அடகு வைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கி கொள்ள முடியும்.

    மக்களின் வாழ்வியலோடு இணைந்துவிட்ட தங்கம் சமீப காலமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தங்க விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ந் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்து தாண்டியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5,221 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 41,768 ஆகவும் இருந்தது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூபாய் 5,482 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 43,856 ஆகவும் இருந்தது.

    இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு ரூபாய் 5,260 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 42,080 ஆகவும் உயர்ந்து உள்ளது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூபாய் 5,523 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 44,184 ஆகவும் இருந்தது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

    தங்கத்தின் ஆபரண நகை வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் கனவு நிறைவேறுமா என்பதே தெரிவில்லை. தங்கத்தை அதிக அளவு நுகர்வு செய்யும் இந்தியாவில் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலரையும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

    இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்கெங்கோ வீடு, மனை, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். இது விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    பொங்கலுக்கு பிறகு திருமண முகூர்த்த நாட்கள் அதிகம் இருக்கும். திருமணத்துக்கு புதிதாக தங்கம் வாங்குபவர்களுக்கு, தங்கத்தின் விலை உயர்வினால் செலவு பல மடங்கு அதிகரிக்கும். விலை உயர்வால் நடுத்தர மக்கள் இனி நம்மால் தங்கத்தை வாங்கவே முடியாதோ, கண்ணால தான் பார்க்கணும் என புலம்புவதை கேட்க முடிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    • பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.
    • பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.

    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டிய நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

    சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.74.90-ல் இருந்து ரூ.73.70 ஆகவும், கிலோ ரூ.74,900-ல் இருந்து ரூ.73,700ஆகவும் குறைந்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் நேற்று பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. நேற்று பவுன் ரூ.42,080க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.41,896-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து ரூ.5,260-ல் இருந்து ரூ.5,237ஆக விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.74.90-ல் இருந்து ரூ.73.70 ஆகவும், கிலோ ரூ.74,900-ல் இருந்து ரூ.73,700ஆகவும் குறைந்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர்.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. இன்று இது ரூ.42 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்து உள்ளது.

    நேற்று கிராம் ரூ.5,221-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.5,260 ஆக உயர்ந்தது. பவுன் ரூ.41,768-ல் இருந்து ரூ.42,080 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ.39-ம் பவுன் ரூ.312-ம் உயர்ந்து உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. கிராம் ரூ.74.40-ல் இருந்து ரூ.74. 90 ஆகவும், கிலோ ரூ.74,400-ல் இருந்து ரூ.74,900 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

    • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,768-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 768-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 221-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது.
    • வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுனுக்கு ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.42 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41 ஆயிரத்து 824-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 190 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது.
    • வெள்ளி விலை இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,528-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ.41,664-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,191-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5208-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • வெள்ளி விலை அதிகரித்து இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் பவுன் ரூ.41 ஆயிரத்தை கடந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்று கிராம் ரூ.5,150-க்கு விற்பனை ஆனது. இன்று இது 5,191 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று பவுன் ரூ.41,200-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.41,528 ஆக அதிகரித்து உள்ளது.

    தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.41-ம், பவுனுக்கு ரூ.328-ம் உயர்ந்து இருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ளதால் நகை வாங்க இருந்தவர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதே போல வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ. 74.50-ல் இருந்து ரூ.75.50 ஆகவும் கிலோ 74,500-ல் இருந்து ரூ.75,500 ஆகவும் உயர்ந்துள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 200-க்கு விற்கிறது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 150-ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 200-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 150-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கிறது.

    • பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
    • தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் பவுன் ரூ.39 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும் அதிகளவு விலை ஏற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் இன்று பவுன் ரூ 41 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை அளித்து உள்ளது. நேற்று கிராம் ரூ.5115-க்கு விற்பனை ஆனது, இன்று இது ரூ.5130 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பவுன் ரூ.40,920-க்கு விற்கப்பட்டது. இன்று இது அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம் பவுன் ரூ.120-ம் உயர்ந்து உள்ளது.

    பாதுகாப்பான முதலீடு என்பதால் பலர் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்தளவு உயர்ந்து இருப்பதாக நகை கடை அதிபர்கள் தெரிவித்தனர். தங்கம் உச்சத்தை தொட்டு உள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ 74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும். கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74.300 ஆகவும் குறைந்து உள்ளது.

    ×