search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95995"

    திருப்பதியில் கடும் குளிர் நிலவுவதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள நான்கு மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் வாகனங்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக மின்வயர், கேபிள், பக்திசேனல் வயர், கண்காணிப்பு கேமரா வயர்கள் செல்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக தரைவழியாக வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான்கு மாட வீதிகளில் இரும்பு கேட்டுகளை சீரமைத்து அமைக்க வேண்டும். அதுமட்டுமல்ல திருப்பதியில் உள்ள தெப்பகுளத்தை சுற்றியுள்ள இரும்பு தடுப்புகளை பித்தளை தடுப்புகளாக மாற்றப்படும்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள மரத்தேர் புதுப்பிக்க வேண்டும். மேலும் ரிங்ரோட்டில் மரக்கன்று, செடிகள் நடப்படும். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தை சீரமைத்து பொதுமக்களின் வருகையை அதிகரிக்க வேண்டும்.

    இந்த மாதம் குளிர்காலம் என்பதால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு கூடுதலாக போர்வை வழங்க வேண்டும். மேலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் வசதி மேற்கொள்ள வேண்டும்.

    கபிலேஸ்வரசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து முடித்து உட்கார்ந்து செல்வதற்கு இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Tirupati
    திருப்பதியில் நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களின் காணிக்கையாக ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது. #tirupati
    திருமலை:

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது.

    கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது.

    வைகுண்ட ஏகாதசி 2-வது நாளான துவாதசியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி சக்கரத்தாழ்வார் இன்று அதிகாலை மாடவீதிகளில் கொண்டுவரப்பட்டு வராகசாமி கோவிலில் வைத்து பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடந்தது.

    இதையடுத்து கோவில் அருகில் உள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  #Tirupati
    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் செய்யப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சொர்க்கவாசலில் நுழைந்து, கோவிலில் உள்ள தங்க வாசலில் வைக்கப்பட்டார்.

    இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டாமணி மண்டபம் அருகில் உள்ள சொர்க்கவாசலில் நுழைந்து, பிரதான உண்டியல் வழியாக வெளியே சென்றனர். பின்னர் அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர்.

    இன்று காலை தங்க தேரோட்டம் நடந்தது. தங்க தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    இலவச தரிசன பக்தர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி. காட்டேஜ் விடுதி அருகில் 26-வது நம்பர் கேட்டில் நுழைந்து, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட, ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சொர்க்கவாசல் மூடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனமும் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி அருகே திருமணம் செய்த புதுமண தம்பதிகளை ஏற்றி செல்வது போல காரை அலங்கரித்து செம்மரம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். #RedSandalwood
    திருமலை:

    திருப்பதி அருகே உள்ள மங்கலம் திருமலா நகரில் இருந்து சேஷாசலம் வனப்பகுதிக்கு செல்லும் மெயின்ரோட்டில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருமண அலங்காரத்துடன் பிடிபட்ட கார்

    அப்போது மணமக்களை ஏற்றி செல்வது போன்ற அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று வந்தது. மார்கழி மாதம் திருமணம் எதுவும் நடக்காது.

    திருமண சீசன் முடிந்த நிலையில் அலங்காரத்துடன் சென்ற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அப்போது காரில் செம்மரம் கடத்துவது தெரியவந்தது. அதிலிருந்த 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை கடத்தி வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த துரைவேலு (24), திலீப்குமார் (23), தேஜா (25), மஸ்தான் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திலீப்குமார் மீது கொலை வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வந்தார். செம்மரம் எங்கு கடத்தி செல்லப்பட்டது. ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  #RedSandalwood


    காவிரி பிரச்சனையில் தமிழக அரசும், கர்நாடகமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று திருப்பதியில் குமாரசாமி கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    திருமலை:

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தில் பங்கேற்று குமாரசாமி சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    கர்நாடக மக்களும் தமிழர்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.

    இதனால் பிரச்சனை தொடர்ந்து வருகிறது இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சனை தொடங்குகிறது. இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சனையில் சுமூகமான தீர்வை காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #CauveryIssue

    18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிது. அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நடந்தது.

    கூட்டத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 19-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா ஆகியவை நடக்கின்றன. அதையொட்டி 18-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி. பக்தர்கள் புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் அதிகாலை 3 மணிவரை தரிசனம் செய்யலாம். புரோட்டோக்கால் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வி.ஐ.பி. பக்தருக்கு 4 முதல், 6 டிக்கெட் வரை வழங்கப்படுகின்றன. அந்த டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய் ஆகும். எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு திருமலையில் ராம்ராஜு விடுதி அருகிலும், சீதா நிலையம் அருகிலும் தனியாகக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    புரோட்டோக்கால் பக்தர்கள் வி.ஐ.பி. டிக்கெட் பெற வேண்டுமென்றால், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த டிக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு ஆண்டு கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்வோர், திவ்ய தரிசனத்தில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைப்பாதைகளில் பாத யாத்திரையாக வருவோருக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    18, 19-ந்தேதிகளில் ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். தேவஸ்தான ஊழியர்களுக்கு 2 நாட்களில் 24 மணிநேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

    வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. அன்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16-ந்தேதி நள்ளிரவு 12.30 முதல் வைகுண்டம் காத்திருப்பு அறை 1 மற்றும் 2-ல் அனுமதிக்கப்படுவார்கள்.

    அந்த அறைகள் நிரம்பியதும் ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவை நிரம்பியவுடன் மேதரமிட்டா அருகில் உள்ள எண்.1 கதவு வழியாக மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலிலும், அது நிறைந்தவுடன் வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் என ஒவ்வொரு பகுதியாக பக்தர்கள் காத்திருக்க அனுமதிக்கப் படுவார்கள். சரியாக 28 மணி நேரம் காத்திருப்பை அடுத்து 18-ந்தேதி காலை 5.30 மணிக்கு தர்ம தரிசனம் தொடங்கும்.

    அதன்பின் தரிசன வரிசை நகர தொடங்கும். 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும்.

    அதேபோல் பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல் அருகில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பதியில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சுஷ்மிதா (24). திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று மதியம் சுஷ்மிதாவுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று விட்டனர். ஆனால் சுஷ்மிதா கல்லூரிக்கு செல்லவில்லை.

    மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். வார்டன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து யுனிவர்சிட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாணவியின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. இதனால் 6 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யபட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    இதனையொட்டி கோவில் நடை இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை சாத்தபட்டு, 6 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யபட்டது.

    11 மணியில் இருந்து 12 மணிவரை நெய்வேத்தியம் நடடந்தது. அதைத் தொடர்ந்து 12 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தால் இன்று நடக்கயிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.
    திருப்பதி கோவிலில் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அதையொட்டி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதையடுத்து 11 மணியில் இருந்து 12 மணிவரை நெய்வேத்தியம் நடக்கிறது.

    12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் அன்று நடக்கயிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் 6 மணிநேர தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான கல்ப விருட்ச, இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன. பெண்கள், ஆண்கள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பலர் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். கேரள செண்டை மேளம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணிவரை கோவிலுக்குள் உள்ள ஸ்ரீகிரு‌ஷ்ணர் மண்டபத்தில் உற்சவருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10.30 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வீதிஉலாவில் திருப்பதி இணை அதிகாரி போலா.பாஸ்கர், கோவில் அதிகாரி ஜான்சிலட்சுமி, கோவில் அதிகாரிகள், துணை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.

    ரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldrobbery

    ×