search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96073"

    திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றம் சார்பில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ விழா மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி சக்தி விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், பசு தாயார் வழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் திருக்கல்யாண குழுவினர் மற்றும் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினசரி காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி விழா நேற்று மாலை நடைபெற்றது.

    கொரோனா அச்சறுத்தல் காரணமாக லட்சார்ச்சனை ரத்து செய்யப்பட்டது. பக்தர் கள் உட்கார்ந்து தரிசிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக் கல் மரகத மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் புஷ்பங்கள் அடங்கிய கூடைகளை மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான பூக்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடத்தி தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.
    மதுரை மாவட்டம், அழகர் மலையில் உள்ள 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்கினி திக்கில் சிங்க முகாசுரனையும் சம்ஹாரம் செய்தார்.

    ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.

    திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மண்டகப்படிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு செண்பகவல்லி அம்மன், பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி, அம்பாள் மணக்கோலத்தில் எழுந்தருளினர். மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் திருமண சீர்கொண்டு வந்தனர். நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜபெருமாள் அழைத்து வரப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மனைவி இந்திரா காந்தி, மண்டகப்படிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நல்லதவம் செய்த நாச்சியார் அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரருக்கு ஐப்பசி திருக்கல்யாண விழா 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், இரவு சுவாமி அம்மாளுக்கு காட்சி கொடுத்தலும் நடைபெற்றது.

    ேநற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அம்பாளுக்கு சீர் கொண்டு வருதல், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நலுங்கு உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து அம்பாள், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டினப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவ பக்தர்கள் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூலநட்சத்திர நாளன்று அவதரித்தார். சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாளை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலசந்தி பூஜைக்குபின் காலை 9 மணியளவில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை பாடிய பின்னர் திருஞானசம்பந்தர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். மேலும் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக திருமணமேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகாதீபாராதனை நடந்தது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 10.45 மணிக்கு திருத்தேரேற்றம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாதசாமி பெருமாள் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடந்தது.
    திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாதசாமி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

    விழாவில் நேற்று முன்தினம் மாலை திருகல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள திருகல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தாயாருக்கு பட்டு சேலை, கிரீடம், தங்க மூக்குத்தி, அணிவிக்கப்பட்டும், பெருமாளுக்கு வெண்பட்டாடை அணிவிக்கப்பட்டும் மணக்கோலம் கொண்டிருந்தனர். தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அக்னி வலம் வருதல், தாயாருக்கு தோள் மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், பூப்பந்து ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று காலை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. 
    தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவிலில் வெங்கடாஜலபதி பத்மாவதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஏகாதசி அன்று சுக்லபட்சத்தில் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் திருமண நாளை கொண்டாடும் வகையில் உலக நன்மைக்காக ‘பரிணயோத்சவம்’ என்ற திருவிழா 3 நாட்கள் நடக்கிறது.

    அப்போது வெங்கடாஜலபதிக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவ உற்சவம் நடந்து வருகிறது. இதேபோன்று சென்னையில் உள்ள பக்தர்களும் இதனை தரிசிக்க வேண்டும் என்பதற்காக சென்னை, தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பரிணயோத்சவம் விழா நடந்தது.

    விழாவையொட்டி சீனிவாசபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கு விஷ்வக்ஸேன ஆராதனை, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவில் கமிட்டி தலைவர் ஸ்ரீகிருஷ்ணா, உதவி நிர்வாக அலுவலர் ரவி, முன்னாள் கமிட்டி தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, உபயதாரர் பி.வி.ஆர்.கிருஷ்ணராவ் மற்றும் வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் முரளிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தெப்பத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தட்டு வாகனங்களில் சாமி, அம்பாள், விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்மாள் ஆகியோர் ரதவீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர், சாமி வாகனங்கள் வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 9.45 மணிக்கு சாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளினர். இதே போல் விநாயகர் இன்னொரு தேரிலும், சப்பரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி, கோவில் பணியாளர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர் ஆகியவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து மாலையில் சமய சொற்பொழிவு, நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் சாமி அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது.
    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. நேற்று காலையில் கணபதிஹோமம், அபிஷேகம், வருஷாபிஷேக கும்பாபிஷேகம், மதியம் அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது.

    மாலையில் ரிஷப வாகனத்தில் சாமி எழுந்தருளி பெண் அழைப்புக்கு செல்லும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம் போன்றவை நடந்தன. இரவு ரிஷப வாகனத்தில் சாமியும் அம்பாளும் குதிரை வாகனத்தில் பெருமாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகனும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர்.

    தொடர்ந்து, பள்ளியறை பூஜை, திருக்கல்யாண பொதுவிருந்து போன்றவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர் பேரவை தலைவர் கோபி தலைமையில் பக்தர்கள் செய்து இருந்தனர்.
    மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
    சிவபெருமானின் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கும் நடைபெற்ற சிறப்புமிகு இடம் மதுரை. ஆனாலும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான். ஏனெனில் இங்கு மீனாட்சியின் அரசாட்சியே நடக்கிறது.

    குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் மதுரையை ஆண்டான். அவனுக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். இதையடுத்து யாக குண்டத்தில் இருந்து அம்பாள், மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிட்டு அழைத்தனர். மீன் போன்ற கண்களை கொண்டவன் என்பதால் ‘மீனாட்சி’ என்றும் பெயர் பெற்றாள். மலையத்துவஜ பாண்டியனுக்கு ஒரே மகள் என்பதால், உரிய வயது வந்ததும், மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணை ஏறினாள்.

    தன் தேசத்தை விரிவுபடுத்த எண்ணிய மீனாட்சி, திக்விஜயம் மேற்கொண்டாள். தன்னை எதிர்த்த மன்னர்களை எல்லாம் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் கூட வந்தது. வெற்றியின் மீது இன்னும் அடங்காத தாகம் கொண்ட மீனாட்சி, நேராக கயிலை மலைக்குச் சென்றாள். தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை, சிவபெருமான் நேருக்கு நேராக கண்ணை நோக்கினார். அதே போல் மீனாட்சியும் சிவபெருமானை பார்த்த நொடியில், மீனாட்சிக்குள் இருந்த பெண்ைம விழித்து, நாணம் குடிகொண்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிய காரணத்தால் தான், சிவபெருமானுக்கு ‘சொக்கநாதர்’ என்ற பெயர் வந்தது. அதோடு எப்போதும் சுடுகாட்டு சாம்பல் பூசி, மண்டை ஓடு மாலை அணிந்து காணப்படும் ஈசன், மீனாட்சிக்காக சுந்தரனாய் காட்சி தந்ததால், ‘சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார்.

    மதுரைக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக, மீனாட்சிக்கு ஈசன் வாக்கு கொடுத்தார். அதன்படி திருமால், பிரம்மா, தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    இங்கு மீனாட்சி அம்மன் சன்னிதி எதிரில் பொற்றாமரை குளத்தின் அருகில் ‘மடப்பள்ளி சாம்பல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு சிறிது எடுத்துச்சென்று ‘மந்திரமாவது நீறு' என்னும் இத்தல சம்பந்தரின் பதிகம் பாடி இந்த மடப்பள்ளி சாம்பலை உடலில் தொடர்ந்து பூசிவந்தால் வெப்பு நோய்கள், அம்மை நோய்கள், பிற உடல் உபாதைகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சித்திரை மாதம் வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாட்கள் விழா நடைபெறும். 8-ம் நாள் இரவில் ‘மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்' 9-ம் நாள் இரவில் ‘மீனாட்சி திக்விஜயம்', பத்தாம் நாள் காலையில் ‘மீனாட்சி திருக்கல்யாணம்' நடக்கிறது.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புது தாலி அணிந்து கொண்டனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள், வீதிஉலா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

    இதையொட்டி காலை 7 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 8 மணியளவில் நடராஜர்-சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கேடயத்தில் வீதிஉலா தொடங்கியது. இந்த வீதிஉலா நகரின் ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது.

    அதனைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனை கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சிவாச்சாரியார் சுரேஷ் நடத்தினர். இதில் முதல் வைபவமாக மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இதில் சுவாமி பத்மகிரீசுவரர் மணக்கோலத்தில் கேடயத்தில் தேரடி வீதியில் வலம் வந்தார். அதன்பிறகு அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரர் மாலை மாற்றுதல் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் பூஜைகள் நடைபெற்று இரவு 8 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அப்போது ஏராளமான பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி புது தாலி அணிந்து கொண்டனர். அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் வேலுச்சாமி, கந்தசாமி மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
    ×