search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை 8 -1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி வெண்கலத்தை வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

    இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின்ர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோல் அடித்தனர்.

    இறுதியில், 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Belgium #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் வீரர் டாம் பூன் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 19வது நிமிடத்திலும் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்டு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். 37வது நிமிடத்தில் செட்ரிக் சார்ப்லியர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, ஆட்டத்தின் 45 மற்றும் 50வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் தலா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் செபாஸ்டியன் டாகியர் ஒரு கோல் அடித்தார்.

    பெல்ஜியம் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 6 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  #HockeyWorldCup2018 #Belgium #England
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 3- 2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து. #HockeyWorldCup2018 #England #Argentina
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    முதல் காலிறுதியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் முதல் கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பாரி மிடில்டன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால், 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 

    இதற்கு பதிலடியாக, இங்கிலாந்தின் மற்றொரு வீரரான ஹாரி மார்டின் 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவும், பிரான்சும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #England #Argentina
    தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்து உள்ளது. #VijayMallya #VijayMallyaextradition
    புதுடெல்லி:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வந்தது. இங்கிலாந்து கோர்ட்டு நேற்று முன்தினம் அளித்த பரபரப்பு தீர்ப்பில், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பா.ஜ.க. தேசிய செயலாளர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்” என பாராட்டு தெரிவித்தார்.

    அதே சமயம் தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா கூறுகையில், “இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு உள்ளது” என்றார்.

    இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டு அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எங்களுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

    மிக விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய் மல்லையாவுக்கு எதிரான கடன் மோசடி வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட்டில் விஜய் மல்லையாவின் வக்கீல் நேற்று ஆஜராகி, தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க கோரும் அமலாக்க துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் வாதிடுகையில், “அமலாக்க துறை கூறுவது போல விஜய் மல்லையா இந்தியாவை விட்டு ரகசியமாக தப்பவில்லை. அவர் வெளிநாடு வாழ் இந்தியர். லண்டனில் அவர் தங்கியிருக்கும் இடம் அனைவருக்கும் தெரியும்” என்றார்.  #VijayMallya #VijayMallyaextradition

    பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா, சூயல்லா, எஸ்தர் மெக்வே ஆகிய 4 மந்திரிகள் பதவி விலகினார்கள்.

    இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி இப்போது பதவி விலகி உள்ளார். அவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ஆவார்.



    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் நிலையில், கலிலியோ செயற்கை கோள் திட்டத்தின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கூறி விட்டது. இதை தெரசா மேயும் உறுதி செய்துள்ளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இப்போது மந்திரி சாம் கியிம் பதவி விலகி உள்ளார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே வரைவு திட்டம் வெளியிட்டதில் இருந்து பதவி விலகியுள்ள 7-வது மந்திரி சாம் கியிம் ஆவார்.  #EUBrexitdeal #DraftBrexitdeal #Britishministerresigns #SamGyimah
    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #womenst20worldcup
    ஆன்டிகுவா:

    6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இருந்தன.

    உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகவும், இங்கிலாந்து 2-வது தடவையாகவும் கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.  #womenst20worldcup
    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

     

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. ஹீலி 46 ரன்னும், லென்னிங் 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 17.3 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 3 முறை சாம்பியனான (2010, 2012, 2014) ஆஸ்திரேலியா 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த (2016) உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றதற்கு ஆஸ்திரேலியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இதையடுத்து சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரடிப்படி வருகிற 25-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    ஆறாவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.



    இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார்.  ரோட்ரிகஸ் 26 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. துவக்க ஜோடி வியாட்-பீமான்ட் ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் இணைந்த ஜோனஸ்-சிவர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

    வெற்றிபெற ஒரு ரன் தேவை என்ற நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜோனஸ். ஜோனஸ் 53 ரன்களுடனும், சிவர் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய அரையிறுதிப் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 113 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
    6-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

    இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. 

    இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கணைகளாக பாட்டியா, மந்தானா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மந்தானா 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 34 (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோட்ரிகஸ், கவுர் சற்று நிதானமாக விளையாட 19.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 113 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி விளையாடி வருகிறது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND

    மகளிர் 20 ஓவர் உலககோப்பை அரையிறுதியில் தகுதி பெற்ற இந்தியா - இங்கிலாந்து, வெ.இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதுகின்றனர். #WomensT20WorldCup
    6-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    மகளிர் உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் மோதிய 4 ‘லீக்‘ ஆட்டங்களிலும் வென்று இருந்தது. இதனால் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. #WomensT20WorldCup
    ×