என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96109
நீங்கள் தேடியது "உயர்கல்வித்துறை"
செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும்.
சென்னை :
கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அதற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் அது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடன் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும்.
செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையாக உள்ள நிறுவனங்களில் குறிப்பாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்து, திருத்தப்பட்ட அட்டவணையை இந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பின்பற்றும்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் சேர்த்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்கலாம்...பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கல்லூரி முதல்வர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எட். தேர்வும், அசிரியர் தகுதித் தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருந்த நிலையில், தற்போது பி.எட். தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.
விண்ணப்பத்திற்கான காலம் முடிவடைந்த பின்னர், ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்தது.
ஜூன் 8-ந்தேதி பி.எட் இறுதி ஆண்டு தேர்வின் ஒரு தாளுக்கான பரீட்சையும் நடைபெற இருக்கிறது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், பி.எட். இறுதி ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி ஜூன் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவ-மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

×

X