என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96136
நீங்கள் தேடியது "கோவேக்சின்"
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சர்வதேச பயணிகள் பிரிட்டனுக்கு வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளித்து. ஆனால், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் இருந்தது.
இதனால் உலக நாடுகள் பலவும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டவர்களை, தடுப்பூசி போடாதவர்களாகவே கருதி தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த மாத தொடக்கத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது. இதை தொடர்ந்து, ‘கோவேக்சின்’ தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.
அவ்வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்ட நபர்கள் பிரிட்டனுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் உள்ள தடுப்பூசிகளை அரசாங்கம் அங்கீகரிக்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சினோவாக், சினோபார்ம் பீஜிங் மற்றும் கோவேக்சின் ஆகியவை, பிரிட்டனுக்கு வரும் பயணத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு பயனளிக்கும்.
முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள், புறப்படுவதற்கு முன் பிசிஆர் சோதனை அல்லது பயணிகள் இருப்பிடப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சுய-தனிமைப்படுத்தல் இல்லாமல் பிரிட்டனுக்கு பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியர்கள் இதன்மூலம் பயனடைவார்கள்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் உட்பட, முழுமையாக தடுப்பூசி செலுத்திய மற்ற பயணிகளைப் போலவே, அவர்கள் பிரிட்டனுக்கு வந்தவுடன் பிசிஆர் அல்லது லேட்டரல் ஃப்ளோ சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை செய்யவேண்டும்.
இன்று முதல் சிவப்பு பட்டியலில் இல்லாத நாட்டிலிருந்து வரும் அனைத்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பயண விதிகளையும் எளிதாக்குவதாக பிரிட்டன் அரசு கூறி உள்ளது. எனவே, அவர்கள் வருகையின் போது சுய-தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். அவர்கள் வந்த பிறகு லேட்டரல் ப்ளோ பரிசோதனையை மட்டுமே எடுக்க வேண்டும். இதில் பாசிட்டிவ் என வந்தால் உறுதி செய்வதற்கு பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.
இதையும் படியுங்கள்... மூன்று தலைநகரம் உருவாக்குவதற்கான சட்டத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு
இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 116 கோடியை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டோர் பிற நாடுகளுக்கு பயணிப்பதில் உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்க 110 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டு மக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், குவைத், ஈரான், கத்தார் உள்பட 110 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும். பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை உலக அளவில் 96 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மனாமா:
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.
உலக சுகாதார மையம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை கடந்த வாரம் வழங்கியது. இங்கிலாந்து, ஹாங்காங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தின் அனுமதியைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த தரவுகளின் அடிப்படையில், தங்கள் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திட அனுமதி அளிக்கப்படுகிறது என பஹ்ரைன் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு: பின்னணி என்ன?
இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 109 கோடியைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டோர் பிற நாடுகளுக்கு பயணிப்பதில் உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்க 96 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும்.
கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டு மக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா வழங்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், குவைத், ஈரான், கத்தார் உள்பட 96 நாடுகள் இப்பட்டியலில் அடங்கும். பிற நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு
இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கடந்த வாரம் கிடைத்தது.
இந்நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்தது.
இதுதொடர்பாக, இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 முதல் 2 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 22-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...வங்காளதேசம் முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
சுமார் 526 சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 17 நாடுகள் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரி உள்ளது. இத்தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமான ஒகுஜென் தெரிவித்துள்ளது.
2 வயது முதல் 18 வயது வரை உள்ள சுமார் 526 சிறுவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ததில், நல்ல பலன் அளித்துள்ளது. எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
புதுடெல்லி:
உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 20 மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை திறந்துள்ளது. அதில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்ததற்காக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு பிந்தைய நட்புறவில் இது ஒரு முக்கியமான படியாகும் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.30 லட்சம் கோடியைத் தாண்டியது
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X