search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து போட்டியா?

    பதில்:- நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நான் கூறியதில் இருந்தே முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு இடமில்லை என்றுதான் அர்த்தம். நாங்கள் முதலில் சொன்னதில் இருந்து மாறுபடவே இல்லை. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி. மக்களுடனான கூட்டணி, மக்கள் ஆட்சி வரப்போகும் நேரத்தில் மக்களின் கூட்டணியில் இருப்பதுதான் நியாயம்.

    கே:- அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்களது தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

    ப:- நல்ல தேர்தல் அறிக்கையை கொடுப்போம். அதை நாங்கள் படித்துப் பார்க்கும்போது மனசாட்சியை தொட்டு இதை வெளியே படிக்கலாமா? இதில் எத்தனை பொய் இருக்கிறது? எத்தனை சாத்தியம்? இது நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்குறுதிகள்தானா? என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புத்தகமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

    கே:- நேர்க்காணல் எப்போது?

    ப:- வருகிற 11,12,13,14,15 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும். 1137 மனு வந்திருக்கிறது. அதில் இருந்து நல்லதை தேர்வு செய்வோம். ஒளிவீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதற்கான ஏற்பாடுகள் இந்த 5 நாளில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்து, யார் யார் எங்கெங்கே என்று உங்களுக்கு பெருமையுடன் மார்தட்டி சொல்வோம்.

    கே:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட வில்லையே?

    ப:- சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.

    நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

    கே:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?

    ப:- அதைப்பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக நிற்கிறது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முழுமையாக அந்த வியாபாரத்துக்கு போய் விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும்.

    படிப்படியாக என்பதுதான் நடக்கக்கூடிய வி‌ஷயம். அரசு ஆணை மட்டும் போதாது. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது கெட்ட பழக்கம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு எந்த அரசாக இருந்தாலும் வேலை எளிதாகிவிடும்.

    கே:- உங்களின் நெருங்கிய நண்பர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். நண்பர் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?

    ப:- ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய வி‌ஷயம். கேட்காமல் பெறுவதும் பெரிய வி‌ஷயம்.

    கே:- ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறீர்களா?

    ப:- நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

    கே:- 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

    ப:- கண்டிப்பாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?

    ப:- கண்டிப்பாக! எங்கே என்பதை நான் சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக  அவர் ஆலோசித்தார். வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    எங்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள் உள்ளனர். நான் வக்கீலாக வேண்டும் என்று எனது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அது நடக்கவில்லை. ஆனால் இன்று அந்த குறையை போக்கும் விதத்தில் எனது கட்சியை சேர்ந்த வக்கீல்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இருக்கிறீர்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் கொண்ட வக்கீல்கள் குழு அமைக்கப்படும். எங்காவது ஓரிரு இடங்களில் பிரச்சனை நடந்தால் ஒரே நேரத்தில் அவற்றை தீர்ப்பதற்காக 6 பேர் குழுவுக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்படும்.

    அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சென்று தீர்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று நமது கட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth
    மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரின் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பதிவு செய்துள்ளது.

    டெர்பி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.



    இந்த அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.



    விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு சமூக வலைதளங்களின் மீம்ஸ்தான் இன்றைய முக்கிய பிரசாரமாக விளங்குகிறது. அந்த வகையில் போலீசார் தொடங்கி பலரும் மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு செல்லவும், விதி முறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தை 100 தடவைக்கும் மேலாக பார்த்திருப்பதாக பிரபல இசையமைப்பாளர் கூறியிருக்கிறார். #Petta
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘பேட்ட’ படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்கள். இதற்கு இசையமைப்பாளர் அனிருத், பின்னணி இசையமைக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை 100 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். 



    மேலும் ரசிகர்கள் பலர் தாங்கள் எத்தனை முறை படத்தை பார்த்தார்கள் என்பதையும் பதிவு செய்து வருகிறார்கள். #Petta #Rajini #Rajinikanth
    பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் போது விஜய் சேதுபதிக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார். #Petta #VijaySethupathi #Rajinikanth #Rajini
    ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதிக்கு ரஜினி அறிவுரை வழங்கியுள்ளார். 

    ”படங்கள் எல்லாம் இப்போதே ரொம்ப தயாரிக்காதீங்க. நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போது தான் நடிக்க முடியும். படங்கள் எல்லாம் பின்னர் தயாரிக்கலாம்” என்று விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளார் ரஜினி.



    ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய்சேதுபதி. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தை அவரே தயாரிப்பதாக இருந்தது. தற்போது, அந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கவில்லை. வேறு தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார்கள்.
    பிப்ரவரி மாதம் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, நடிகர் ரஜினிக்கு விஷால் நேரில் சென்று அழைப்பு வைத்திருக்கிறார். #Ilayaraja75 #Rajini
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது இசை சாதனையை பாராட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா-75’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 2, 3-ந்தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

    இது தொடர்பாக விஷால் கூறுகையில், “பிப்ரவரி 2-ந்தேதி அனைத்து மொழி கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழாவாக நடத்தப்படுகிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுசீலா, ஜானகி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுப்போம்” என்றார்.



    இதையடுத்து விஷால் இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ‘இளையராஜா-75’ இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார். இதே போல் மற்ற பிரபலங்களையும் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
    தன்னுடைய அடுத்த படம் பற்றி வரும் வதந்திகளுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #ARMurugaDoss #Rajini #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான படம் ‘சர்கார்’. விஜய் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

    இப்படம் அரசியல் கதையாக இருக்கும் என்றும், படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது இயக்குனர் முருகதாஸ், ‘நான் அடுத்ததாக இயக்கும் படம் ‘நாற்காலி’ இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். 



    இப்படம் பற்றிய முழு தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #ARMurugaDoss
    பேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. #Rajini #Rajinikanth #HappyPongal2019
    ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். தற்போது ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.



    இந்த படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பேட்ட படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களுக்கும், தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Rajini #Pongal
    தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாக கொண்டாடப்படுகிறது.



    திரை நட்சத்திரங்களான பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மனநிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பார்த்து பாராட்டியுள்ளார். #Petta #Rajini #MaheshBabu #Rajinikanth
    ரஜினி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.



    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான படம். அந்த ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரே ஒரு வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்புராஜ் சிறந்த திறமையான இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    பேட்ட படத்தில் என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் பேட்டியளித்துள்ளார். #Rajinikanth #Rajini #Petta
    ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக பலரும் கூறி வருகிறார்கள். 

    இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’ என்றார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார். மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு இன்று சென்னை திரும்பியுள்ளார். #Rajini #Petta 
    இணையதளத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. #Petta #Viswasam
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் இன்று வெளியானது. இவர்களது ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையில், தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.



    பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜும், விஸ்வாசம் படத்தை சிவாவும் இயக்கியுள்ளனர். #Petta #Viswasam
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.

    தமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.



    ஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள். #2Point0 #Rajini
    ×