search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96176"

    நடிகர் கமல்ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார் என்று தமிழருவிமணியன் குற்றம் சாட்டியுள்ளார். #kamal #rajinikanth #tamilaruvimanian

    கோவை:

    காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதில் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது கனவாகவே உள்ளது. டாஸ்மாக் வருவாயை கூட்டுவதில் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பீகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் நினைத்தால் ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டு வர முடியும்.

    ஊழலை பாதுகாக்கும் வகையில் தான் லோக் ஆயுக்தாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த லோக் ஆயுக்தாவை கிழித்து குப்பையில் எறிய வேண்டும். எடப்பாடி அரசு இன்னும் 60 நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பே இல்லை.

    8 வழிச்சாலை மூலம் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறும் என்றால் எப்படி என்பதை விளக்க வேண்டும்.

    ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார். அதில் ரஜினி தெளிவாக உள்ளார். கமல் ஹாசன் அவசர, அவசரமாக கட்சி தொடங்கி, அடிப்படை அமைப்பை கட்டமைக்க முடியாமல் திணறுகிறார். மக்கள் ஆதரவு இருந்தால் தான் எந்த மகத்தான மனிதரும் முதல்-அமைச்சராக முடியும்.

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக 80 சதவீதம் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 20 சதவீதம் பணிகள் முடிவடைந்ததும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். ரஜினிகாந்த் எளிமையான மனிதர். தலைக்கணம் சிறிதும் அவரிடம் இல்லை. கட்சி தொடங்குவது, எப்படி மக்களை சந்திப்பது? தேர்தலை சந்திப்பது உள்ளிட்டவை குறித்து எல்லாம் ரஜினி தான் சொல்வார். 3 மாத இடைவெளி கூட தேர்தலை சந்திக்க ரஜினிக்கு போதுமானது.

    இதுவரை பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை. ரஜினி முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினி தருவார் என நம்புகிறோம். அவருக்கு துணையாக இருப்போம். ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதை முதலில் சொன்னது ரஜினி தான். முள்ளை முள்ளால் எடுப்பது போல, கலைத்துறையில் இருந்து வந்தவர்களால் மலிந்த ஊழலை ரஜினிகாந்த் அகற்றுவார். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார். கமல்ஹாசன் சூப்பர் ஆக்டர். மக்கள் ஆதரவு இருப்பதால் தான் 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் சித்தராமைய்யாவின் ஆட்சிக்கு முன்பு நடைமுறையில் இருந்த லோக் ஆயுக்தாவின் அம்சங்கள் அனைத்தும் உள்ளடங்கிய சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தாவாக தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

    தமிழகமக்கள் வறுமையிலிருந்து விடுபடவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்படவேண்டும். ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடமுடியாது என்றாலும் இந்த ஆட்சி கவிழ்ந்து வேறு ஆட்சி மலர்ந்தாலும் ஓராண்டுக்குள் பூரண மது விலக்கு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப் படவேண்டும்

    எட்டு வழிச்சாலை அமைப்பதன் மூலம் உண்மையில் தமிழகத்தின் பொருளாதாரம் வலுப்பெறும், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றால் பாதிக்கப்படும் மக்களிடம் முறையாக விளக்கம் அளித்து எந்த நிலையிலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில் மிக உயர்ந்த இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்கு இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இயன்றவரை இந்தத் திட்டத்தையே கைவிடுவது நல்லது.

    அ.திமு.க., திமு.க. ஆகிய கட்சிகளின் பிடியிலிருந்தும் தமிழகத்தை முற்றாக விடுவிப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும். குட்கா ஊழலிலிருந்து சமீபத்திய முட்டை ஊழல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் ஊழலுக்கு உற்சவம் நடக்கும் நிலையில் இந்த ஆட்சிக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைத்து மொத்தமாக மூட்டை கட்டி கோட்டையிலிருந்து வெளியேற்றுவதுதான் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி . உண்மையும் நேர்மையும் எளிமையும் நிறைந்த ஒரு நல்ல தலைமைக்குரிய பண்புகளைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தொடங்க இருக்கும் அரசியல் கட்சிக்கு மக்கள் பேராதரவை நல்கிஅவரை முதல்வராக்க உறுதியேற்க வேண்டும். 

    ரஜினிகாந்த் மூலம் ஊழலின் நிழல்படாத ஓர் உயர்ந்த ஆட்சியும், வெளிப்படைத்தன்மை கொண்ட சிறந்த நிர்வாக மும் தமிழகத்திற்கு வந்து வாய்க்கும் என்று காந்திய மக்கள் இயக்கம் அழுத்தமாக நம்புகின்றது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #kamal #rajinikanth #tamilaruvimanian

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை விஜய்சேதுபதி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.

    விஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார். இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோ‌ஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.

    அவர் நடிக்கும் மற்ற படங்களான சீதக்காதி மற்றும் 96 படங்களின் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோ‌ஷன் தொடங்கி உள்ளது.



    இன்னும் சில நாட்கள் இந்த படங்களின் விளம்பர வேலைகளை முடித்துவிட்டு ரஜினி பட டீமுடன் சேர இருக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நடிகரின் 4 படங்கள் விளம்பரப்படுத்தப்படுவது சமீபகாலங்களில் எந்த கதாநாயகருக்கும் நடக்காதது.
    ஏ.சி.சண்முகத்தின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறியிருக்கிறார். #Rajini
    கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். 

    பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டார். சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்று விட்டார்.



    உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்றார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, டார்ஜிலிங்கை தொடர்ந்து அடுத்ததாக காசிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajini
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூனில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

    அது முடிந்த பின்னர் அடுத்து மதுரைக்கு செல்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் அந்த திட்டம் மாறி இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் காசி நகரில் படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறார்கள்.

    20 நாட்கள் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வருகிறது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சங்கர், ‘கிராபிக்ஸ் நிறுவனங்கள் இறுதியாக பணி எப்போது முடியும் என்று கூறிவிட்டார்கள். எனவே படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும்’ என்று அறிவித்து இருக்கிறார். அது மழைக்காலம் ஆயிற்றே என்ற வருத்தம் இருந்தாலும் ரஜினி பிறந்தநாளை ஒட்டி படம் வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
    சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Rajinikanth #2PointO
    ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

    இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.



    கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். #Rajinikanth #2PointO
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக தன்னை வைத்து மூன்று முறை இயக்கிய பிரபல இயக்குனருடன் இணைய இருக்கிறார். #Rajini
    ரஜினி அரசியலில் வேகம் எடுத்தாலும் சினிமாவை விடாமல் நடித்து வருகிறார். 2.0 கிராபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூத்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக செய்தி வந்துள்ளது.



    ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் இணைந்து இருந்தார்கள். ரஜினிக்கு ஏற்ற கதையை இயக்க கே.எஸ்.ரவிக்குமாரே பொருத்தமானவர் என்று இப்போதே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.
    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்து விட்டு நாளை இரவு சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த். #Rajini #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மற்றும் அங்குள்ள மலைப் பகுதிகளில் நடந்தது.

    இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் நாளை நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    அரசியல் களத்தில் குதித்துள்ள ரஜினிகாந்த் தனது கட்சிக்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்.

    உறுப்பினர்களை சேர்ப்பது, மக்கள் பணியில் ஈடுபடுவது, கட்சி வளர்ப்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நிர்வாகிகள் கட்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ரஜினி ‘காலா’ படப்பிடிப்பில் இருந்ததால் அரசியலில் வேகம் குறைந்தது. எந்தவித கருத்தும் கூறாமல் படப்பிடிப்பில் நடித்து வந்தார்.



    அதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் அளித்த பேட்டியை பலர் விமர்சனம் செய்தனர். அதற்கு அந்த கட்சி நிர்வாகிகளும் பதில் அளித்தனர்.

    அதன்பிறகு ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். அவர் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளதால் அரசியல் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் மீண்டும் ரஜினி வேகம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. குறிப்பாக தி.மு.க. செயல்தலைவர் நிறைய விமர்சனங்களை முன்வைக்கிறார். கவர்னர் விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லி வருகிறார். தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர்ராவ் இருந்த சமயத்தில், ‘நிலையான கவர்னர் தேவை’ என்று கருத்து கூறினார். தற்போது நிலையான கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்தும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறிவருகிறார்.

    கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர் ஆவார். அதன்படி தான் தனது கடமையை ஆற்றுகிறார். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி தான் கவர்னர் செயல்படுகிறார். அதே அரசியலைப்பு சட்டத்துக்குட்பட்டு தான் அரசும் செயல்படுகிறது.

    ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்தால் புரட்சி ஏற்படும் என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றுமட்டும் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ரஜினியும், கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்காது, நிச்சயம் வறட்சி தான் ஏற்படும்.

    தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. எனும் மக்களாட்சி. இந்த ஆட்சி என்றும் தொடரும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும். யார் ஒன்று சேர்ந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #kamal #rajinikanth
    அரசியலில் நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #Rajini #Kamal #Vishal
    தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், மலையாள நடிகர் லால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படம் வெற்றி பெற்றது. தற்போது அதே கூட்டணியில் மீண்டும் சண்டக்கோழி-2 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் காட்சிகள், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

    படப்பிடிப்பின் இடையே நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து?

    பதில்:- மிக்க மகிழ்ச்சியான விஷயம். தமிழ்த்திரை உலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம். அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை தமிழ்த்திரை உலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:- கமல்ஹாசன், ரஜினி அரசியல் பற்றி?

    விஷால்:- ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் திரையுலகினரும், புதியவர்களும் அதிக அளவில் போட்டியிடுவார்கள்.



    கேள்வி:- திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து உங்கள் நடவடிக்கைகள் என்ன?

    விஷால்:- பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார்கள். பொதுமக்கள் திரையரங்குக்கு சென்று பார்த்தால் தான் அந்த பணத்தை தயாரிப்பாளர் எடுக்க முடியும். ஆனால் திருட்டு வீடியோ வெளியிடுவோர், அது தவறு என்று தெரிந்தும் அந்த தொழிலை செய்து வருகிறார்கள். விரைவில் இதற்கு நல்ல முடிவு ஏற்படும்.

    கேள்வி:- உங்கள் திரைப்படங்களில் நாடக நடிகர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறீர்களே ஏன்?

    பதில்:- அழிந்து வரும் கலையாக நாடகம் உள்ளது. திரைப்பட நடிகர்களின் ஆணிவேராக இருப்பவர்கள் நாடக நடிகர்களே. அதனால் தான் என்னுடைய திரைப்படங்களில் அப்பகுதியில் உள்ள நாடக நடிகர்களை பயன்படுத்தி வருகிறேன்.



    கேள்வி- உங்களின் திருமணம் எப்போது நடக்கும்?

    பதில்:- நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது சொன்னது தான். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின்பு தான் எனது திருமணம். அதுபோல 2019-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறந்து முடித்தவுடன், எனது திருமணம் தமிழக மக்கள் ஆசியுடன் நடக்கும்.

    கேள்வி:- சண்டக்கோழி-2 படத்தின் சிறப்பு என்ன?

    பதில்:- லிங்குசாமியை பொறுத்தவரை குடும்பத்துடன் வந்து தன்னுடைய படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். சண்டக்கோழி படம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டி கிராமங்களில் கூட எனது பெயர் தெரியும் அளவுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இப்போது 12 ஆண்டுகள் கழித்து, சண்டக்கோழி-2 படம் வெளிவருகிறது. சண்டக்கோழியை முதல் பாகத்தைவிட இந்த படம் எனக்கு அதிக அளவில் பெயர் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். 
    ரஜினி மற்றும் கமல் படத்தை இயக்கிய இயக்குனரும், சின்னப்ப தேவரின் மருமகனுமான ஆர்.தியாகராஜன் இன்று காலமானார். #RIPRThiyagarajan
    ரஜினிகாந்த் நடித்த ‘ரங்கா’, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தையும், கமல்ஹாசன் நடித்த ‘ராம் லக்ஷ்மனன்’, ‘தாய் இல்லாமல் நான் இல்லை’ படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் இவர் காலமானார். இவருக்கு வேல்முருகா என்ற மகனும், சண்முக வடிவு என்ற மகளும் உள்ளனர்.

    ஆர்.தியாகராஜன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகனும் ஆவார். இவரை தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் என்று பலரும் அழைத்து வருவார்கள். 



    இவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின்சார மயான பூமியில் நடக்கவுள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற இருக்கிறார். #Rajini #Anirudh
    காலா படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பி டார்ஜலிங், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அனிருத் பாட வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு எஸ்.பி.பி.தான் அறிமுகப் பாடலை பாடிவந்தார்.

    கபாலி, காலா படங்களில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடி இருந்தார். இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானாலும் எஸ்.பி.பி. பாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தார்கள். இதனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் எஸ்.பி.பி.யை பாட வைக்க இருக்கிறார் அனிருத்.

    இரண்டு படங்களுக்குப் பிறகு எஸ்.பி.பி. குரலில் ரஜினி ஆடுவதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
    காலா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிக்காக பிரபல இயக்குனர்கள் இரண்டு பேர் படம் இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். #Kaala #Rajinikanth
    ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கிய இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. காலா பட வெளியீட்டுக்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டார் ரஜினி.

    அரசியலில் வேகம் எடுத்த ரஜினி அதை அப்படியே விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்றது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அடுத்து இன்னும் 2 படங்களில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

    இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரிடமும் கதை கேட்டு காத்திருக்க சொல்லி இருக்கிறார் ரஜினி. வெற்றிமாறன் கூறிய கதை வடசென்னையை மையப்படுத்திய ஒரு கல்ட் கதை.



    முருகதாஸ் கூறியது அரசியல் கதை. முதலில் முருகதாஸ் இயக்கத்திலும் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் திரும்பும் ரஜினி சில நாட்கள் கட்சி பணிகளை கவனித்துவிட்டு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது.
    ×