search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழந்தார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழப்பு

    கரூர்.

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 32). டிரைவரான இவர், வெள்ளியணை-ஜெகதாபி சாலை திருமலை நாதன்பட்டி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் ஜோதீஸ்வரன் தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியானார்
    • நுங்கு வெட்டுவதற்காக ஏறியபோது விபரீதம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள பறையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), டிரைவர். இவர் திருமயம் தாமரைக்கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.
    • சிக்னல் கம்பத்தில் மோதிய வாலிபர் தூக்கி வீசப்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இறந்த அந்த நபர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார்.

    நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வரும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்த அந்த வாலிபர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டின் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்ற சிக்னல் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் உயிரிழந்த வாலிபரின் முகவரி குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலியானார்
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 23). தச்சுதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கீரனூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர்.
    • அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர். அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேலு மற்றும் ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வடிவேலு மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்தார்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதியதில் உயிரிழப்பு
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்.

    உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி லெட்சுமி (வயது 80). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் லெட்சுமி வீட்டை விட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை கடந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லெட்சுமி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பொதும்பு வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (24). இவர் இவர் பைக்கில் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ் மோதி யது. இதில் படுகாயம் அடைந்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவரான அலங்காநல்லூர் முருகன் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அருண்குமார் (28).இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பைக்கை ஓட்டிச் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்த பகுதியில் விளம்பர பலகை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் படுகாயமடைந்தார்.

    அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). விவசாயி. இவரது உறவினர் ஒருவருக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி சுந்தரம், தனது மகள் மதுமதி (29), மீனாட்சி சுந்தரத்தின் பேத்திகள் 2 பேர் ஆகிய 4 பேருடன் திருவாரூருக்கு புறப்பட்டார்.

    திருவாரூர்-மன்னார்குடி சாலையில் சவளக்காரன் என்ற இடத்தில் சென்றபோது திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேத்திகள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மகள் மதுமதி உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலியானார்
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்புமணி (வயது 55). இவர் தண்ணீர் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி டிரைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி செல்வியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வி, அன்புமணியை பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் சிறுவாச்சூர் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வயலில் லாரிக்கு தண்ணீர் ஏற்றும் குழாயை எடுத்தபோது அன்புமணி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக செல்விக்கு இரவில் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த அன்புமணியை தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அன்புமணியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அன்புமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வயலில் உள்ள மின் மோட்டாருக்கான சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்நடை, கோழிகள் பலி
    • அதிகபட்சமாக பெருங்களூரில் மழை பதிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-86, புதுக்கோட்டை-12, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-10, மழையூர்-2.60, கீழணை-57.80, திருமயம்-63, அரிமளம்-61.20, அறந்தாங்கி-9.40, ஆயிங்குடி-4, மீமிசல்21.20, ஆவுடையார்கோவில்-8, மணமேல்குடி-11, இலுப்பூர்-8.40, குடுமியான்மலை-15, அன்னவாசல்-4, விராலிமலை-6, உடையாளிப்பட்டி-41, கீரனூர்-19, பொன்னமராவதி-8.20, காரையூர்-30.60. இந்த மழையில் 3 வீடுகள் சேதமடைந்தது. மேலும் 7 கோழிகள், 1 மாடு, 3 கன்றுக்குட்டிகள் செத்தன.

    ×