search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • ரமேஷ் (வயது36) இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரமேஷ் (வயது36) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது இதில் நெஞ்சு பகுதி மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பைக் மோதி வியாபாரி பலியானார்
    • பேப்பர் வியாபாரம் செய்து வந்தார்.

    கரூர்:

    குளித்தலை அடுத்த வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). இவர் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் மேல பஞ்சப்பட்டி கீரனுார் ரோட்டில் தனியார் கார்மென்ட்ஸ் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பெரிய சேங்கல் தெற்கு தெருவை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீக்குளித்த கூலி தொழிலாளி பலியானார்.
    • மது போதையில் நடந்த சம்பவம்

    கரூர்:

    கரூர் பொரிக்காரத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது49). கூலித் தொழிலாளி. இவர் இதே தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள கண்ணன் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28-ம்தேதி வீட்டுக்குள் சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாடகை வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீ்ஸ்காரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதையடுத்து உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய நிர்வாகத்தை கண்டித்தும், இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்து விரைந்து வந்த வந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர ஆவணம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

    இதற்கிடையில் தமிழக முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, பைபாஸ் ரோடு சந்திப்பில் வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, அதி வேகமாக வந்த கார் மோதியது.
    • இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை வரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.   இந்நிலையில், இன்று காலை மங்கலம்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை - புல்லூர் சாலை மற்றும் பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே வந்துக் கொண்டிருந்த ஆட்டோவின் மீது, புதிய பைபாஸ் சாலையில் அதி வேகமாக வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டோ டிரைவர் உள்பட மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், விபத்தில் இறந்த முதியவர் யார்?, படுகாயமடைந்தவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்ட்ரிங் வேலை செய்த போது பரிதாபம்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர்,

    குளித்தலை அருகே சென்ட்ரிங் வேலை செய்த போது மிஷினில் கை அறுப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி மருத்துவமனையில் பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா முத்தகபுடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிங்காரம் (வயது 61). இதுவரை திருமணமாகாத இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அன்று சின்னபனையூரில் வீரம் மாள் என்பவரின் தொகுப்பு வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மிஷினில் அறுக்கும் போது எதிர்பாராத விதமாக இடது கட்டை விரல் மற்றும் இடது கால் சுண்டு விரலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிங்காரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் அவரின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார்.
    • சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சிமாவட்டம் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வர் தங்கராசு. சோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சங்கர் (30) இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டுச் வெளியே சென்றார். இந்த நிலையில் சார்பதி வாளர் அலுவலகம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்து போனவர் சின்னசேலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் இன்று காலை கடன் கழிக்க தண்டவாளத்தை கடக்கும் போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ெரயில் மோதி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்தது
    • மருத்துவமனை கொண்டு செல்லும்முன்பே இறந்த பரிதாபம்

    புதுக்கோட்டை.

    இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாயி. இவர் அருகில் உள்ள தன்னங்குடி குளம் அருகே நேற்று முன்தினம் ஆடுமேய்த்து கொண்டிருந்தார். அப்போது சுரேசை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுரேஷ் மனைவி போதும் பொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார்.
    • சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். ப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி  சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    விபத்துக்குள்ளான லாரி அதே சாலையில் ஒரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார்.
    • தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.

    நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இங்கு வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள்.

    அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார். பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார்.

    தந்தையும், மகளும் அடுத்தடுத்த பாறையில் மோதி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    ஏற்காடு போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    2 உயிர்களை பலி வாங்கிய இந்த நல்லூர் நீர்வீழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இதர காலங்களில் பாறைகளில் பாசி படிந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சி பாதுகாப்பில்லாதது என்பது, ஏற்காடு பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இந்த இடத்தின் நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இதனால் அவர்கள் பாறை மீது ஏறி நீராடி மகிழ முற்படும் போது, நீர்வரத்து காரணமாக பாறையின் மேற்பரப்பில் படிந்துள்ள பாசி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் வழுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

    பாதுகாப்பில்லாத காட்டுப் பகுதிக்கு நடுவில் இந்த இடம் அமைந்துள்ளதால், பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவு. யாராவது ஆபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினாலும், பள்ளத்தாக்கு பகுதியென்பதாலும், தண்ணீர் பாறைகளின் மீதிருந்து ஆக்ரோசமாக விழுவதாலும், அந்த இரைச்சலில் அபாயக்குரல் கேட்பதற்கு வாய்ப்பில்லை.

    எனவே பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையிலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின்பேரில் அருவி, நீர்நிலைகளை கூகுள் மேப்பில் தேடி செல்லும் பெற்றோர்கள் அந்த அருவி, தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

    • வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மணிகண்டன் சென்றதாக கூறப்படுகிறது.
    • மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). பெயிண்டர். இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சுரேஷ் (27) என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வீரவநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு சேரன்மகாதேவியை கடந்து மேல கூனியூர் மீன் பண்ணை பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றார். அப்போது அங்கு பாலம் அமைக்கும் பணிக்காக ஒருவழியில் பாதை அடைக்கப்பட்டு மற்றொரு பாதை வழியாக இருபுறமும் செல்லும் வாகனங்கள் செல்கிற வகையில் சாலை திறக்கப்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை.

    இதனால் அந்த இடத்தில் அவர் திடீரென பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×