search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    தேனி மாவட்டம் கோவில்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் அதே கல்லூரியில் படிக்கும் ஆதித்யா என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் தனது நண்பரான கல்லூரி மாணவர் திருவாரூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை பின்னால் அமர வைத்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கடைக்கு டீக்குடிக்க சென்றார்.

    பின்னர் 2 பேரும் நள்ளிரவு 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஹரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செல்வகுமார் (20). சம்பவத்தன்று இவர் சுல்தான் பேட்டை- வடவேடம்பட்டி ரோட்டில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்துது சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    மதுரை

    ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சுலோசனா(60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசோக்நகரில் உள்ள இவரது மகள் ராமதிலகம் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    அங்கிருந்து சுலோசனாவும், ராமதிலகமும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சென்றனர். ராமதிலகம் வாகனத்தை ஓட்டிவந்தார். அப்ேபாது எதிர்திசையில் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த சுலோசனா படுகாயடைமந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பெல் பகுதியில் பைக் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவர் கணேசபுரத்தில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பெருமாள் பலத்த காயமடைந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் பெருமாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பால் ஆதம் (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
    • கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் (வயது38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா(30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(5), தேஜாஸ்ரீ(2), மற்றும் 4 மாத ஆண் கைக்குழந்தை இருந்தது.

    ரத்னா தனது கடைசி மகன் பிரசவத்தையொட்டி 2 மகள்களுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவருடன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

     காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்பு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிறுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், மிரட்டு நிலை அருகே தெற்குபொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43)விவசாயி. இவர் சம்பவத்தன்று தெற்குபொன்னம்பட்டியில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மருதன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

    இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    • முசிறி அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    முசிறி,

    சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவரது மகன் சரவணன் (31). இவர் முசிறியை அடுத்த சாலப்பட்டியில் தனது உறவினர் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் தண்டலைப்புத்தூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் எதிரே கிடந்த சிமெண்ட் கல்லில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
    • இந்த விபத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்:

    தென்னிலை அருகே உள்ள வைரமடையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தென்னிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரூரில் இருந்து தென்னிலை நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபி என்ற நாகராஜ் (வயது 45), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு குரும்பலூர் பழைய சினிமா தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ் நாகராஜ் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நாகராஜ் மீது அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 63), வீரமணி (54), சடையாண்டி ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (40). இவர்கள் பங்குதாரராக சேர்ந்து பூத நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் சதீஷ்குமார் (41), நடேசன் (50), பானுமதி (60) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் காயமடைந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை நேற்று சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் இறந்து போன 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

    இந்த நிலையில் பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மகேஸ்வரிக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கந்தசாமி மற்றும் வீரமணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மகேஸ்வரி நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×