search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்த மனோஜ்பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மனோஜ்பாண்டி (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவன் பலி

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (16). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்கள் இருவரும் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த மனோஜ்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளி பறிக்க ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பனவிளை தாறாவிளையை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ் (வயது52). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம் இவர் தனது வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறினார்.அப்போது எதிர்ப்பாராமல் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து மிக்கேல் ராஜின் மனைவி லதா குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பாபு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 19-ந்தேதி அன்று வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி யுவராணி கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவத்தில் தளி கொத்தநூர் பகுதியை சேர்ந்த நாசம்மா (74) என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முத்தப்பா கொடுத்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியது
    • வாகன விபத்தில் மூதாட்டி பலியானார்

    திருச்சி

    திருச்சி கொட்டப்பட்டு ஜே.கே.நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனது உறவினர் வள்ளி (வயது 70) என்பவருடன் திருச்சி ஒத்தக்கடையில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.தலைமை தபால் நிலையம் காந்தி சிலை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத பஸ் இவர் மீது மோதியது. இதில் மூதாட்டி வள்ளி படுகாயம் அடைந்தார். உடனே அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வள்ளி இறந்தார்.இது குறித்து அவரது உறவினர் காமாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எதிர்பாராத விதமாக விபத்து

    குளித்தலையை அடுத்த, வரவணையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25), லாரி டிரைவர். இவரது தந்தை மணி (55). இவர் தனது இருசக்கர வாகனத்தில் உடையாப்பட்டி -சேங்கல் நெடுஞ்சாலையில், தண்ணீர்பட்டி பிரிவு பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

    மாயனூர் போலீசார் விசாரணை

    கரூர், 

    மாயனூரை அடுத்த, மேட்டுத்திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சின்னப்பதாஸ் (வயது 41). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு தனது பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக, திருக்காம்புலியூரில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஷிப்ட் கார், சின்னப்பதாஸ் பைக் மீது மோதியது. khஇதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்னப்பதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கமலவேணி கொடுத்த புகாரின்படி, கார் டிரைவரான, ஈரோடு மாவட்டம், சித்தோடு, நல்லகவு ண்டம்பாளையத்தை சேர்ந்த மகேஷிடம் மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
    • விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மௌலி (வயது23) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அஜய் (வயது24) என்பவரை அழைத்துக்கொண்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். ஜனப்பன்சத்திரம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தானாகுளம் என்ற பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மெளலி மற்றும் அஜய் தவறி கீழே விழுந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மௌலி இறந்து விட்டதாக கூறினர். அஜய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடுவதற்காக புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின்பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை அழைத்து வரப்பட்டி ருந்தன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சு விரட்டினை காண்பதற்காக பொன்ன மராவதி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன் காரணமாக கூட்டத்தில் நின்று மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்ணணூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவகுமார் (வயது 25) காளை முட்டி சம்பவ இடத்தில் பலியானார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.
    • நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நாச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ஆடுகளை விவசாய தோட்டத்து வீட்டில் கட்டி வைத்திருந்தார்.

    அதிகாலையில் எழுந்து பார்த்த போது ஆடுகளை நாய் கடித்து குதறியது தெரியவந்தது. நேற்று 4 ஆடுகள், இன்று 3 ஆடுகள் என 7 ஆடுகளை வெறி நாய் கடித்து கொன்றுள்ளது. கடந்த சில நாட்களாக கிராமத்தில் வெறி நாய் தொல்லையால் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். கால்நடைகளை கடித்து கொல்லும் வெறிநாயினை ஊராட்சி நிர்வாகம் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் ஊட்டியில் தங்கி அங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமரைக்கு ஊருக்கு வந்திருந்த விக்னேஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாக கூறி பறப்பட்டு சென்றுள்ளார்.

    நேற்று மதியம் ஆதனூர் பஸ் நிறுத்தம் அருகே விக்னேஷ் சென்றபோது அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கேரள அரசு பஸ்
    • தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது பஸ் ஏறி இறங்கியுள்ளது.

    கன்னியாகுமரி:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடந்தது.

    இதில் கால் நடையாகவும், ஓட்டமாகவும், சிலர் இருசக்கர வாகனத்திலும் சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 12 சிவாலயங்களை வழிபடும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

    இதில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 54), மற்றும் ராஜன் (55) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

    9-வது சிவாலயமான திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்வதற்காக தக்கலை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் புலியூர்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் போது எதிரே வந்த கேரளா அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது அந்த பஸ் ஏறி இறங்கியுள்ளது.

    இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். போலீசார் 2 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தக்கலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கேரளா அரசு பஸ்சை சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வைத்து தேடி வருகின்றனர்.

    பெண் உட்பட இருவர் படுகாயம்

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 13). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் நெருங்கிய உறவினர் ஆறுமுகம் இறந்த துக்கத்திற்கு குடும்பத்தோடு வந்து உள் ளார்.இந்நிலையில் கல்லாலங் குடி இந்திரா நகரை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ஜான்சி (21), லெனின் (24). துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலசுப்ரமணியன் ஜான்சி வீட்டிற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்குள்ள சுவிட்சை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின் சாரம் அவரது உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த ஜான்சி மற்றும் லெனின் ஆகிய இருவரும் அவரை மீட்க முயன்றுள்ளனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் 3 பேரும் மயங்கினர்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த மின் இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி–வில் சேர்த்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.காயம் அடைந்த இருவ–ரையும் போலீசார் புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியும், இறந்த பாலசுப்ரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ ருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் அழகம்மை விசாரணை நடத்தி வருகிறார்.

    ×