search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க எஸ்வந்த்ராஜ் வந்திருந்தார்.
    • வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் எஸ்வந்த்ராஜ் (வயது20). வியாசர்பாடியில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நண்பர் ஆகாஷ் (20) என்பவருடன் மாமல்லபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்க்க வந்திருந்தார். வேலை முடிந்ததும் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த எஸ்வந்த்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆகாஷ் காயத்துடன் உயிர் தப்பினார்.

    • கல்லக்குடி அருகே பேருந்து மோதி முதியவர் பலியானார்
    • திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சேகர். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சோள அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் பலியானார்.
    • அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பொன்னகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் மொரிசியஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது34). இவர்களுக்கு மோனிஷா (11) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் ஜெயகொடிக்கு சொந்தமான வயலில் சோளம் அறுவடை செய்வதற்காக இயந்திரத்தின் உரிமையாளரும் அதன் ஓட்டுனர் நூத்தாப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடையன் மகன் கோவிந்தராஜ் (40) என்பவர் வண்டியை இயக்கினார்.

    இந்நிலையில் ஜெயக்கொடி வாகனத்தின் பின்னால் விழும் சோள கருத்துக்களை பொறுக்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது வண்டியை பின்னால் இயக்கிய போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஜெயக்கொடி மீது வண்டியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானது. பின்னர் அவரை மீட்டு முருகன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகம் சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது48). இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.பாண்டி சிவரக்கோட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சிவரக்கோட்டை நான்கு வழி சாலையை பாயண்டி கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாண்டி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவ லறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அந்த தம்பதியும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

    வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 குழந்தைகளும், அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியாத நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்தில் தாயுடன் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிர்பாராத விபத்து
    • போலீசார் விசாரணை

    கரூர்

    வெங்கமேட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 27). எலக்ட்ரீஷியன். இவர் வேலாயுதம்பாளையம் அருகே காரிப்பாளையத்தில், விநாயகர் கோவிலில் ஸ்பீக்கர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நவீன்குமாரின் தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் விபத்து
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். மனைவி மேரி ராஜம் (வயது 72). சம்பவத்தன்று குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் மேரி ராஜம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மேரி ராஜம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

    ஆனால் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து மேரி ராஜத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மேரி ராஜம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக மேரி ராஜம் மகள் ஹெலன் மேரி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
    • அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    வெள்ளக்கோவில் :

    கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வெள்ளக்கோவில் அருகேயுள்ள வெள்ளமடை திருச்சி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    இதில் ஆம்னி வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பிரமிளா (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லோகேஸ்வரன் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பரளியாறு கோட்ட மேலாளர்- ஊழியர் மீது வழக்கு
    • எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தபோது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார் நெஞ்சில் தாக்கியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தடிக்காரன் கோணம் பத்மநாப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவரது மனைவி மீனா குமாரி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் இவர் பரளியாறு ரப்பர் தோட்டம் பகுதியில் எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார்நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து சக தொழிலாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கீரிப்பாறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பரளியாறு கோட்ட மேலாளர் பிரபாகரன், வடமாநில ஊழியர் சந்திப் (25) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • நண்பர் உயிருக்கு போராட்டம்

    அரியலுார்,

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சம்பத்தின் மகன் வெங்கட்ரமணி(வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குணசேகரனின் மகன் விக்னேஸ்வரனுடன்(26) நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்ப அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். சாத்தமங்கலம் அருகே சென்றபோது எதிரே சாத்தமங்கலம் சர்க்கரை ஆலையில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வெங்கட்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஸ்வரனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. தகவலை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.

    ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.

    ×