search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நல்லணம் காலனி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்ட காளை, போட்டியை கண்டு களித்த ரவிச்சந்திரனை முட்டியது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் மனைவி விசாலாட்சி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் இன்பமலரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    • கோத்தகிரி தாசில்தாரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது கெரடாமட்ட தேயிலைத் தோட்டத்தில் இன்பமலர் (வயது 44) என்பவர் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென இடி- மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இன்பமலர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உடன் வேலை செய்த தொழிலாளிகள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோத்தகிரி வட்டாட்சியரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இன்பமலரின் கணவர் மூர்த்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். எஸ் கைகாட்டி ஓம்நகரில் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த இன்பமலர் இடி மின்னல் தாக்கி பலியான சம்பவம், சக பெண் தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் மணிகண்டன்(வயது 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் சாலை பள்ளத்தில் விழுந்து சறுக்கியபடி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
    • உடலை கைப்பற்றி முசிறி போலீசார் விசாரணை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே சின்ன வேளகா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 67). முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் வேளாகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காத தங்கவேல் அதனை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தங்கவேல் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பெரிய அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48). சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இவர், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயபிரகாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன
    • நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும், மனிதர்களையும் கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்நிலையில் செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது ஆடுகளை அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த போது அங்கு வந்த நாய் 2 ஆடுகளையும், 5 கோழிகளையும் கடித்து கொன்று விட்டு ஓடிவிட்டது. இதே போல அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ஆடுகளை நாய்கள் கடித்து குதறிக் கொன்றுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
    • தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59), விவசாயி. இவர் அவரது உறவினர் ராமசாமி(61) என்பவருடன் காங்கயத்திற்கு சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் முள்ளிப்புரத்திற்கு புறப்பட்டனர்.

    காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ், ராமசாமி உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்ததும் எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் விவசாயி உள்பட 2பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உட்பட இருவர் பலியானர்
    • இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு இ.பி ஆபிஸ் எதிரே இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 நபர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்நிலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
    • தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.

    அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே மின்கம்பியை மிதித்த முதியவர் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் சடையன் (வயது 73). இவரது மனைவி செல்லம்மாள் (68). இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் காலை வயல் வெளிக்கு செல்வதற்காக இருவரும் நடந்து செல்லும் போது பாதையில் ஏற்கனவே அறுந்து கிடந்துள்ள மின் கம்பியை எதிர்பாராமல் மிதித்துள்ளனர். இதில் சடையன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மனைவி செல்லம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த லாலாபேட்டை போலீசார் சடையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனம் விபத்தில் பைனான்சியர் பலியானார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    கோட்டைப்பட்டினம் மீமிசல் அருகே தத்தணி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×