search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று காலை பஸ் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பெதப்பம்பட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. துர்க்கைராஜன் என்பவர் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக கண்ணன் இருந்தார்.

    அனுப்பர்பாளையம் பிரிவு மேடு அருகே பஸ் சென்றது. பஸ்சுக்கு முன்பு தண்ணீர் லாரி சென்றது. மேடு உயரமாக இருந்ததால் தொடர்ந்து தண்ணீர் லாரியால் செல்ல முடியாவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்நோக்கி வந்தது. லாரி பின்னால் வருவதை பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இருந்தாலும் வேகமாக வந்த லாரி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ஒரு பள்ளத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போதும் விடாமல் லாரி பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அடிவெள்ளியை சேர்ந்த அமாவாசை (65), எரிப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (45), குணசேகரன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து லீவு போட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #OwnerWhipsEmployee
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளார். அத்துடன் விடாமல், கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார். 

    ஊழியரை அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார். அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை, என்று கூறுகிறார். 

    எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று கேட்டு தொடர்ந்து அடிக்கிறார்.  ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். #OwnerWhipsEmployee

    பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே 200 அடி கிடுகிடு பள்ளத்தில் கார் உருண்டு விழுந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கேரளமாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அசைனார் (வயது 45). இவரது மகன் சாசுலான் (17), அசைனார் மகளின் பேரக்குழந்தை நிஷான் (5). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் காரில் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அதே காரில் திரும்பினர். கார் பந்தலூர் அருகே நெலக்கோட்டை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் உள்ள 200 அடி கிடு கிடு பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.

    காருக்குள் இருந்த அசைனார் (வயது 45). சாசுலான் (17), நிஷான் (5) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்புபடையினரும் அங்கு விரைந்துவந்து, காருக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு, உடனே அவர்களை கேரளாவில் உள்ள மேப்பாரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தேன்கனிக்கோட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதிக்கு தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருடன் காரில் சென்றார்.

    அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார். உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன் கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இன்று வேனுடன் பஸ் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MUVramsintobus #Nashikaccident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே பகுதியை சேர்ந்த சிலர் நாசிக் நகரில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்பதற்காக இன்று ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக சென்றபோது இன்று காலை 11 மணியளவில் அந்த வேனின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது.

    இதனால், நிலைதடுமாறி ஓடிய வேன், ஷிர்வாடா பாதா அருகே எதிர்திசையில் வேகமாக வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 5 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #MUVramsintobus #Nashikaccident
    ஆம்பூர் அருகே மினி லாரி மீது அரசு பஸ் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் அரசு பஸ் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு வந்தது.

    ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் சென்னை பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது அரசு பஸ் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த வாணியம்பாடியை சேர்ந்த அமுதா (வயது 42). கிருஷ்ணவேணி (67). இர்பால் (28). ஊத்தங்கரையை சேர்ந்த திருமால் (40). திருப்பத்தூரை சேர்ந்த சாமுண்டிஸ்வரி (48). சென்னையை சேர்ந்த பாஷா (22). காட்பாடியை சேர்ந்த பாலாகிருஷ்ணன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பூதக்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 19). இவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு மணிகண்டன் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விராலிமலை அருகே குறிச்சிப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பஸ்சை மணிகண்டன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் வந்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுக்கடை அருகே தூங்குவதற்காக மாடிக்கு சென்ற தொழிலாளி திடீரென கால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடிப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
    நாகர்கோவில்:

    புதுக்கடையை அடுத்த மேலகளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் தூங்குவதற்காக மாடிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாடி படி ஏறியபோது திடீர் என்று கால் தடுமாறி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. 

    உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜார்ஜ் பரிதாபமாக  இறந்தார்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்ஜெயின் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    சூலூர்:

    சூலூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு வாலிபர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பீகார் மாநிலம் இந்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சோனு குமார் (வயது 24), அரவிந்த் கேவிட் (50), கமலேஷ் கேவாட் (30). நண்பர்களாகிய இவர்கள் 3 பேரும் சூலூரை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் 3 பேரும் ஒரே மொபட்டில் தென்னம்பாளையம் சென்று காய்கறி வாங்கிவிட்டு திரும்பினர். அரசூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்தபோது மொபட் மீது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் மொபட்டில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சோனு குமார் மற்றும் அரவிந்த் கேவிட் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த கமலேஷ் கேவாட் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் மீது பஸ் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி தூள் தூளாக உடைந் தது. சூலூர் பகுதியில் கடந்த வாரம்தான், தனியார் பஸ் மோதி முதியவர் ஒருவர் பலியான நிலையில், தற்போது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சூலூர் பகுதியில் தனியார் மற்றும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 
    கம்போடியாவில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். #Combodia #PrinceRanariddh
    நோம்பென்:

    கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(வயது 39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.



    அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Combodia #PrinceRanariddh  #Tamilnews
    குடியாத்தம் அருகே காரும், சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியானார்
    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவரது மனைவி ஹேமாவதி (வயது 60). இவர்கள் ஆம்பூரில் நடைபெற்ற தங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் குடியாத்தத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் சோமேஸ்வரன் ஓட்டி சென்றார். குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் அருகே சென்றபோது இவர்கள் சென்ற காரும், எதிரே கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சிமெண்டு சீட்டுகளை ஏற்றி வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் காரில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹேமாவதி வழியிலேயே இறந்து விட்டார். காயம் அடைந்த சண்முகம், டிரைவர் சோமேஸ்வரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். துக்க வீட்டிற்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரகுபதி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் இளவரசன்(27). இவரும், ரகுபதியும் உறவினர்கள் ஆவர். இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். நேற்று மதியம் அஸ்தினாபுரம் அருகே காட்டுபிரியங்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக ரகுபதியும், இளவரசனும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    ரகுபதி மோட்டார் சைக்கிளை ஓட்ட, பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார். அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி அருகே வந்த போது, முன்னால் சென்ற டிப்பர் லாரியை ரகுபதி முந்தி சென்றார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி ரகுபதியும், இளவரசனும் சாலையில் விழுந்தனர்.

    இதற்கிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது ஏறி சென்றது. இதில் ரகுபதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளவரசனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளவரசனும் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்த ரகுபதி, இளவரசனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மேலும் சம்பவ இடத்திற்கு கயர்லாபாத் போலீசாரும் வந்தனர். அவர்கள் ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தூக்கினர்.

    அப்போது அங்கிருந்த உறவினர்கள் ரகுபதியின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் தடுத்து, இந்த வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்து அதிகளவில் நடக்கிறது. எனவே லாரி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாலையை அகலப்படுத்த கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பின்னர் ரகுபதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் இறந்த 2 பேருக்கும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாக கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×