search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது.
    • உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழா டெல்லியில் இன்று கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    தற்போதுள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமற்றது. தொழில் நுட்பம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் காரணமாக பல அச்சுறுத்தல்களைக் காண முடிகிறது. சைபர் குற்றத்துக்கு எல்லை இல்லை. எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

    சைபர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாகி விட்டது. சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியங்களை உருவாக்க மத்திய அரசு ரூ. 195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    மணிப்பூர்:

    மணிப்பூர், தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

    இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பழங்குடியினர் நல விவகார அமைச்சகம் ரூ.15 கோடி நிதி ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

    இந்தியாவின் சுதந்திரத்தில் பழங்குடியின மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் நகர்ப்புற மக்களுக்குத் தெரியாது.  அதனால்தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற அருங்காட்சியகங்களை உருவாக்க முடிவு செய்தார். இதற்காக மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதில், ரூ.110 கோடி  வழங்கப்பட்டுள்ளது.

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம், நமது சமூகத்தை ஒருங்கிணைக்க உதவும்.

    குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் கட்டப்படும். இது தேசபக்தியை வளர்க்கும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்தார்பூர் பாதை எப்போது திறக்கப்படும் என சீக்கியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது.

    இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது. இப்பாதையை சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக கர்தார்பூர் பாதை மூடப்பட்டது. 

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சீக்கிய யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கர்தார்பூர் சாஹிப் பாதையை புதன்கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    போதைப் பொருள் பரவலைத் தடுக்க முதல் மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
    திருப்பதி:

    திருப்பதியில் உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர், கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திரா சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா சார்பில் உள்துறை அமைச்சர் முகமது அலி, கர்நாடகா சார்பில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, புதுச்சேரி சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல் மந்திரி ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது: 

    தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், மொழிகள் இந்தியாவின் பழமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

    தென்னிந்திய மாநிலங்கள் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்தும் அளிக்கிறது.

    இன்றைய தென்னிந்திய மாநில முதல்-மந்திரிகளின் கூட்ட விவரங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 111 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.  

    போதைப்பொருள் பயன்பாடு நமது இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் அழிக்கும் என்பதால், போதைப்பொருள்களின் அச்சுறுத்தல் மற்றும் பரவலை தடுக்க  முதல்-மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திருப்பதியில் நடைபெறும் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலமாக பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
    திருப்பதி:

    திருப்பதியில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, கேரளா மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, திருப்பதியில் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

    இந்நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம்  சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் உடன் சென்றார்.

    திருப்பதியில் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதியில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பல்வேறு அதிகாரிகள் திருப்பதிக்கு வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி 20 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். கவர்னர்களுடனும் பல்வேறு கூட்டங்களை நடத்தினார். இந்தியா எப்படி போராடியது என்பதை பார்த்து உலகமே பாராட்டியது.
    புதுடெல்லி :

    ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில், மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக போராடினோம். ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மனம்|’ என்ற சிந்தனையுடன் போராடினோம்.

    முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி 20 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். கவர்னர்களுடனும் பல்வேறு கூட்டங்களை நடத்தினார். இந்தியா எப்படி போராடியது என்பதை பார்த்து உலகமே பாராட்டியது.

    110 கோடி டோஸ் தடுப்பூசிக்கு மேல் போட்டுள்ளோம். இதன் பலனாக, கொரோனா பிடியில் இருந்து நாடு ஏறத்தாழ விடுபட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரிகளின் இலாகாக்களின் முழு விவரத்தை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.

    இந்த அமைச்சரவையில் மோடியையும் சேர்த்து மொத்தம் 58 பேர் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.

    புதிய அமைச்சரவையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக 9 மந்திரிகள் பதவி கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து 8 பேர் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளனர்.

    மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தலா 5 பேர் மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 3 பேர், மேற்குவங்காளம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளனர்.

    கோவா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், அருணாசலபிரதேசம், அசாம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், டெல்லியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இடம் பிடித்துள்ளனர்.

    மத்திய மந்திரிகளுக்கு எந்தெந்த இலாகாக்களை ஒதுக்குவது என்பது சம்பந்தமாக இன்று காலை முதல் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அவர் இது தொடர்பாக கருத்துகளை கேட்டு அறிந்தார்.

    இதையடுத்து இன்று மதியம் புதிய மந்திரிகளுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த முறை பிரதமருக்கு அடுத்த நிலையில் 2-வது இடத்தில் உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத்சிங் பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா இந்த தடவை முதல் முறையாக மத்திய மந்திரியாகி உள்ளார். அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி ஆக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை மந்திரியாகி உள்ளார். கேரளாவை சேர்ந்த முரளிதரன் வெளியுறவுத்துறை இணை மந்திரியாகி உள்ளார்.

    மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் வருமாறு:-



    பிரதமர் மோடி- அணுசக்தி, விண்வெளி, பொதுநலம், பென்‌ஷன், கொள்கை முடிவுகள் மற்றும் இதுவரை ஒதுக்கப்படாத அமைச்சரவை இலாகாக்கள்.

    1. ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு

    2. அமித்ஷா-உள்துறை

    3. நிதின் கட்காரி-சாலை போக்குவத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்.

    4. சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம்

    5. நிர்மலா சீதாராமன்-நிதி மற்றும் கம்பெனி விவகாரம்

    6. ராம்விலாஸ் பஸ்வான்- உணவு, பொது விநியோகம், நுகர்வோர் விவகாரம்.

    7. நரேந்திர சிங் தோமர்- வேளாண், விவசாயம் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.

    8. ரவிசங்கர் பிரசாத்- சட்டம், தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்.

    9. ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்தும் தொழில்.

    10. தாவர் சந்த் கெலாட்- சமூக நீதி.

    11. ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை.

    12. ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாடு

    13. அர்ஜூன் முண்டா- பழங்குடியினர் நலம்.

    14. ஸ்மிருதி இரானி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, டெக்ஸ்டைல்.

    15. ஹர்‌ஷவர்தன்- சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல்.

    16. பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு.

    17. பியூஸ் கோயல்- ரெயில்வே, வர்த்தகம், தொழில்.

    18. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல்.

    19. முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலம்

    20. பிரகலாத் ஜோஷி- பாராளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்.

    21. மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் நலம்.

    22. அரவிந்த் சாவந்த்- கனரக தொழில்.

    23. கிரிராஜ் சிங்- வன விலங்கு, பால், மீனவர் நலம்.

    24. கஜேந்திர சிங் செகாவத்- நீர் பாசனம்.

    (தனி பொறுப்பு)

    1. சந்தோஷ்குமார் கங்குவார்- தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.

    2. ராவ் இந்திரஜித் சிங்- புள்ளியியல், அமலாக்கம் மற்றும் திட்டம்

    3. ஸ்ரீபாதயசோ நாயக்- பாதுகாப்பு, ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி

    4. டாக்டர் ஜிதேந்திர சிங்- வடகிழக்கு மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பொதுநலன், பென்‌ஷன், அணுசக்தி, விண்வெளி.

    5. கிரண் ரிஜிஜு- இளைஞர் நலம், விளையாட்டு, சிறு பான்மையினர் நலம்.

    6. பிரகலாத் சிங் படேல்- கலாச்சாரம், சுற்றுலா.

    7. ராஜ்குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு.

    8. ஹர்தீப் சிங் பூரி- வீட்டு வசதி, விமானம், வர்த்தகம், தொழில்.

    9. மன்சுக் மாண்டவியா- கப்பல், ரசாயனம், உரம்.

    1. பஹன் சிங் குலாத்தே- ஸ்டீல்

    2. அஸ்வினி குமார் சவுபே- சுகாதாரம், குடும்ப நலம்.

    3. அர்ஜூன் ராம் மேக்வால்- பாராளுமன்ற விவகாரம், கனரக தொழில்.

    4. வி.கே.சிங்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.

    5. கிரி‌ஷன் பால் குர்ஜார்- சமூக நீதி.

    6. தன்வீ ராசாகேப் தடா ராவ்- உணவு, பொது விநியோகம்.

    7. கி‌ஷன் ரெட்டி- உள்துறை.

    8. புருசோத்தம் ரூபாலா- வேளாண், விவசாயிகள் நலன்.

    9. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி.

    10. சாத்வி நிரஞ்சன் ஜோதி- ஊரக மேம்பாடு.

    11. பாபுல் சுப்ரியோ- சுற்றுச் சுழல், வனம், தட்பவெட்ப நிலை.

    12. சஞ்சீவ் பல்யான்- வன விலங்கு, பால், மீனவர்.

    13. சஞ்சய் சம்ராவ் தோட்ரே- மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம்.

    14. அனுராக் தாக்குர்- நிதி, கம்பெனி விவகாரம்.

    15. சுரேஷ் அங்கடி-  ரெயில்வே.

    16. நித்யானந்த் ராய்- உள்துறை.

    17. ரத்தன்லால் கட்டாரியா- நீர்பாசனம், சமூக நீதி.

    18. முரளீதரன்- வெளியுறவுத் துறை, பாராளுமன்ற விவகாரம்.

    19. ரேணுகா சிங் சருடா- பழங்குடியினர் நலம்.

    20. சோம் பர்காஷ்- வர்த்தகம், தொழில்.

    21. ராமேஷ்வர் டெலி- உணவு பதப்படுத்தும் தொழில்.

    22. பிரதாப் சந்திர சாரங்கி- சிறு, குறு, நடுத்தர தொழில், வனவிலங்கு, பால், மீனவர் நலன்.

    23. கைலாஷ் சவுத்ரி- வேளாண், விவசாயிகள் நலன்.

    24. தேவஸ்ரீ சவுத்ரி- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:-



    பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை
    ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை
    தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
    மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், அவர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சந்திப்பின்போது, அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரகுமார் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம். அல்லது இருவரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் எம்பி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
    பாராளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர்.



    மகத்தான இந்த தேர்தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது.

    பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன.

    குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லியிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), நிதின் கட்காரி (நாக்பூர்) உள்ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள்.

    தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன. எனவே மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். மத்தியில் அவரது தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு 96 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

    கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங்கிரசால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது.

    காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள்ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

    ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி. மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

    தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 97 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளன.

    கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்து காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் அந்த கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று இருக்கிறது.

    இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடினார்கள்.
    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. இதில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, வாக்குகளை பிறகு எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்து வலியுறுத்தின.

    ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. இதில் தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறையே பின்பற்றப்படும் என கூறியுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோரிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எண்ணும் நடை முறையை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவானாலும், அதை அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும்.

    6-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின. பின்னர். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதும், இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    எனவே தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தால்தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக போராடுவது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகள் மீது கேள்வி எழுப்புவதன் மூலம் உலக அரங்கில் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் அவமதிக்கின்றனர். அவர்கள் புகாரில் உண்மையில்லை, சுயநலமே அடங்கி இருக்கிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவில்லையா?

    அப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பவில்லை என்றால், அந்த தேர்தல்களுக்கு பின்னர் நீங்கள் ஏன் அரசு அமைத்தீர்கள்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமான தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அது தேர்தல் வெற்றி என்றும், தோல்வியடைந்தால் அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் காரணம் என்றும் கூற முடியுமா?

    இவ்வாறு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே கருத்தை மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதியானால், அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதுதான் புகார் கூறுவார்கள் என நான் பல மாதங்களாக கூறி வருகிறேன். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டே 4 முறை விசாரித்து விட்டது. தோல்வியை மறைக்க அவர்கள் பல்வேறு போலி காரணங்களை கூறிவருகின்றனர்’ என தெரிவித்தார்.
    ×