search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொயோட்டா"

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் நிதி சலுகைகளை வழங்க வங்கியுடன் கூட்டணி அமைத்துள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கி சார்பில் அசத்தலான நிதி சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    இண்டஸ்இண்ட் வங்கி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையின் பேரில் மிக குறைந்த வட்டி வழங்குகிறது. இந்த சலுகை தனியார் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கார்களுக்கும் பொருந்தும். இண்டஸ்இண்ட் டொயோட்டா விற்பனையாளர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது.

     டொயோட்டா கார்

    "கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களால் பி பிரிவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் வரவேற்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த டொயோட்டா வாகனங்களை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இணை மேலாளர் வைஸ்லைன் சிகாமணி தெரிவித்தார்.
    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹேட்ச்பேக் கார் வெளியீட்டு முன் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Toyota



    டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா ஹேட்ச்பேக் கார் வெளியீட்டு முன் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டொயோட்டா கிளான்சா கார் மாருதி சுசுகி பலேனோ மாடலின் பேட்ஜ்-என்ஜினியரிங் செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் ஆகும்.

    மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் வாகன விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின் படி அறிமுகமாக இருக்கும் முதல் காராக கிளான்சா இருக்கிறது. டொயோட்டா கிளான்சா கார் பார்க்க கிட்டத்தட்ட மாருதி சுசுகி பலேனோ போன்றே காட்சியளிக்கிறது.



    இந்தியாவில் டொயோட்டா கிளான்சா கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியீட்டுக்கு ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், கிளான்சா கார் விற்பனையகங்களுக்கு வழங்கும் பணிகளை டொயோட்டா துவங்கி இருக்கிறது.

    வடிவமைப்பின் படி பலேனோ மற்றும் கிளாசா ஒரேமாதிரி காட்சியளித்தாலும், கிளான்சா காரின் முன்புறம் சில மாற்றம் செய்யப்பட்டு டொயோட்டா வழக்க வடிவமைப்பை பிரதிபலிக்கிறது. மற்றபடி பம்ப்பர், ஏர் டேம் உள்ளிட்டவை புதிய வடிவமைப்பை பெற்றிருக்கின்றன.



    காரின் உள்புறம் ஸ்டீரிங் வீலில் பேட்ஜிங் செய்யப்படுவதை தவிர வேறு மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அந்த வகையில் புதிய காரில் ஒரே டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் வடிவமைப்பு மற்றும் பிளாக்-புளு தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 7-இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. 

    டொயோட்டா கிளான்சா கார் 1.2 லிட்டர் மைல்டு-ஹைப்ரிட் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை புதிய ஹேட்ச்பேக் காரில் டூயல்-ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் மற்றும் மேலும் சில அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. #Toyota



    டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் இணைந்து வியாபாரம் செய்ய இருப்பதாக 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இருநிறுவனங்கள் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் கார் மாருதி பலேனோ மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மேலும் டொயோட்டா நிறுவனம் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டீசரை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய டொயோட்டா கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா பிராண்டிங்கில் பலேனோ கார் ஜூன் மாதத்திற்குள் வெளியாகலாம் என தெரிவித்தது. புதிய டீசர் புகைப்படத்தில் காரின் பின்புறம் மட்டும் காட்சியளிக்கிறது.



    இதில் கார் பார்க்க பலேனோ போன்றே தெரிகிறது. அந்த வகையில் புதிய கிளான்சா மாடல் காரில் புதிய கிரில் மற்றும் முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா கார் இந்தியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா கிளான்சா கார் இரண்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மாடல் காரான சுப்ரா அதிநவீன புதுவித அம்சங்களுடன் உருவாகி வருகிறது.



    ஆங்கில திரைப்படங்களில் ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் என்ற 
    திரைப்படம் மிகவும் பிரபலம். இதில் இடம்பெறும் கார்கள் பலவும் மக்கள் மனதில் பசுமையாக பதியும் அளவுக்கு இவற்றின் செயல்பாடுகள் பிரமாண்டமாக, அசர வைக்கும் வகையில் இருக்கும். அவற்றில் டொயோடா நிறுவனத்தின் சுப்ரா மாடல் கார்கள் அனைவரையும் கவர்ந்த மாடல் என்றால் அது மிகையல்ல. 

    ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் முக்கிய இடம்பெற்றுள்ள சுப்ரா மாடல் தற்சமயம் புதிய அவதாரம் எடுத்து ஏ90 என்ற பெயரில் வெளிவர உள்ளது. முந்தைய மாடல்கள் அனைத்தும் இடது பக்க ஸ்டீரிங் உள்ளவை. இப்போது வலதுபுறம் ஸ்டீரிங் பொருத்தப்பட்டு டொயோடா சுப்ரா ஏ90 தயாராகிறது. 



    டெட்ராய்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் இப்போது அதிக எண்ணிக்கையில் தயாராகி வருகிறது. அடுத்து பாங்காக்கில் நடைபெற உள்ள சர்வதேச மோட்டார் கண்காட்சியிலும் இது இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது புறம் ஸ்டீரிங் இருந்த மாடலைப் போன்றே பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாத மாடலாக இவை தயாரிக்கப்படுகின்றன. 

    இந்த காரில் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த கார் ரேஸ் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இதனாலேயே இது இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    டொயோட்டா சுப்ரா கார் என்ஜின் 197 ஹெச்.பி. திறன், 320 என்.எம். டார்க் செயல்திறன் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடல் 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. வலது புறத்தில் ஸ்டீரிங் உள்ளதால் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.
    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஏப்ரல் மாதம் முதல் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. #Toyota



    டொயோட்டா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதே கார் விலையை உயர்த்துவதற்கான காரணமாக டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய விலை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

    உற்பத்தியில் விலை குறைக்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. உதிரி பாகங்களின் கட்டணம் தொடர்ந்து அதிகமாகி வருவதால் விலை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், தொடர்ந்து விலையை குறைக்கும் முயற்சிகளை டொயோட்டா மேற்கொள்ளும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்திருக்கிறார். 

    எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படுகிறது என்பது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய விலையை விற்பனையின் போது அமலாக்கிக் கொள்ள டொயோட்டா முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டாவின் புதிய மாடலை அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி ஹைப்ரிட் 2019 கார் அறிமுகம் செய்யப்பட்டது. #ToyotaCamry #Car



    இந்தியாவில் புத்தம் புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.36.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய தலைமுறை கேம்ரி ஹைப்ரிட் கார் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதனை டொயோட்டா 'கீன் லுக்' டிசைன் என அழைக்கிறது. அந்த வகையில் இந்த கார் முந்தைய மாடல்களை விட கூர்மையாக காட்சியளிக்கிறது. புதிய கேம்ரி காரின் முன்புற பம்ப்பரின் மேல் வி வடிவம் தெளிவாக காட்சியளிக்கிறது. 

    கேம்ரி ஹைப்ரிட் 2019 மாடலின் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் கன்சோலில் பை-பீம் எல்.இ.டி. ப்ரொஜெக்டர்கள் மற்றும் மூன்று எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய கேம்ரி மாடலின் முன்புறம் கூர்மையாக இருப்பதோடு, பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    காரின் உள்புறம் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, டேஷ்போர்டு புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. காரின் உள்புறம் மத்தியில் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி மெல்லிய பட்டன்கள் காட்சியளிக்கின்றன.

    இத்துடன் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஆடியோ, டெலிஃபோனி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றுக்கான கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே (HUD) வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 176 பி.ஹெச்.பி. @ 5700 ஆர்.பி.எம். பவர் மற்றும் 221 என்.எம். @ 3600 - 5200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதனுடன் 118 பி.ஹெச்.பி. மற்றும் 202 என்.எம். டார்க் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.பி.வி. ரக வாகனங்களின் விற்பனையில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #Toyota #Car



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. ரக வாகனமாக இருக்கிறது. டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவு வியாபாரம் செய்திருக்கிறது.

    இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தை அதிகளவு போட்டி ஏற்பட்டுள்ளது. புதுவரவு வாகனங்களான மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா போன்ற வாகனங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் ரெனால்ட் என்.பி.சி. உள்ளிட்ட வாகனங்கள் சந்தையில் அதிகளவு போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றன.



    விற்பனையை பொருத்த வரை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு டிசம்பரில் இருமடங்கு அதிகளவு இன்னோவா க்ரிஸ்டா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விற்பனையை பொருத்த வரை இன்னோவா க்ரிஸ்டா கார் சுமார் 80,000 அதிக யூனிட்களை கடந்துள்ளது.

    இன்னோவா க்ரிஸ்டா கார் இருவித டீசல் என்ஜின்கள்: 2.4 லிட்டர் (5-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 2.8 லிட்டர் (6-ஸ்பீடு ஆட்டோமேடிக்) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 150 பி.ஹெச்.பி. பவர், 343 என்.எம். டார்க் மற்றும் 174 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    2016 ஆண்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ரூ.13.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.20.78 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. 
    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை டிசம்பர் 2018 இல் மட்டும் சுமார் 10% அதிகரித்துள்ளது. #toyota



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் மட்டும் 10% வரை அதிகரித்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 11,830 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 

    இதுதவிர 653 யூனிட்கள் எடியோஸ் சீரிஸ் கார்களை டொயோட்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா மொத்தம் 12,483 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    டிசம்பர் 2017 ஆம் ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மொத்தம் 10,793 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இத்துடன் 812 எடியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 



    2016 ஆம் ஆண்டு டொயோட்டா அறிமுகம் செய்த இன்னோவா க்ரிஸ்டா கார் கணிசமான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்திய சந்தையில் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது. 

    இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் என். ராஜா கூறும் போது,

    "ஆண்டு இறுதியில் அதிகளவு விற்பனையை பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.எம்.வி. ரக கார்களில் அதிகளவு விற்பனையை டொயோட்டா பதிவு செய்திருக்கிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி." 

    என்று கூறினார். 
    ஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota



    டொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    பழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எடியோஸ்

    டொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா கொரோலா ஆல்டிஸ்

    ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.
    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மே மாத இந்திய விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மே மாத விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே மாதம் மாட்டும் டொயோட்டா நிறுவனம் 13,940 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 13,113 யூனிட்கள் இந்தியாவிலும், 827 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனம் 10,914 யூனிட்களை உள்நாட்டிலும் 1,425 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அந்த வகையில் இந்நிறுவனம் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    "மே 2018 மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களை தொடர்ந்து யாரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் என். ராஜா தெரிவித்தார்.



    இந்தியாவில் மே மாத துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் எனும் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்தது. மே மாத இறுதி வரை மட்டும் டொயோட்டா நிறுவனம் 4000 யாரிஸ் யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. 

    இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
    உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    டொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில் இதன் விநியோகம் நாட்டின் அனைத்து டொயோட்டா விற்பனையகங்களிலும் இன்று முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
    உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 

    இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன. 



    பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் டூயல் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா யாரிஸ் மாடல் மேனுவல் வேரியன்ட் லிட்டருக்கு 17.1 கிலோமீட்டர் மற்றும் CVT வேரியன்ட் லிட்டருக்கு 17.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்டுஃபையர் ரெட், ஃபேன்டம் பிரவுன், கிரே மெட்டாலிக், சூப்பர் வைட், பியல் வைட் மற்றும் சில்வர் மெட்டாலிக் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டொயோட்டா யாரிஸ் J, G, V மற்றும் VX என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. அனைத்து ட்ரிம்களும் மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×