search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்"

    ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

    அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில்  பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகையான ஆடை அணிய வேண்டும் என்கிற விவரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

    இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து, ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜதுல்லா முஜாதிதி கூறுகையில், "இதுப்போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை. தலிபான்களின் புதிய விதிமுறைகளில் சில விதிகள் நடைமுறையில் இல்லை. சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது. இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைக்காட்சிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்" என்று அவர் கூறினார்.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் உள்ள சிறப்புப் படையினர் அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் போலீசாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.

    மைடான் ஷார் நகரில் உள்ள இந்த அலுவலகத்தின் வாசலில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 9 மணியளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களுக்கும் சிறப்புப்டை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை பெறும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Talibanattack #specialforcesstation #AfghanTaliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகள் போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பல மாகாணங்களில் இவர்கள் கை ஓங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ முகாம்களை குறிவித்து இவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

    இவர்களின் வன்முறைக்கு லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் பலியாகியுள்ளனர். தலிபான்களின் ஆதிக்கத்தை வேரறுக்க அந்நாட்டு ராணுவம் 17 ஆண்டுகளாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை.



    இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்திக்குட்பட்ட ஜுவைன் மாவட்டத்தின் வழியாக சென்ற போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

    இதில் 4 வாகனங்கள் நாசமாகின. அவற்றில் வந்த 22 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ கிடங்கு மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். #Afghanpolicekilled #Talibanambush #policekilled
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Afghanistan #SecurityForce #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது.

    ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிப் நூரி, தலிபான்களின் இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #SecurityForce #TalibanAttack
    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

    இன்று இரண்டாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் அட்டஹுல்லா கொக்யானி தெரிவித்துள்ளார். #Afghanistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தானில் தேர்தலை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு கட்ட தாக்குதல்களை நடத்திவந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவுகள் துவங்கியது. #AfghanistanPolling #Taliban
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

    மேலும், பொய்யான தேர்தல் முறையை புறக்கணிக்குமாறு மக்களிடமும் தலிபான்கள் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்று கவர்னர் அலுவலகத்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கந்தஹார் மாகாணத்துக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AfghanistanPolling #Taliban
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக மாகாண செய்தித்தொடர்பாளர் ஜம்ஷித் சஹாபி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  3 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே வேளையில் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஒரே நாளில் இருவேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலிபான் உட்பட எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தானில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், தலிபான்கள் விரும்பினால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் என அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். #Afganistan #Taliban #Ceasefire
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான், அரசை கவிழ்க்க போராடி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகிறது.

    தலிபான் அமைப்பை கட்டுப்படுத்த அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இருதரப்பிலும் போரால் பல உயிர்கள் பலியாகின்றன.

    இதற்கிடையே கடந்த மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு, 5 நாள் போர் நிறுத்தம் ஒன்றை அதிபர் அஷ்ரப் கானி அறிவித்திருந்தார். இதனை ஏற்ற தலிபான் அமைப்பும் 3 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.



    இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதால், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் அன்று மீண்டும் . போர்க்களம் திரும்பினர். எனவே, அரசு படைகளும் போர் நிறுத்தம் முடிந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இனி ஈடுபடும் என அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். அதன்படி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரப், அமைதியை விரும்புவதை வெளிக்காட்டவே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், தலிபான் அமைப்பு விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் எனவும் தெரிவித்தார்.  #Afganistan #Taliban #Ceasefire
    பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தை அடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. #PakistaniTaliban
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் என்னும் பயங்கரவாத இயக்கம் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லா கொன்று வீழ்த்தப்பட்டார்.

    இதையடுத்து தங்களது புதிய தலைமையை அந்த இயக்கம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த முகமது குரசானி கூறுகையில், முல்லா ஃபஷ்லுல்லா கொலை செய்யப்பட்டதை அடுத்து, தங்களது புதிய தலைவராக முப்தி நூர் வலி மஹ்சூத் என்பவரை புதிய தலைவராக நியமித்ததாகவும், முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ##PakistaniTaliban
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்தது இதில், சுமார் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். #AfghanBlast #Taliban #Afghanceasefire
    காபூல் :

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு ஆப்கான் அரசு 5 நாள் போர் நிறுத்தமும் தாலிபான் அமைப்பினர் 3 நாள் போர் நிறுத்தமும் அறிவித்திருந்தனர்.

    ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே, நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் நேற்று திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சுமார் 36 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுபேற்றது.

    இந்நிலையில், அதே  நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகம் அருகே இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், சுமார் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanBlast #Taliban #Afghanceasefire
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 9 நாள் போர் நிறுத்தத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. #AfghanBlast #Taliban #Afghanceasefire
    காபுல்:

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

    ரம்ஜானை முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

    ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தலைநகர் காபூல் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ரம்ஜானை கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில், நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் நேற்று வெளியானது.

    இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை இன்று 36 ஆக உயர்ந்துள்ளது.

    65 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேலும் 9 நாள் போர் நிறுத்தத்துக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுகொண்டதற்கான எவ்வித ஒப்புதல் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. #AfghanBlast #Taliban #Afghanceasefire
    ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். #Taliban # Afghanceasefire
    காபூல்:

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. 

    ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். 

    இந்நிலையில், ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ராணுவத்தினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    ‘இதை எங்களால் நம்பவே முடியவில்லை, ராணுவ வீரர்கள் மற்றும் தலிபான்கள் அருகருகே நிற்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. இந்த ரம்ஜான் மிக அமைதியாக கொண்டாடப்படுகிறது. இன்று நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். இதேபோல் அமைதியான ரம்ஜான் ஆப்கானிஸ்தானில் முன்னெப்போதும் கொண்டாடப்படவில்லை’ என கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்தார். #Taliban # Afghanceasefire
    ×