search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96360"

    குஜராத் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானத்தை இயக்கிய அதிகாரி சஞ்சய் சவுகான் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். #Gujarat #IAF
    கட்ச்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை ஜாகுவார் ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. விமானத்தை அந்த விமானப்படை தளத்தின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் சவுகான் இயக்கினார்.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்ச் மாவட்டம் பரேஜா கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தை இயக்கிய அதிகாரி சஞ்சய் சவுகான் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    விமானத்தின் பாகங்கள் அந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் நீண்டதூரத்துக்கு சிதறி விழுந்தன. இதில் அந்த வயலில் மேய்ந்துகொண்டிருந்த பல பசு மாடுகள் ஆங்காங்கே இறந்து விழுந்தன. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    ஆரம்ப சுகாதார மையங்களில் அவசர மருத்துவ வசதிகள் சரிவர இல்லாத காரணத்தினால் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கில் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. #AmbulanceServiceForInfants
    அகமதாபாத் :

    ’பிறக்கும் குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்’ எனும் பெயரில் குஜராத்  மாநிலம் முழுதும் முதல்கட்டமாக அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்ட10 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் குறித்து  குஜராத் மாநில சுகாதார ஆணையர் டாக்டர் ஜெயந்தி குறிப்பிட்டுள்ளதாவது :-

    பல பச்சிளங்குழந்தைகள் ஜாம்நகர் மாவட்ட சிவில் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு, பிறந்த குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு இடையே அழைத்து செல்ல அதிக நேரம் விரயம் ஆவதால் அகமதாபாத் மருத்துவமனையை அடைவதற்குள்ளாகவே பல குழந்தைகள் இறக்க நேரிட்டது.

    எனவே, ஜாம்நகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஒரு யோசனையை முன்வைத்தார் அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜாம்நகர் சிவில் மருத்துவமனைக்கு மட்டும் சோதனை முயற்சியாக  சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

    இதன் மூலம் 43 பச்சிளங்குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது. எனவே இத்திட்டத்தை விரிவு படுத்தும் பொருட்டு ‘பிறக்கும் குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்’ எனும் பெயரில்  மாநிலம் முழுதும் முதல்கட்டமாக அனைத்து சிறப்பு வசதிகளையும் கொண்ட10 ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    அவசர சிகிச்சைகள் தேவைப்படும் பச்சிளங்குழந்தைகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து இந்த ஆம்புலன்ஸ் சேவை செயல்படும். இதில், குழந்தைகளின் முதலுதவிக்கு தேவையான அனைத்து சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். #AmbulanceServiceForInfants
    தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.



    அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குஜராத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

    இந்த நிலையில் குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சிலைகளை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்ட போலீசார், உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். தற்போது ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த 2 சிலைகளும் நாளை மாலை தஞ்சையில் உள்ள பெரியகோவிலுக்கு எடுத்து வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault

    காந்திநகர்:

    இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி மும்பையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, தனது மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

    அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

    இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார். அங்குள்ள ரடாடியா கம்பெனி அருகே அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருந்த போது, அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர்.

    பின்னர் அவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர். இந்த காட்சிகளை அவர்கள் தங்கள் செல்போனில் பதிவும் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயாபென் ராஜ்கோட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    திருடன் என நினைத்து தலித் வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
    போபால்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் பஞ்சாப் மாநிலம் அகமதாபாத்துக்கு பலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தினை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.

    மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 47 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #busaccident
    குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் மீது மக்கள் சுமார் 50 லட்ச ரூபாயை பணமழையாக பொழிந்தனர். #GujaratSinger #moneyshower

    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் கலந்துகொண்டார். பஜன் பாடகரான அவரது பாடலால் அங்கிருந்த மக்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டனர்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அந்த பாடகர் மீது 10 முதல் 2000 ரூபாய் மதிப்பிலான பணத்தை மழையாக பொழிந்தனர். பாடகர் மீது வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த ஜனவரி மாதம் சூரத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் பாடகர் ஒருவர் மீது பல லட்ச ரூபாய் பணத்தை பொதுமக்கள் மழையாக பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GujaratSinger #moneyshower
    குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #lorryaccident
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச் செல்லும் லாரி சென்றுள்ளது. சிமெண்ட் மூட்டைகளுக்கு மேல்  பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். பாவல்யாலி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #lorryaccident

    குஜராத் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர், தான் கல்கி அவதாரம் என்றும், வேலைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KalkiAvatar #GujaratOfficer
    அகமதாபாத்:
     
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் ரமேஷ்சந்திரா செய்தியாளர்களிடம் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியதாவது:

    நீங்கள் நம்பினால் நம்புங்கள். நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம். நான் வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன். என்னுடைய தவத்தின் பயனால் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது.

    கடந்த 2010ம் ஆண்டில் தான் நான் கடவுள் அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போது முதல் எனக்கு அதீத சக்திகள் கிடைத்து வந்தன.

    நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னால் ஆபீசில் உடகார்ந்து தவம் செய்ய முடியவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    கடந்த 8 மாதங்களில் ரமேஷ்சந்திரா அலுவலகத்துக்கு 16 நாட்கள் மட்டுமே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #KalkiAvatar #GujaratOfficer
    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    அகமதாபாத்: 

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.

    ராஜ்கோட்டின் நியூட்டன் நகர் சொசைட்டியில் உள்ள வஜுபாய் வாலா வீட்டின் முன்பு காங்கிரசார் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், கவர்னர் வஜுபாய் வாலாவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை போல் உள்ளது. மாநிலத்தை நிர்வகிக்கும் கவர்னர் பாஜக தொண்டர் போல் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

    இதேபோல். குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதராவிலும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
    ×