என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96385
நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல்."
இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் இன்டர்நெட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகை அறிவித்துள்ளது. #BSNL #broadband
இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மூன்று புதிய சலுகைகளையும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.
நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.
ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.
இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.
இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த மாதம் அறிவித்த ரூ.29 சலுகையை மாற்றியமைத்துள்ளது. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BSNL
ஆகஸ்டு மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் ரூ.29 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தற்சமயம் இந்த சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ.29 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரூ.29 சலுகையுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.9 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் 100 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இதில் ரோமிங் அழைப்புகளும் அடங்கும், எனினும் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.
பி.எஸ்.என்.எல். ரூ.29 விலை சலுகையை மாற்றி அதன் பலன்களை குறைத்திருக்கும் நிலையிலும், போட்டி நிறுவனங்கள் வழங்கும் சலுகையை விட சிறப்பானதாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.52 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 150 எம்.பி. டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரூ.59 மற்றும் ரூ.47 விலையில் கிடைக்கின்றன. ஏர்டெல் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. வோடபோன் சலுகையில் தினமும் 125 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், 500 எம்.பி. டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #BSNL
அமேசான் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தின் படி தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற சலுகையை தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்தது.
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகையிலோ அல்லது ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் லேன்ட்லைன் சலுகைகளை தேர்வு செய்யும் போது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனில் பிரைம் வீடியோ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டதும் அமேசான் பிரைம் சந்தாவை பி.எஸ்.என்.எல். வலைதளம் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். பிரைம் சந்தா மூலம் பிரைம் மியூசிக் சேவையையும் இலவசமாக வழங்குகிறது. இதனையும் ஆப் டவுன்லோடு செய்து ஆக்டிவேட் செய்யலாம்.
சலுகைக்கு தகுந்த வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவிற்கு பி.எஸ்.என்.எல். ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள போஸ்ட்பெயிட் சலுகை லேன்ட்லைன் பிராட்பேன்ட் சலுகையில் ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகைக்கு அப்கிரேடு செய்ய பி.எஸ்.என்.எல். வலைதளத்திற்கு சென்ற பி.எஸ்.என்.எல். - அமேசான் விளம்பர பேனரை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம்.
அமேசான் பிரைம் இலவச சந்தாவை ஆக்டிவேட் செய்யும் போது மொபைல் நம்பர் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ரூ.18 விலையில் அன்லிமிட்டெட் வீடியோ கால் வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #BSNL
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரூ.18 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூ.18 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வீடியோ கால் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். பிரீமியம் ரீசார்ஜ் சலுகைகளில் 18% வரை கூடுதல் டாக்டைம் மற்றும் டேட்டா வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், 15 ஜி.பி. டேட்டா, ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம் மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.18 சலுகை ஜியோ வழங்கி வரும் ரூ.19 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.19 சலுகையில் 0.15 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இதுதவிர, பி.எஸ்.என்.எல். வழங்கும் இதர சலுகைகளில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.1,801 சலுகையில் ரூ.2,125 டாக்டைம், மற்றும் 15 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.1,201 சலுகையில் ரூ.1,417 டாக்டைம், மற்றும் 10 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.601 சலுகையில் ரூ.709 டாக்டைம் மற்றும் 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.18 சலுகை அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.299 சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. #BSNL #Offers
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #offer
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு 31 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படுகிறது.
புதிய பி.எஸ்.என்.எல். சலுகை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.299 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் மாதாந்திர டேட்டாவை பயன்படுத்தி முடித்து இருந்தாலும், அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.299 சலுகை முதல் முறையாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சலுகையை பயன்படுத்தி வருவோருக்கு புதிய சலுகையை பயன்படுத்த முடியாது. மாதம் 31 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைந்து விடும். எனினும் பயனர்கள் கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.
ஜியோ வழங்கும் ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு மாதம் 25 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் கூடுதலாக 500 ஜி.பி. டேட்டாவினை ஜி.பி. ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி பெற முடியும்.
பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #BSNL
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் பி.எஸ்.என்.எல். ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகைகள் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.
இரண்டு சலுகைகளும் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. ரூ.777 விலையில் 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2Mbps ஆக குறைக்கப்படும். புதிய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோர் இரண்டு சலுகைகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரூ.777 சலுகையை ஒரு வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையில் வழங்கப்படுகிறது. இதே சலுகையை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.23,310 செலுத்தலாம். ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.38,310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.241 சலுகையை மாற்றியமைத்தது. அதன் பின் இந்த சலுகையில் 75 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL
இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
“2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.
இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் சலுகைகள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இம்முறை ரூ.100 விலைக்குள் கிடைக்கும் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. #BSNL
பி.எஸ்.என்.எல். நிறுவன பிராட்பேன்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. அடிக்கடி சேவைகள் மாற்றப்படும் நிலையில், மீண்டும் ஏழு சேவைகளை மாற்றி இருக்கிறது. ரூ.100-க்கு கீழ் ஏழு சலுகைகள் மாற்றப்பட்டு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.14 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் 1 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ.40 சலுகையில் 1 ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்டதில் சிறப்பான சலுகையாக ரூ.57 இருக்கிறது. பி.எஸ்.என்.எல். ரூ.57 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.68 சலுகைக்கு 2 ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
வாரயிறுதியில் வெளியூர் செல்வோருக்கு ரூ.78 விலையில் 4 ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.82 சலுகையில் 4 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பிரத்யேக ரிங் பேக் டோன் வழங்கப்படுகிறது. ரூ.85 விலையில் கிடைக்கும் சலுகையில் 5 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL #offers
பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி, பி.எஸ்.என்.எல். பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை தேர்வு செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.
ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60Mbps ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50Mbps டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70Mbps டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6Mbps ஆக குறைக்கப்படுகிறது.
மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100Mbps வேகம் மற்றும் 2250 ஜிபி டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100Mbps டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100Mbps வேகத்தில் 3000 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. #BSNL #offers
பி.எஸ்.என்.எல். அறிவித்த 2 ஜிபி இலவச டேட்டாவிற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #BSNL #offers
பி.எஸ்.என்.எல். அறிவித்து வழங்கி வந்த 2 ஜிபி இலவச டேட்டா செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கி வரும் 10 பிரபல பிரீபெயிட் சலுகைகளில் வழங்கப்பட்ட டேட்டாவுடன், 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மான்சூன் ஆஃபர் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட கூடுதல் டேட்டா ஜியோவின் டபுள் தமாக்கா ஆஃபருக்கு போட்டியாக ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகை ரூ.186,ரூ.429, ரூ.485, ரூ.666 மற்றும் ரூ.999 பிரீபெயிட் ரீசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. இதே போன்று கூடுதல் 2 ஜிபி டேட்டா ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 விசேஷ சலுகைகளிலும் வழங்கப்படுகிறது. உண்மையில் மான்சூன் ஆஃபர் இந்தியா முழுக்க 60 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தற்சமயம் பி.எஸ்.என்.எல். இதற்கான வேலிடிட்டியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகை பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் பேக்கள் ரூ.186, ரூ.429, ரூ.666 மற்றும் ரூ.999 மற்றும் விசேஷ சலுகைகளான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444 மற்றும் ரூ.448 வழங்கப்படுகிறது.
இதன்மூலம் ரூ.186 ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்ததுய இதேபோன்று ரூ.444 விலையில் சலுகையை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தினமும் 6 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் முன்னதாக 4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
2 ஜிபி கூடுதல் டேட்டா மட்டுமின்றி, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். சேவையை வழங்கி வரும் அனைத்து வட்டாரங்களிலும் 2 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை பொருந்தும்.
பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இதுவரை 3ஜி சேவை மட்டுமே வழங்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. மற்ற நிறுவனங்கள் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வருகின்றன. பி.எஸ்.என்.எல். சார்பில் அறிவிக்கப்பட்ட இலவச டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜியோ டபுள் தமாக்கா ஆஃபர் ஜூன் 30-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
ஜியோ இலவசமாக வழங்கிய கூடுதல் டேட்டா பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி அளவு கூடுதல் டேட்டாவினை தினமும் வழங்கிவந்தது. மேலும் ஜியோ பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ராக்கி ரீசார்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #BSNL #offer
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ராக்கி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்கு பின் மற்ற நிறுவனங்களை போன்றே பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளை மாற்றியமைத்து, குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவை ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை 74 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல். STV399 சலுகையை பயனர்கள் இன்று (ஆகஸ்டு 26) முதல் பெற முடியும். எனினும் இந்த சலுகை எதுவரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
பி.எஸ்.என்.எல். ரூ.399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் மெசேஜ் உள்ளிட்டவை 74 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக பிரத்யேக ரிங் பேக் டோன் மற்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகை தேசிய ரோமிங் வழங்கப்பட்டாலும் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் வழங்கப்படவில்லை.
பி.எஸ்.என்.எல். புதிய ரூ.399 சலுகையைப் போன்று ஜியோ ரூ.349 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. ஜியோ வழங்கும் ரூ.349 சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஜியோ ரூ.398 சலுகையில் இதே சலுகைகளுடன் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும், ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
கேரளாவில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏர்டெல் போன்றே ஜியோ, வோடபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFlood #TelecomOffers
கேரளாவில் கனமழை பெய்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் நிறுவன சலுகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வோடபோன், ஜியோ, பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகளும், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு தங்களது கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
கோப்பு படம்
வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு டேட்டா தானாக தங்களது அக்கவுன்ட்-இல் கிரெடிட் செய்யப்படுகிறது.வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்ய வேண்டும். வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.
ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். அனைத்து பிரீபெயிட் பயனர்களுக்கும் 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் செய்யப்படும். ஐடியாவும் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகள் துண்டிக்கப்படாமல் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X