search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Chhattisgarh




    ராய்ப்பூர்:



    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் நவீன ரக வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaxalsGunnedDown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.

    போலீசாரை கண்ட நக்சலைட்டுகள் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #NaxalsGunnedDown #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 6500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Chhattisgarh #CannabisCaptured
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை நக்சல்கள் சேதப்படுத்தியதால் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினம் சென்ற சரக்கு ரயில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தை கடக்கும்போது இஞ்சின் உட்பட 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கரடி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #Bearattack
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள கர்சியா வனச்சரகம் அருகே இன்று காலை தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக இந்தல் சிங் ரதியா (50) என்ற விவசாயி சென்றுள்ளார்.

    அப்போது அங்கு தனது குட்டிகளுடன் வந்த பெண் கரடி அவரை தாக்கியதில் ரதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துரையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, விவசாயினுடைய உறவினர்களுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Bearattack
    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாபாட் மற்றும் டோக்கான்பல்லி இடையிலான காட்டுப்பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் நேற்றிரவில் இருந்து நக்சல் ஒழிப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, காட்டுக்குள் நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த நக்சலைட்கள் தப்பியோடி விட்டனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு இன்று பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார். #PMModi #BhilaiSteelPlant
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்த அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.

    அதன்பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைத்த அவர், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு சென்ற மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.



    அப்போது அவர் பேசுகையில், முன்னர் இங்கு சாலைகள் கூட இல்லை. ஆனால், இப்போது தரமான சாலைகளுடன் கூடிய விமான நிலையமும் அமைய உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலை உதவும்.
     
    நயா ராய்ப்பூர் நாட்டின் முதன்மையாக பசுமையான ஸ்மார்ட் சிட்டியாக விளங்குகிறது. தண்ணீர், மின்சாரம், தெரு விளக்குகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு என அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு விளங்குகிறது.

    நாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு நயா ராய்ப்பூர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்தார். #PMModi #BhilaiSteelPlant
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுடன் ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைக்கிறார். #PMModi #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

    பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான். #Naxalcommanderkilled
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாரமோங்கியா காட்டுப்பகுதியில் இன்று நக்சல் ஒழிப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சுமார் 30 நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மோட்டி ஃபார்ஸா(28) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #tamilnews ##Naxalcommanderkilled
    சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் இயக்கத்தின் துணை தளபதி மற்றும் ஆதரவாளர்கள் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Naxalencounter
    ராய்ப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள போர்டாலாவ் வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

    சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் நக்சலைட் துணை தளபதி ஆசாத் மற்றும் நக்சலைட்களுக்கு தேவையான பொருட்களை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கொடுக்கும் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. #Naxalencounter 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த உ.பி.யைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #compensationformartyrs #YogiAdityanath
    லக்னோ:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath
    ×