என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96666
நீங்கள் தேடியது "டுகாட்டி"
டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.
புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எஸ்.பி. மாடலில் குவிக்ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டுகாட்டி நிறுவனத்தின் ஹைப்பர்மோட்டார்ட் 950 பி.எஸ்.6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டை அறிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி டுகாட்டி நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
ஏற்கனவே யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிள் சில சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி டுகாட்டி டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி, வி ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 112.4 பி.ஹெச்.பி. திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பி.எஸ்.6 வெர்ஷனும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹைப்பர்மோட்டார்ட் 950- ஹைப்பர்மோட்டார்ட் 950, ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ. மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 எஸ்.பி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
உலகம் முழுக்க டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடல் மொத்தத்தில் 800 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பாஸ்ட்-ஹவுஸ் மற்றும் டுகாட்டி நிறுவனங்களின் கூட்டணியை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் 803சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கயபா சஸ்பென்ஷன், ஆப்-ரோடு சார்ந்த பூட் பெக், கழற்றக்கூடிய ரப்பர் பேட்கள், பிளாக் நிற ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகின் பிரபல ரேஸ் பைக் நிறுவனமான டுகாட்டி எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி வரும் நிலையில், இந்த மாடல் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. #Ducati #ElectricBike
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பேட்டரி வாகனங்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளன. அந்த வரிசையில் டுகாட்டி நிறுவனம் புதிதாக சேர்ந்திருக்கிறது.
ரேஸ் பைக்குகளை மட்டுமே தயாரித்து இளைஞர்களை கவர்ந்த டுகாட்டி நிறுவனம் பேட்டரி வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்காலமே இனி பேட்டரி வாகனங்களுக்குத்தான் என்று டுகாடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிளாடியோ டொமெனிகாலி சமீபத்தில் தெரிவித்தார்.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு டுகாட்டி நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான் நிர்வாக இயக்குநர் எட்வர்டு லோதே, தங்கள் நிறுவனம் பேட்டரியில் ஓடும் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
இதற்கென மிலான் பாலிடெக்னிக் பள்ளியுடன் இணைந்து பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. பேட்டரி வாகனத்திற்காக பவர் டிரைன் உருவாக்கப்பட்டு வாகன உருவாக்கத்தில் தீவிரம் காட்டியது. அதன் பின் பல்வேறு காரணங்களால் நிறுவனம் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
தற்சமயம் இந்நிறுவனம் பேட்டரி வாகனம் தயாரிக்கும் எனர்ஜிகா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் விரைவிலேயே டுகாட்டி பேட்டரி வாகனம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
டுகாட்டி நிறுவனத்தின் 959 பேனிகேல் கார்ஸ் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #ducati
இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி இந்தியாவில் 959 பேனிகேல் கார்ஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலின் விலை ரூ.15.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலாகும். இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் பேனிகேல் கார்ஸ் மாடல் டுகாட்டி கார்ஸ் மோட்டோ ஜிபி நிறங்களை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய நிறத்தில் 959 பேனிகேல் கார்ஸ் ஸ்போர்ட் தோற்றத்தில் அசத்துகிறது.
டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலில் 955சிசி சூப்பர்குவாட்ரோ இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 157 பி.ஹெச்.பி. பவர் @ 10,500 ஆர்.பி.எம். மற்றும் 107.4 என்.எம். டார்கியூ @ 9000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர்பைக் மாடலில் மேம்படுத்தப்பட்ட சேசிஸ் மற்றும் தலைசிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.
இத்துடன் டூயல்-சேனல் போஷ் ஏ.பி.எஸ்., டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல், டுகாட்டி குவிக் ஷிஃப்ட், இன்ஜின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ரைடு-பை-வையர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 959 பேனிகேல் கார்ஸ் மாடலில் ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரைடிங் மோடும் வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எலெக்டிரானிக்ஸ் செட்டிங்களை மாற்றக்கூடிய வசதிகளை வழங்குகிறது.
எனினும் இந்திய அம்சத்தை பொருத்த வரை ஒலின்ஸ் சஸ்பென்ஷன், லித்தியம் பேட்டரி, ஒலின்ஸ் ஸ்டீரிங் டேம்ப்பர் மற்றும் டுகாட்டி பெர்ஃபார்மேன்ஸ் டைட்டானியம் சைலன்சர் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
இந்தியாவில் டுகாட்டி 959 பேனிகேல் கார்ஸ் மாடலை வாடிக்கையாளர்கள் சென்னை, டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சின் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும்.
டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே டுகாட்டி ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மற்றும் 1260 எஸ் மாடல்களை வெளியிட்டிருந்தது.
புதிய மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் யூனிட்கள் குறித்து டுகாட்டி எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மல்டிஸ்டிராடா விநியோகம் ஜூலை மாத மத்தியில் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மற்றும் 1260 எஸ் மாடல்களின் விநியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. புதிய மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் 1262 சிசி, L-ட்வின், DVT டெஸ்டாஸ்டிரெட்டா இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 158 பி.ஹெச்.பி. பவர், 129.5 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் டெஸ்மோடிரோமிக் வேரிபிள் டைமிங் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை மல்டிஸ்டிராடா 1260 பைக் பீக் மாடலில் ஓலின்ஸ் சஸ்பென்ஷன், டெர்மிகோனி எக்சாஸ்ட் சிஸ்டம், கார்னெரிங் ஏ.பி.எஸ்., பை-டைரெக்ஷனல் க்விக்-ஷிஃப்டர், கார்பன்-ஃபைபர் பாகங்களான வின்ட்ஸ்கிரீன், முன்பக்க மட்கார்டு மற்றும் ஏர் இன்டேக் கவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் வெவ்வேறு சேசிஸ்கள், முன்பக்கம் புதிய ஜியோமெட்ரி மற்றும் நீண்ட ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்டான்டர்டு மல்டிஸ்டிராடா 1260 மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற வீல்பேஸ், ரேக் மற்றும் டிரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் ரேஸ் சார்ந்த லிவெரி, எடை குறைவான அலுமினியம வீல்கள், ஹேன்டிள்பாரில் பேக்லிட் ஸ்விட்ச்கள், நான்கு டிரைவிங் மோட்கள், வீலி கன்ட்ரோல் மற்றும் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஎஃப்டி டிஸ்ப்ளே, எல்இடி ஹெட்லைட் மற்றும் கார்னெரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் மோட்டார்சைக்கிள் விலை ரூ.21.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X