search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை மிக எளிமையாக மேற்கொள்ளும் புது வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp



    ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. 

    புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.

    புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.



    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

    புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் சோதனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.



    புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை. #WhatsApp
    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #Twitter



    ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ கன்ட்ரோல்கள் மிகவும் பயனுள்ள அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.



    திரையின் வலது புறம் அல்லது இடது புறங்களில் சிறிய கிளிக் செய்வதன் மூலம் வீடியோக்களை ஐந்து நொடிகளுக்கு முன்னரும், பின்னரும் ஃபார்வேர்டு செய்ய முடியும். யூடியூப் ஆப் இதற்கு ஏற்றார் போல் வேளை செய்கிறது, எனினும் இருமுறை கிளிக் செய்யும் போது வீடியோ பத்து நொடிகளுக்கு ஃபார்வேர்டு ஆகிறது.

    ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் செயலியின் எந்த வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் புது அம்சங்கள் அனைவருக்கும் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. #Twitter #Apps
    ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. #Facebook #Apps



    மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜிஃப் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு கீபோர்டு தேவைப்படும். இதைக் கொண்டு ஜிஃப்களை சேமித்துக் கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.

    இதனுடன் எமோஜிக்களை வெவ்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதியும், எமோஜிக்களுக்கான வசதியும் வழங்கப்படுகிறது. எமோஜிக்களை பயன்படுத்த, வலதுபுறமாக இருக்கும் இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து நிறங்கள், நிக்நேம் மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.



    மாற்றம் செய்யும் போது, நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை நீங்கள் சாட் செய்வோரும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இனி மெசஞ்சரில் ஃபைல், பிக்சர், வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். தரவுகளை பகிர்ந்து கொள்ள “+” பட்டனை கிளிக் செய்து நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அவற்றை அனுப்பலாம்.

    வெறும் 10 எம்.பி. மெமரி கொண்டிருக்கும் மெசஞ்சர் லைட் செயலியில் வீடியோ காலிங் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் சேர்க்கப்பட்டது. செயலியில் பிழைகள் அடிக்கடி சரி செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை அடிக்கடி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. #Facebook #Apps
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் மேற்கொள்ளும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதேபோன்ற சலுகையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஏற்கனவே அறிவித்து, வழங்கி வருகின்றன. வோடபோன் 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒன்றை ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும். 

    வோடபோன் வழங்கும் கேஷ்பேக் கூப்பன்களை மை வோடபோன் செயலி மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போன்ற சலுகையை முன்னதாக ஏர்டெல் அறிவித்தது. எனினும் ரிலையன்ஸ் ஜியோ இந்த சலுகையை நீண்ட காலமாக வழங்கி வருகிறது.



    மை வோடபோன் செயலியின் படி 100 சதவிகித கேஷ்பேக் சலுகை ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு எட்டு கூப்பன்களும், ரூ.458 ரீசார்ஜ் செய்வோருக்கு ஒன்பது கூப்பன்கலும், ரூ.509 ரீசார்ஜ் செய்வோருக்கு 10 கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

    சில வட்டாரங்களில் ரூ.199 ரீசார்ஜ் செய்வோருக்கும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் பீகார், ஜார்கண்ட் பகுதிகளில் உள்ள வோடபோன் பயனர்கள் ரூ.409 (மற்ற வட்டாரங்களில் ரூ.399) சலுகையை பயன்படுத்த முடியாது. இதே போன்று இமாச்சல பிரதேச பயனர்கள் ரூ.458 சலுகைக்கு மட்டும் 100 சதவிகித கேஷ்பேக் பெற முடியும்.

    பீகார் மற்றும் ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற வட்டாரங்களில் ரூ.399 சலுகை ரூ.409 விலையிலும், ரூ.458 சலுகை ரூ.459 விலையிலும் ரூ.509 சலுகை ரூ.529 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முறையே 70 நாட்கள், 80 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. #Vodafone #Offers
    ஐபோன் மாடல்களில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் செயலியை அனுமதிக்க ஆப்பிள் ஒப்புக் கொண்டுள்ளது. #Apple #TRAI



    டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

    ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

    அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.



    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

    எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

    ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது. #Apple #TRAI
    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களது ஸ்டோரிக்களை அவர்கள் விரும்பும் நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. #Instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிக்களை நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் (close friend list) வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வசதியின் மூலம் பயனர்கள் உருவாக்கும் ஸ்டோரியை அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யும் சிலருடன் மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் பயனர்கள் தங்களது தனிப்பட்ட உணர்வுகளை அவர்கள் விரும்பும் சிறு குழுவுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஸ்டோரியில் நண்பர்களை சேர்க்க ப்ரோஃபைல் ஆப்ஷனின் பக்கவாட்டில் காணப்படும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் (Close Friends) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு உங்களுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்களை உங்களால் மட்டுமே பார்க்க முடியும். இங்கு தங்களை சேர்த்துக் கொள்ள யாரும் கேட்க முடியாது. 



    மேலும் இங்கு நீங்கள் விரும்பும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்டோரிக்களை பதிவிடும் போது, அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, அனைவரிடம் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் மட்டும் என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். 

    இன்ஸ்டாவில் யாரேனும் உங்களை தங்களது நெருங்கிய நண்பராக சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களது ஸ்டோரிக்களை பார்க்கும் போது பச்சை நிற பட்டை தெரியும். இத்துடன் அவர்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை சுற்றி பச்சை நிற வளையம் தெரியும். 
    இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. #Instagram #Apps

    இன்ஸ்டாவில் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் நிறைந்து இருந்ததாக சுமார் 13 செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகளை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். #Google #PlayStore #Apps



    கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.

    பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.

    இசெட் (ESET)  பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



    எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ் ஆனது.

    மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது. 

    கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில் ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கம் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மற்றவர்களுடன் எளிதில் இணையும் வகையில் வழிமுறைகளை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாகவே, சில பயனர்களின் ப்ரோஃபைல் பக்கத்தின் மேல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கின்றனர்.

    புதிய மாற்றங்களின் படி புதுவித ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்கள் செயலியின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் தெரிகிறது. புதிய அப்டேட் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ப்ரோஃபைல் க்ரிட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது.



    அடுத்த சில வாரங்களில் இதுபோன்று பல்வேறு மாற்றங்களை இன்ஸ்டாகிராம் செயலியில் பார்க்க முடியும். அந்த வகையில் ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்களிடையே நேவிகேட் செய்யும் முறைகளில் மாற்றம் செய்யப்படலாம். இவை செயலியின் தோற்றத்தை சுத்தமாகவும் பயன்பாட்டை எளிமையாக்கும் படி இருக்கும்.

    செயலியின் புதிய மாற்றங்களை வெவ்வேறு கட்டங்களில் இன்ஸ்டாகிராம் சோதனை செய்யும் என்றும், இவற்றை வெவ்வேறு இணைப்புகளில் சோதனை செய்து, பயனர் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் அனுபவத்தை மேம்படுத்தும்.

    முன்னதாக இந்த வாரத்தில் போலி பின்தொடர்பாளர்கள் மற்றும் ஸ்பேமர்களை முடக்க செயலியில் முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி செயலிகளை பயன்படுத்தி ஃபாளோ, லைக், கமென்ட் உள்ளிட்டவற்றை பெறும் பயனர்களின் அக்கவுன்ட்களை முடக்கத் துவங்கியது. 

    மேலும் இன்ஸ்டா பயனர்கள் தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுல்ளது. இதன் மூலம் பயனர்களின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவோ அல்லது ஸ்பேம் அக்கவுன்ட் போன்று பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.
    வாட்ஸ்அப் செயலியில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து நேரடியாக வீடியோக்களை பார்க்க புதிய வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Whatsapp #Apps



    வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை வழங்குவதற்கான பணிகளில் அந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய அப்டேட்டகள் செயலியின் அடிப்படை வசதிகளுடன் பயனுள்ள பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. 

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோட்டிஃபிகேஷன்களில் இருந்தபடியே வீடியோக்களை நேரடியாக பார்க்கும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிகிறது. 

    இதன் மூலம் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே மெசேஜ்களுக்கு பதில் அளிக்கும் வழிமுறை அதிகளவு மேம்படும். இதுவரை வாட்ஸ்ப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் வீடியோ மெசேஜ்களை பார்க்க, செயலியை திறந்து குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். புதிய வசதி வழங்கப்படும் போது, நோட்டிஃபிகேஷனில் இருந்தே நேரடியாக வீடியோ பார்த்து விட முடியும்.



    இதன் மூலம் மெசேஜை பார்த்தாலே பயனர்களின் லாஸ்ட் சீன் மாறிவிடும். மேலும் புதிய வசதியுடன் நோட்டிஃபிகேஷனில் இருந்தபடியே செயலியில் வரும் அனைத்து வித மெசேஜ்களையும் பார்க்க முடியும் என்பதோடு, லாஸ்ட் சீன் மாறாமல் இருக்கும். சில பயனர்களுக்கு லாஸ்ட் சீன் நேரம் பெரியதாக இல்லை என்றாலும், சிலர் அவற்றை முக்கியமானதாக பார்ப்பர். 

    லாஸ்ட் சீன் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களின் குறுந்தகவல்களை பார்த்து இருப்பார்களா, இல்லையா என்பதை குறுந்தகவல் அனுப்பியவர் பார்த்து புரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர் ஆன்லைனில் இருந்துகொண்டு குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை WABetaInfo மூலம் தெரியவந்து இருக்கிறது. புதிய வசதியை வாட்ஸ்அப் முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களை அழிப்பதாக ஆப்பிள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
    ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

    தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



    நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியாவுக்கான தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டார். வாட்ஸ்அப் செயலி பயனர்கள் எண்ணிக்கை உலகில் மற்ற நாடுகளை விட அதிக பயனர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

    முன்னதாக அபிஜித் போஸ் மொபைல் பேமென்ட் நிறுவனமான இசிடேப் இணை நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இத்துடன் வாட்ஸ்அப் இந்தியாவின் முதல் தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் போஸ் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். கலிபோர்னியாவை தொடர்ந்து முதல் முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் நாடு முழுக்க பணியாற்றும் குழுவினை அபிஜித் உருவாக்க இருக்கிறார். இதற்கான தலைமையகம் குர்கிராமில் அமைகிறது.



    அபிஜித் போஸ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை மேம்படுத்தி, சிறு மற்றும் பெரும் வியாபார மையங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கச் செய்வதில் பணியாற்றுவர் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    “இந்தியாவின் அதிவேக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பொதுமக்கள் இணைந்திருந்து ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் புதிய சேவைகளை வழங்குவதில் வாட்ஸ்அப் குறிக்கோளாக கொண்டுள்ளது. வெற்றிபெற்ற தொழிலதிபரான அபிஜித் இந்தியா முழுக்க வியாபாரங்களை மேற்கொள்ளும் நுணுக்கங்கள் அறிந்து வைத்திருக்கிறார்,” என வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரியான மேட் இடிமா தெரிவித்தார்.
    ஃபேஸ்புக்கில் ‘யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக்’ வசதி உலகம் முழுக்க வழங்கும் பணிகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. #Facebook



    யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் அம்சம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பயன்பாட்டு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். முன்னதாக இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சத்திற்கான டேஷ்போர்டு ஃபேஸ்புக் செயலியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளனர் என்பதை அன்றாடம், கடந்த வாரம் உல்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    அன்றாடம் சேவையை பயன்படுத்துவதற்கான நேரத்தை செட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் ஃபேஸ்புக் நினைவூட்டும், பின் இதை நிறுத்திக் கொள்ள முடியும். மேலும் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், நியூஸ் ஃபீட் மற்றும் பிரென்ட் ரிக்வஸ்ட் செட்டிங்களை ஷார்ட்கட் மூலம் இயக்க முடியும். 

    இரண்டு ஷார்ட்கட் மெனுக்களும் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபேஸ்புக் அம்சத்தினை இயக்க ஃபேஸ்புக்கின் மோர் டேப் -- செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி -- யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.




    கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வெல்பீயிங் அம்சங்களை தங்களது இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் சமீபத்தில் வழங்கியது. இதுமட்டுமின்றி டிஜிட்டல் வெல்பீயிங் அம்சம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும், இந்த அம்சங்கள் பயனர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெல்பீயிங் அம்சங்களில் செயலியை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யும் வசதிகள் வழங்கப்படவில்லை. 

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சம் நியூஸ் ஃபீட் பிரவுசிங் நேரம், ஸ்டோரி பார்க்கும் நேரம் அல்லது ப்ரோஃபைல் படங்களை பார்ப்பது, போஸ்ட், கமென்ட் மற்றும் க்ரூப்களில் உரையாடுவது உள்ளிட்டவற்றில் செலவிடும் நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கும் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இந்த வசதிகள் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×