search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்
    X

    இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிக்களை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்

    இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் தங்களது ஸ்டோரிக்களை அவர்கள் விரும்பும் நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. #Instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிக்களை நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள க்ளோஸ் ஃபிரென்ட் லிஸ்ட் (close friend list) வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வசதியின் மூலம் பயனர்கள் உருவாக்கும் ஸ்டோரியை அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யும் சிலருடன் மட்டும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் பயனர்கள் தங்களது தனிப்பட்ட உணர்வுகளை அவர்கள் விரும்பும் சிறு குழுவுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஸ்டோரியில் நண்பர்களை சேர்க்க ப்ரோஃபைல் ஆப்ஷனின் பக்கவாட்டில் காணப்படும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் (Close Friends) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு உங்களுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்களை உங்களால் மட்டுமே பார்க்க முடியும். இங்கு தங்களை சேர்த்துக் கொள்ள யாரும் கேட்க முடியாது. 



    மேலும் இங்கு நீங்கள் விரும்பும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஸ்டோரிக்களை பதிவிடும் போது, அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, அனைவரிடம் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் மட்டும் என இரண்டு ஆப்ஷன்கள் தெரியும். 

    இன்ஸ்டாவில் யாரேனும் உங்களை தங்களது நெருங்கிய நண்பராக சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களது ஸ்டோரிக்களை பார்க்கும் போது பச்சை நிற பட்டை தெரியும். இத்துடன் அவர்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை சுற்றி பச்சை நிற வளையம் தெரியும். 
    இன்ஸ்டாகிராமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. #Instagram #Apps

    இன்ஸ்டாவில் க்ளோஸ் ஃபிரென்ட்ஸ் அம்சம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×