search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

    மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.



    சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் எப்படி உதவும்?

    இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப்-இல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்அப் பின்னணியில் சோதனை செய்யும். சோதனையில் ஏதேனும் கோளாறு இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். “வாட்ஸ்அப் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால், குறிப்பிட்ட குறுந்தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும்,” என WaBetaInfo தெரிவித்து இருக்கிறது.

    சிவப்பு நிற குறியீடு கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வலைத்தளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைத்தளத்துக்கான முகவரியை (லின்க்) அனுப்பலாம்.

    வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் போலி செய்திகளை முடக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வந்தது குறி்ப்பிடத்தக்கது.



    இதுவரை போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

    - வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை பிளாக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனருக்கு அறிமுகம் இல்லாதவர்களை வாட்ஸ்அப்-இல் பிளாக் செய்ய முடியும்.

    - க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கச் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

    - குறிப்பிட்ட க்ரூப்களில் யார் யார் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்களே முடிவு செய்ய முடியும்.

    - க்ரூப் அட்மின்களை டீமோட் (Demote) செய்யும் வசதி. இந்த வசதியை கொண்டு ஏற்கனவே க்ரூப் அட்மினாக இருக்கும் ஒருவரை க்ரூப் உறுப்பினராக மாற்ற முடியும்.

    - ஃபார்வேர்டெட் (Forwarded) லேபல் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வசதியை தெரிவித்து இருக்கிறது. புதிய அம்சம் மூலம் ஸ்டோரிக்களில் சரியான பின்னணி இசையை சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பயனர்களை கவர முடியும்.

    முன்னதாக இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மொபைலில் உள்ள பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். ஸ்டோரியில் ஸ்டிக்கர், போட்டோ அல்லது வீடியோவை சேர்க்க கோரும் ஐகானை அடுத்த இடத்தில் மியூசிக் ஐகான் காணப்படுகிறது.

    இன்ஸ்டாவில் உள்ள புதிய மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி திறக்கும். இங்கு உங்களுக்கு விருப்பமான பாடல், மனநிலைக்கு ஏற்றதை பிரவுஸ் செய்தோ அல்லது இன்ஸ்டா சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரபல இசை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.



    விரும்பிய பாடல் அல்லது இசையை தேர்வு செய்ததும் அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்து, உங்களின் ஸ்டோரிக்கு ஏற்றவாரு அதனை செட் செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்டோரியில் இசையை சேர்த்தபின் அதனை நேரடியாக போஸ்ட் செய்யும் முன் பிரீவியூ செய்ய முடியும்.

    இன்ஸ்டாவில் வீடியோவை பதிவு செய்யும் முன் பாடல் அல்லது இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யவும் முடியும். எனினும் இந்த வசதி தற்சமயம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்டோரியை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள இசையை கேட்க முடியும். இத்துடன் பாடலின் தலைப்பு மற்றும் பெயரை குறிப்பிடும் ஸ்டிக்கரும் தெரியும்.

    ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான இசையை வழங்கியுள்ள நிலையில், தினமும் புதிய பாடல்களை சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அம்சம் தாமதமாக இது தான் காரணமாக கூறப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் எனப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி பீட்டா முறையில் குறிப்பிட்ட வாடிக்கைாயளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். 

    உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்பத்துகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள செயலியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய நடையில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அனைவருக்கும் வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் எழுப்பப்பட்டு இருக்கும் சந்தேகங்களுக்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பதில் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்ய தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற மையத்தை (UPI) வழங்குகிறது. புதிய யுபிஐ சார்ந்த சேவை ஆர்.பி.ஐ நிர்ணயித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறதா என்ற வகையில் மத்திய தொழில்நுட்ப துறை சந்தேகங்கள் அமைந்திருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அனுமதியை தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் (NPCI) எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை ஆர்.பி.ஐ. விதிகளுக்கு உட்படும் வகையில் இருக்கிறதா என்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை.

    முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்ப் பேமென்ட்ஸ் அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான வங்கி சப்போர்ட் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.




    ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.

    புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும். 

    “ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.



    கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.

    மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.

    புகைப்படம்: நன்றி @wongmjane
    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.

    வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.



    வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    பேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் க்ரோம் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் வசதியை கொண்டு பயனர்கள் இன்டர்நெட் இன்றி செய்திகளை படிக்க முடியும்.



     
    ஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை. 

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோரும் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், அதிவேக இணைய இணைப்பு பரவலாக கிடைப்பதில்லை. தினசரி டேட்டாவை கொண்டு பிரவுசிங் செய்ய நினைத்தால், டேட்டா வேகம்நம் அமைதிக்கு ஆப்பு வைக்கிறது.

    இதுபோன்ற பிரச்சனைகளை சரியாக புரிந்து வைத்திருக்கும் கூகுள், தனது க்ரோம் செயலியில் புதிய சேவையை சேர்த்திருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் செயலி நீங்கள் வைபை நெட்வொர்க் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் செய்திகள் மற்றும் தானாக டவுன்லோடு செய்து வைக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளை படிக்க முடியும்.



    மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சில இணையப்பக்கங்களை ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், இவற்றை பயன்படுத்த செய்திகளை பயனர் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் பயனர் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை டவுன்லோடு செய்யும்.

    கூகுள் உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஆஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் மற்றும் சீரற்ற இணைய வசதி கொண்ட சந்தைகளில் வழங்க ஏதுவாக இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளில் வழங்கப்படுகிறது.
    விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

    இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.

    வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன்கள் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் செயிலியின் ஹோம் திரையில் இருக்கும் க்விக் அக்சஸ் பட்டனை ஒரு முறை க்ளிக் செய்து நேவிகேட் செய்ய முடியும்.

    முன்னதாக அடிக்கடி பயணிக்கும் முகவரிகளை செட் செய்து, பின் சர்ச் பாரில் ஒற்றை க்ளிக் மூலம் செட் செய்த முகவரிகளை நேவிகேட் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளுக்கு பின் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டன்ட் கொண்டும் வீடு அல்லது அலுவலகத்துக்கான நேவிகேஷன்களை பெற முடியும்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அம்சம் கொண்டு வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்று வர எளிமையானதாக மாற்றும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்திய பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் சர்ச் பாரில் வீடு மற்றும் அலுவலகத்துக்கான ஷார்ட்கட் இருப்பது மட்டுமின்றி கூகுள் மேப்ஸ் ஹோம் ஸ்கிரீனில் க்விக் ஆக்ஷன் பட்டன்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    தற்போதைய ஷார்ட்கட்களுக்கு மாற்றாக புதிய பட்டன்கள் வழங்கப்படுமா அல்லது இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பல்வேறு ஆன்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் மேப்ஸ் புதிய அம்சம் வழங்கப்படாத நிலையில் விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி PIXABAY | TWITTER / TotalSecurily
    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

    ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

    புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



    முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை துவங்கப்பட்ட அம்சம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டோரீக்களை யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இதுகுறித்த தகவல் வழங்கப்படாது.

    இதுகுறித்து பஸ்ஃபீட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்சமயம் ஸ்னாப்சாட் வழங்குவதை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது குறித்து நோட்டிஃபிகேஷன் வழங்கப்படாது.



    முன்னதாக சோதனை காலத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால், புஷ் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படாமல், சிறப்பு குறியீடு மூலம் பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டது. இது ஸ்னாப்சாட் சேவைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது, ஸ்னாப் நிறுவன சேவையில் ஒவ்வொரு முறை ஸ்கிரீஷாட் எடுக்கப்படும் போதும் பயனருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தகவல் அனுப்பப்படும்.

    இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் மெசேஜ் (Direct Message) சேவையில் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீக்களில் இருந்தே நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி சேர்க்கப்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்தே குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொண்டு ஷாப்பிங் செய்ய முடியும்.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்யும் வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

    அடிடாஸ் முதல் அரிட்சா வரை, உலகின் பிரபல பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப் செய்ய முடியும். புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளவே பலர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.



    சமீபத்திய ஆய்வின் படி இன்ஸ்டாகிராம் வாசிகள், அவ்வப்போது ஸ்டோரீக்களை பார்த்து அவர்கள் விரும்பும் பிரான்டுகளின் புதிய பொருட்கள் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரான்டுகளும் தங்களது பொருட்களின் விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பயனர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியின் சமீபத்திய அப்டேட் சென்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தேர்வு செய்யப்பட்ட பிரான்டு பொருட்களை வாங்கிட முடியும். 
    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.

    செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும். 



    மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும். 

    ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.
    ×