என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்மின்ஸ்"
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மூன்று பேரும் அதிக ஓவர்கள் வீசினார்கள். குறிப்பாக மெல்போர்னில் இந்தியா 160 ஓவர்களுக்கு மேல் விளையாடியது.
சிட்னி டெஸ்ட் முடிந்த உடன் இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதன்பின் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
2019-ல் உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் வருவதால் மும்மூர்த்திகளான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோரின் பந்து வீச்சு பளுவை குறைப்பதற்காக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
மூன்று பேருக்கும் ஓய்வு அளித்தால் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக இரண்டாம் நிலை பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்.
இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.
எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.
இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒருவேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.
ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. #AUSvIND #TeamIndia
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் மேற்கொண்டு 50 ரன்கள் சேர்த்தால்கூட ஆஸ்திரேலியாவுக்கு அது கடின இலக்காக அமையும். #AUSvIND #TeamIndia
உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பெர்த் மைதானம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் பவுன்சராகவும், வேகமாகவும் செல்லும். இதனால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் திணறுவார்கள். தற்போது பெர்த்தில் வெளியிடத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். முதன்முறையாக இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.
பொதுவாக பெர்த் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்காது. இதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். ஸ்விங் பெரிய அளவில் இருக்காது. ஆனால் தற்போது ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளைய ஆட்டத்திற்கு ஆடுகளம் ஒப்படைக்கப்படும்போது புற்கள் பெரிய அளவில் வெட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆடுகளம் எப்படி செயலாற்ற போகிறது என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியா ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருடன் வேகப்பந்து ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் அடிலெய்டில் விளையாடிய அதே 11 பேர்தான் பெர்த்தில் களம் இறங்குவார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த் டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரெயொரு போட்டி கொண்ட டி20-யிலும், இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இவர்கள் நான்கு பேரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 16-ந்தேதி தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில் முதல்தர போட்டியில் விளையாடுகிறார்கள்.
உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.
தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.
மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஸ்மித், வார்னர் இல்லாததால் மாற்று வீரர்களை கொண்ட வலுவான அணியை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் முதுகு வலியில் இருந்து இன்னும் 100 சதவீதம் நிவாரணம் பெறவில்லை என்பதால் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்