search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    அரியூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு பல ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    அரியூர் அருகே ஜமால்புரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து சூப்பர் வைசர் அண்ணாதுரை மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கடப்பாறை கொண்டு கடையின் சுவற்றை இடித்து துளைபோட்டனர். உள்ளே புகுந்த அவர்கள் பல ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை அள்ளி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது தொடர்பாக அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இதேபோல் கும்பல் துளையிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு கேமரா பொருத்து பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு பக்க சுவரை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் பள்ளி கல்லூரிகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்காடு பகுதியிலிருந்து செய்யாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.

    விசாரணையில் அவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், பனங்காட்டேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது25), கொத்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பது தெரியவந்தது.

    இவர்கள் கூட்டாக சேர்ந்து செய்யாறு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியிலும், அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாராசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகமூடி அணிந்து வந்து காவலரை தாக்கி அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தினை கொள்ளையடித்துள்ளனர்.

    பின்னர் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை தவிர்க்க கண்காணிப்பு கேமராகளை உடைத்தும், கேமிரா காட்சிகள் பதிவாகும் கருவியையும் எடுத்துகொண்டு சென்றது தெரிய வந்ததுள்ளது.

    இதே போல வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து திருப்பதி, கணேசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகமூடி கொள்ளையர்கள் 4 பேரையும் செய்யாறு போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தங்குடியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 51). மாட்டுத்தாவணியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த பணம், 2 பவுன் நகை, 4 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.

    இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை தெற்குவெளி வீதியில் பட்டாணி கோவில் தெற்கு சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). நேற்று இரவு இவர், தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணியன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் சிம்மக்கல் பச்சையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் முத்துமணி (21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கீரைத்துறை தாயுமானவர் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (23). நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் திவாகரன் (20) என் பவர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடினார்.

    இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திவாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் அடுத்த ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    கடந்த 3-ந் தேதி மதுமதியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்23 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டியில் வீடு புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை அள்ளி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது38). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக கொடைக்கானல் பள்ளங்கியில் விவசாய நிலம் உள்ளது.

    புயல் காரணமாக இவரது விளை நிலம் மற்றும் தோட்டத்து வீடு பாதிக்கப்பட்டால் அதனை சீரமைப்பதற்காக குடும்பத்துடன் அங்கே தங்கி இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு செல்லப்பாண்டியின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை தூக்கி அருகில் இருந்த தோட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.

    பீரோவை உடைத்து உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இன்று காலையில் தோட்டத்தில் பீரோ கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் செல்லப்பாண்டி வீட்டில் கொள்ளை நடந்தது தெரிய வந்தது. இது குறித்து செல்லப்பாண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வீட்டிற்குள் புகுந்து பீரோவை தூக்கி சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாண்டிபஜாரில் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் இருந்து பணப்பையை பறித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் மார்சலின் கரோல்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த இவர், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். பாண்டிபஜாரில் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஓரமாக அமர்ந்து கரோலின் பயணித்தார்.

    மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்தனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென கரோலின் வைத்திருந்த பணப்பையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி மார்சலின் கரோல் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார்.

    திருடப்பட்ட பையில் 3500 அமெரிக்க டாலர், 13 ஆயிரம் சுவிஸ் பவுண்ட், ரூ.5 ஆயிரம் இந்திய பணம் ஆகியவை இருந்தன. இவைகளை மீட்டு தரும்படி புகாரில் அவர் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    லக்காபுரத்தில் செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் சங்கர்(வயது 32). அரச்சலூர் அடுத்த பூ மாண்டன் வலசு 60 வேலாம்பாளையத்தை சேர்ந்தவர்.

    இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து உள்ளனர்.

    பிறகு கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த துணிகர சம்பவம் லக்காபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரனை நடத்தி, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கபிஸ்தலம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக வடசறுக்கை கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அர்ஜூன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 2 ஊழியர்கள் விற்பனையை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு புறப்பட்டனர். 

    அப்போது கடையில் விற்பனையான பணம் ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்திருந்தனர். கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின்ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அர்ஜூன் உள்பட 3 பேரையும் வழி மறித்தனர். இதனால் வண்டியை நிறுத்தினர்.

    அந்த சமயத்தில் திடீரென அந்த கும்பல் அர்ஜூன் உள்ளிட்ட 3 பேரும் மீதும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலைகுலைந்து போன அவர்கள் கண் எரிச்சலால் அலறினர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    நள்ளிரவில் நடுரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த துணிகர சம்பவம் பற்றி டாஸ்மாக் சூப்பர் வைசர் ராஜசேகர் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பெங்களூரைச் சேர்ந்த தம்பதி சசிகாந்த் சைலஜா.இவர்கள் குழந்தையின்மை சிகிச்சைக்காக அமைந்தகரை வெற்றி விநாயகர் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றிருந்தனர். திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10சவரன் நகை, லேப்-டாப், ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது டி.பி. சத்திரம் நாலு அடுக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் என்பது தெரியவந்தது.

    அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் தனியாக சென்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவன்.

    அவந் மீது டி.பி. சத்திரம், கீழ்பாக்கம், அண்ணா நகர் அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ஏற்கனவே 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈத்தாமொழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 10 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழியை அடுத்த தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 35).

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளையன் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    மயிலம்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அகமதுசுலைமான்(வயது 35). நகை வியாபாரி. இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு வியாபாரியிடம் வெள்ளி செயின், மோதிரம், கைசெயின் உள்ளிட்ட நகைகளை வாங்கினார். 3 கிலோ 479 கிராம் எடையுள்ள அந்த நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில் அகமது சுலைமான் ஏறினார். வெள்ளி நகைகள் அடங்கிய அந்த பையை தனது இருக்கையில், கால் வைக்கும் பகுதியில் வைத்திருந்தார். அந்த ஆம்னி பஸ், விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாதிராப்புலியூர் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் இரவு 9 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சாப்பிட சென்றனர். அதன்படி அகமது சுலைமானும், பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் அந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அகமதுசுலைமான், பஸ் முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் அந்த பை கிடைக்கவில்லை. அதனை ஆம்னி பஸ்சில் வந்த மர்மநபர்கள், கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்தது யார்-யார்?, பாதிராப்புலியூரில் இருந்து டிராவல்ஸ் பஸ் புறப்பட்டபோது பயணம் செய்யாதவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை சேகரித்து, அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்-கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

    இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் தாலுகா மற்றும் கள்ளிக்குடி போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த நாகையா மகன் செந்தில்குமார் (வயது30) என தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கள்ளிக்குடி பகுதியில் திருப்பரங்குன்றம் ராஜீவ்நகரைச் சேர்ந்த திருச்செல்வம் (44) என்பவர் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளிக்குடி போலீசார் திருச்செல்வத்தை கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×