search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    சேலத்தில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பக்கத்தில் இருந்த நபர் பறித்து சென்றார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், பொன்னம்மாப்பேட்டை, கோபால் செட்டிதெருவை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 72). இவர், நேற்று முன்தினம் சேலம் டவுன் ஆனந்தா இறக்கம் பகுதியில் சேலம் நோக்கி ஷேர் ஆட்டோவில் சென்றார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. 

    ஆட்டோவில் வந்த போது பக்கத்தில் இருந்த நபர் நகையை திருடியது தெரியவந்தது. இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
    கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் பிரதாப் சிங் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார். கோவையில் ஹார்ட்வேர்ஸ் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது சொகுசு காரில் இரவு மீண்டும் பாலக்காட்டுக்கு புறப்பட்டார்.

    கார் பாலக்காடு ரோடு மரப்பாலம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு கும்பல் காரை வழிமறித்தது.பிரதாப் சிங் காரை நிறுத்தினார். அப்போது அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பிரதாப் சிங்கிடம் இருந்த ரூ. 1 ½ லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். காருக்குள் இருந்து இறக்கி விட்டு தாக்கி காரையும் பறித்துச்சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங் இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார். டி.எஸ்.பி. வேல்முருகன் மேற்பார்வையில் மதுக்கரை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். #tamilnews
    சேலம் அருகே தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த காட்சிகள் சி.சி.டி.வி. காமிராவில் பதிவானதால் திருட்டு கும்பலை பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    மேச்சேரி:

    சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 47). இவர் இரும்பாலையில் சீனியர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரும் மேச்சேரியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் காத்தமுத்து என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகளை கட்டியும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மேச்சேரியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு வீட்டை விற்றதில் வாங்கிய பணம் ரூ. 10 லட்சத்தை வயர் கூடையில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் தொங்கி விட்டிருந்தார்.

    மேச்சேரி சுப்ரமணி நகரில் நடைபெறும் வீட்டு வேலை பணியை பார்வையிட்டு விட்டு திரும்பி வருவதற்குள் பைக்கில் இருந்த ரூ.10 லட்சம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் கொண்ட கும்பல் வந்ததும் அதில் ஒருவர் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    அந்த 3 பேரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். அப்போது 3 பேரும் வங்கியில் இருந்து வெங்கடாச்சலம் பணம் எடுத்தது முதல் பின் தொடர்ந்து வந்ததும், அவர்கள் 3 பேரும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது.

    இதனால் திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேரையும் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்கள் பிடிபட்டால் தான் இது போல வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டனரா? என்பது தெரிய வரும்.
    குத்தாலம் அருகே கடையில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மந்தகரை மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 50). இவர் அதே பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு அவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை கடைக்கு லாரியில் பொருட்கள் வந்ததால் அவைகளை வாங்கி வைக்க சென்றார். அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது மாடி பகுதியில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை ஜாகீர் உசேன் தொழிலாளர்களுடன் சென்று மடக்கி பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவர் ராஜகோபாலபுரம், ராஜா காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செல்வ ரத்தினம் (23) என்று தெரிய வந்தது. அவர் கடையில் கொள்ளையடிக்க பூட்டை உடைத்து மாடியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மதி வாலிபர் செல்வரத்தினத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவோணம்:

    தஞ்சையை அடுத்த காரியா விடுதி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மகன் லபக் என்கிற ஆனந்தராஜ். இவர் மீது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கில் கேரள போலீசார் திருவோணத்தில் முகாமிட்டு ஆனந்தராஜை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஊரணிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதை சுதாரித்து கொண்ட பாண்டியன் ஆனந்தராஜை பிடித்து திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ஆனந்தராஜை பிடித்து திருவோணம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை வில்லிவாக்கம் முகவரியில் ஆதார் கார்டு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூர், கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்தராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ‘பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது கடும் கண்டனத்துக்கு உரியது என வைகோ கூறியுள்ளார். #PetrolPrice #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.82.41 காசுகள், டீசல் விலை லிட்டர் ரூ.75.39 காசுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.72 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.31 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று மத்திய அரசு வழக்கமான பல்லவி பாடுகிறது.

    பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. நடப்பு 2018-ல் மட்டும் ரூபாய் மதிப்பு 10 விழுக்காடு சரிந்துவிட்டது.

    உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளைத் தாறுமாறாக உயர்த்தி வரும் மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.34-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.37-க்கும் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

    மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 காசும், டீசல் மீது ரூ.15.33 காசும் உற்பத்தி வரி விதிக்கின்றது. இதனுடன் தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு 34 விழுக்காடு என்றும், டீசலுக்கு 25 விழுக்காடு என்றும் வரி விதிக்கிறது.

    மத்திய, மாநில அரசுகளின் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்துக்கு போய்க்கொண்டு இருக்கின்றன.



    இதன் சங்கிலித் தொடர் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. மக்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ‘பகல் கொள்ளை’ போல பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி சுரண்டலில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, வாட் வரி விதிப்புகளை உடனடியாகக் குறைப்பதுடன், ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #PetrolPrice #Vaiko
    ஆவடியில் விஞ்ஞானி-அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    திருநின்றவூர்:

    ஆவடி, இம்மானுவேல் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கய்யா. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் இன்று காலை ராமலிங்கய்யாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதேபோல் அருகில் உள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை அதிகாரி மீனாட்சி நாதன் என்பவரின் வீட்டுக்கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார்.

    அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என்று உடனடியாக தெரிய வில்லை.

    இதுகுறித்து வெளியூரில் உள்ள ராமலிங்கய்யாவுக்கும், மீனாட்சி நாதனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னரே எவ்வளவு நகை-பணம் கொள்ளைபோனது என்பது தெரியவரும்.

    வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த ஓடைவெளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது முதலியார் பேட்டை சுப்பு கொலை வழக்கு, விழுப்புரத்தில் நடந்த ஜெனா கொலை வழக்கு,

    ஏனாம் ஜெயிலில் மர்டர் மணிகண்டனை கொல்ல முயன்ற வழக்கு மற்றும் லாஸ்பேட்டையில் அரிசி வியாபாரியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    மேலும் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி வழக்குகளும் இவர் மீது உள்ளன.

    இந்த நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் போலீசாரின் பிடியில் சிக்காமல் தனது கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அஸ்வினை போலீசார் தேடி வந்தனர். அதோடு அஸ்வினை பிடிக்க பிடிவாரண்டு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதிரடிப்படை போலீசார் அஸ்வினை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரவுடி அஸ்வின் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ரவுடி அஸ்வின் தப்பி ஓடினார். ஆனால், போலீசார அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் இருந்த வீச்சரிவாள், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்வின் 2 பவுன் தங்க செயின் வைத்திருந்தார்.

    இது குறித்து அஸ்வினிடம் போலீசார் விசாரித்த போது அந்த செயின் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்குளம் பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் பறித்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து தங்க செயினையும் பறிமுதல் செய்து அஸ்வினை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பட்டு நூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இருங்காட்டுகோட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து ராமலிங்கம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சேலையூர் அருகே விவசாயிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    வேளச்சேரி:

    கோவிலஞ்சேரி அகரம் மெயின் ரோட்டைசேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவர் சேலையூரை அடுத்த ராஜ கீழபாக்கத்தில் உள்ள வங்கிக்கு இன்று வந்திருந்தார். அங்கு ரூ.2 லட்சத்தை எடுத்து ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டை கீழே சிதறி விட்டனர்.

    பின்னர் சீனிவாசனிடம், கீழே 10 ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. அது உங்களுடையதா? என கேட்டனர். அதை எடுக்க அவர் கீழே குனிந்த போது கையில் வைத்திருந்த ‘பேக்’கையும், செல்போனையும் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பீகார் மாநிலத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தின் காவலரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Bihar
    அபிராமபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்.

    சென்னை:

    அபிராமபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்.

    அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் அடிக்கடி கொள்ளை போன பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக வலம் வந்தது தெரிய வந்தது.

    அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி சீனிவாசன், மாரிமுத்து, சங்கர், ராஜேஷ், லட்சுமணன் குமார், நாகூர் கனி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களில் நாகூர் கனி திருட்டு நகைகளை வாங்கியவர் என்பது தெரிய வந்தது. கொள்ளையர்களிடம் இருந்து 70 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையர்கள் சொகுசு காரில் பகல் நேரத்தில் அந்த பகுதியில் வலம் வந்து நோட்டமிட்டுள்ளனர். பகல் முழுவதும் சுற்றி வரும் அவர்கள் இரவு நேரத்தில் பூட்டிக்கிடக்கும் வீடுகள் எது என்பதை கண்டுபிடித்து அந்த வீடுகளில் மட்டும் கொள்ளையடித்துள்ளனர்.

    கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×