search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    வாலாஜாவில் கிணற்றை எட்டி பார்த்த 3-ம் வகுப்பு சிறுவன் தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி (21) இவர் நேற்று இரவு சவாரி முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அவரை வழி மறித்து மிரட்டி பையிலிருந்த ஆயிரம் ரூபாய் பனத்தை பிடுங்கியதாக கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் மாவு(எ) மோகன்பாபு (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பணத்தை திருடியவர் இவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
    நாகர்கோவிலில் நேற்றிரவு வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்டக்கரையைச் சேர்ந்தவர் அலோசியஸ் பானு, (வயது 54), இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேசல் (24). இவர்கள் இருவரும் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரேசல் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த ரேசல் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    இதையடுத்து அலோசியஸ் பானு கண் விழித்தார். அவர், திருடனை பிடிக்க முயன்றார். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் வீட்டின் மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் மர்மநபர் திருடிச்சென்றிருந்தார்.

    வீட்டின் ஜன்னல் வழியாக கையை நுழைத்து கதவை திறந்து கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது. இது குறித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கொள்ளையன் குறித்து ரேசலிடம் போலீசார் அடையாளங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    மாங்காடு அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    ராஜ்குமாரும், அவரது மனைவி கலைச்செல்வியும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். திடீரென ராஜ்குமார் கண் விழித்தபோது வீட்டுக்குள் யாரோ ஒருவர் நடமாடுவது போல தெரிந்தது.

    உடனே திருடன் திருடன் என்று கணவன்-மனைவி இருவரும் அலறினார்கள். அப்போது வாலிபர் ஒருவர் வெளியே ஓடினார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்து 11 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம்.

    வேலூர் தோட்டப்பாளையத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

    சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

    ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 767 மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பழங்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

    சம்பவத்தன்று இரவு சூப்பர்வைசர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது பணம் எதுவும் இல்லை.

    இதையடுத்து கொள்ளையர்கள் கடையில் இருந்த 767 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் சூப்பர்வைசர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது மதுபாட்டில்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.87 ஆயிரத்து 630 ஆகும்.

    திண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் புகுந்த கொள்ளையர் அங்கு பணம், நகை கிடைக்காததால் ஏமாற்றத்தில் திரும்பினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள கே.புதுக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் உள்ளது. இதன் செயலாளராக ஞானசேகரன் (வயது48) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 21-ந் தேதி மாலை பணிகள் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார். மறுநாள் அரசு விடுமுறை என்பதால் நேற்று காலையில் வங்கிக்கு வந்தார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அலுவலக ஜன்னல் கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஞானசேகரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலகம் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் நகை மற்றும் பணம் வைக்கும் அறை உள்ளது. மாடிப்படி வழியாக மேலே ஏறி வந்த கொள்ளையர்கள் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    ஆனால் அந்த அறையில் நகை, பணம் எதுவும் இல்லை. கீழ் தளத்தில் உள்ள லாக்கரில்தான் பல கோடி மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    கோடிக்கணக்கான நகை மற்றும் பணம் உள்ள இந்த அறையில் சி.சி.டி.வி. கேமிரா கிடையாது. காவலர்களும் இல்லை. இதனாலேயே இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் இதே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    பழனியில் பேன்சி கடையில் புகுந்து ரூ.1½ லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அடிவாரம் பூங்கா சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார். ரூ.1½ லட்சம் பணத்தை இரவு நேரம் என்பதால் கடையிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மேற்கூரை வழியாக கடைக்குள் புகுந்தனர். அங்கு இருந்த ரூ.1½ லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து புகாரின் பேரில் அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து கடையில் கொள்ளை போனது. மேலும் நடந்து சென்ற பெண்களிடமும் நகை பறிக்கப்பட்டது.

    இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கம்பத்தில் கவரிங் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் காளவாசல் தெரு 5-வது தெற்கு வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது50). இவர் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் கவரிங் நகைக்கடை வைத்துள்ளார்.

    தனது குடும்ப உறுப்பினர் விஷேசத்திற்காக பத்திரிகை கொடுக்க கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுதாகர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மோப்ப நாய் பென்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த நாய் யுவராஜா தியேட்டர் சந்திப்பு வரை ஓடிவிட்டு நின்றது.

    இதனையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் ஏதேனும் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுக்க பொதுமக்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்த வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் பகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தொடர் வழிப்பறியால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் பகுதிக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லிப்ட் கேட்பதுபோல் இரவு முதல் விடியற்காலை வரை கொள்ளை கும்பல் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக வேலூரில் இருந்து பள்ளிகொண்டா டோல்கேட் இடைப்பட்ட பகுதியில் வாகன ஓட்டிகளை மறித்து செல்போன், நகை, பணம் உள்பட உடமைகளை பறிக்கின்றனர். வழிப்பறியின் போது, வாகன ஓட்டிகளை தாக்குகின்றனர்.

    2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து தோல் மூலப்பொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை, வேலூர் அடுத்த பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    லாரி டிரைவரை தாக்கி அங்கேயே கட்டிப்போட்டு விட்டு லாரியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதியில் அந்த லாரியை மீட்கப்பட்டது.

    லாரியை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிஓடி விட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வேலூர் மார்க்கமாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மஞ்சூர்:

    எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் சோத்தாராம்(வயது 47). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் சோத்தாராம் கடையை திறந்தார். அப்போது அங்கு வலதுபுற சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு கடையை ஒட்டியுள்ள டீக்கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கணேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், தனது கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் டீக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, சுவரில் துளையிட்டு அருகிலுள்ள அடகு கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடனே எமரால்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், சுவரில் துளையிட்டு கடைக்குள் நுழைவதும், கண்காணிப்பு கேமராவை சுவரை நோக்கி திருப்பி வைத்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் மில்டன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஜாரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். 
    விருத்தாசலம் அருகே ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). நெய்வேலி என்.எல்.சி. ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது சொந்த கிராமமான ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது வழக்கம். மற்ற நாட்கள் அந்த வீட்டை பூட்டி விட்டு நெய்வேலி வந்து விடுவார்.

    நேற்று மாலை ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அங்குள்ள வேலைகளை முடித்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு இரவு நெய்வேலி வந்து விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முருகனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், பட்டுப்புடவைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி., குத்துவிளக்கு உள்பட பல பொருட்களை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கொள்ளையர் கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள எம்.பரூர் கிராமத்திலும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டின் பெட்டியில் இருந்த 10 பவுன் நகை, பட்டுப்புடவைகளை கொள்ளையடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம்.

    இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து அதே பகுதியில் உள்ள மருதமுத்து என்பவரின் வீட்டின் முன்பு சென்றனர். அங்கு மருதமுத்து தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தார்.

    இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிராம் தங்க நகையை கொள்ளையடித்தனர். அங்கு வேறு எந்த பொருட்களும் சிக்கவில்லை. 2 கிராம் தங்க நகையோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர் மருதமுத்து வீட்டின் அருகே உள்ள வினோத்குமார் என்பவரது வீட்டையும், நயினார் தெருவில் உள்ள சக்திவேல் என்பவரது வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஏதாவது பொருட்கள் உள்ளதா? என பார்த்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதனை தொடர்ந்து தெற்குத்தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டிலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதேபோல் வெங்கடேசன் என்பவரது வீட்டுக்கும் கொள்ளையர்கள் சென்றனர். அவரின் வீட்டு பூட்டை உடைக்க முடிய வில்லை. இதனால் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது. அதனால் அதனை அங்கேயே போட்டு விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்ற னர்.

    கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    காரைக்காலில் கோவில் சிலை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    காரைக்கால்:

    காரைக்கால் ரெயில்வே நிலையம் அருகில் உள்ள கீழ வெளி ராஜுவ்காந்தி நகரில் கன்னியாகுறிச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இரவு கோவில் நிர்வாகக்குழு தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஊர்க்காரர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

    வழக்கம் போல் கோவிலை திறக்க சென்ற போது, கோவில்கதவின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான அம்மன்சிலை திருட்டுப்போனது தெரிவந்தது. மேலும், கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து, ராஜமாணிக்கம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி, போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    ×