search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே வசித்து வருபவர் முத்தையா (வயது65). இவர் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் மறறும் எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடி சென்றனர். இன்று காலை ஊருக்கு திரும்பிய முத்தையா தனது வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வீரபாண்டி தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    உத்தமபாளையம் சப் டிவிசனுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. சுருளி கோவிலில் கொள்ளையடிக்க வந்த கும்பல் பூசாரியை கொலை செய்தனர். அணைப்பட்டி கோவிலில் உண்டியல் பணம் திருடப்பட்டது. ராயப்பன்பட்டியில் 2 வீடுகளில் கொள்ளை நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். குறிப்பாக பூட்டி இருக்கும் வீடுகளையும் கோவில்களையும் குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கே.ஜி.பி. நகரில் வசிப்பவர் வர்மா. ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர். இவர் கடந்த 28-ந் தேதி உடல் நிலை சரியில்லாத மனைவியை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த வைரக்கற்கள் பதிக்கபப்ட்ட 60 பவுன் நகை மற்றும் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு கங்கா தரன் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    பழைய குற்றவாளிகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி வேல் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வேதாரண்யம் பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஓரடியங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுவந்தனர்.

    இதுகுறித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு போலீஸ் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த தொடர் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீர்மூலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 28), அமிர்தரூபன் (24), தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ரமேஷ் (26), பாலசிங்கம் (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரின் உருவத்தை கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தக்கலை:

    தக்கலை அருகே சாமியார் மடத்தை அடுத்த கவியலூரில் தூய சகாய அன்னை ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் பங்குத்தந்தையாக ஜாண் பால் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி காவலாளியாக உள்ளார்.

    நேற்று மாலை வழக்கம் போல் ஆலயத்தின் மின் விளக்குகளை எரியவிட்டு விட்டு ராமசாமி சென்றார். இன்று காலை மின்விளக்குகளை அணைக்க வந்த போது ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள குருசடியின் பக்கத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருந்தனர்.

    இதுகுறித்து ராமசாமி ஆலயச் செயலாளர் பென்சி ராணி மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசாரும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஆலயத்தின் எதிர்புரம் உள்ள கடையில் கண்காணிப்பு காமிரா ஒன்று உள்ளது. அந்த காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையன் ஒருவன் கடப்பாறை கம்பியுடன் வந்து உண்டியலை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பென்சிராணி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    வாணியம்பாடியை சேர்ந்தவர் கவுதம் சந்த் அவரது தங்கை திருமணம் புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.

    நேற்று இரவு திருமண வரவேற்பு நடந்தது. அதில் கலந்து கொள்ள கவுதம் சந்த் தனது காரில் மண்டபம் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் காரை ‘பார்க்‘ பண்ணுவதாக கூறி சாவியை வாங்கி சென்றார்.

    உடனே காரில் வைத்திருந்த நகையை எடுக்க கவதம் சந்த் கார் நிறுத்தும் இடத்துக்கு வந்தார். அங்கு கார் கதவு திறந்த கிடந்தது. உள்ளே வைத்திருந்த 7½ பவுன் தங்க நகை மற்றும் செல்போனையும், மர்ம நபரையும் காணவில்லை.

    அவன் நகையை கொள்ளையடித்து விட்டு கார் சாவியுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்துது. இது குறித்து பேசின்பிரிட்ஜ் போலீசில்புகார் செய்தார். குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜிம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    பெரியகுளத்தில் வீட்டின் பீரோவை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே லெட்சுமி புரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 33). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாயாருடன் பெரிய குளத்துக்கு வந்து விட்டார். அப்போது வீட்டின் சாவியை அருகில் இருந்த மின் மீட்டர் பெட்டிக்கு அருகில் வைத்துச் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை திருடிச் சென்றனர்.

    வீட்டுக்கு திரும்பிய கேசவன் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தர்மபுரியில் ஜெயில் சூப்பிரண்டு-இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி அன்னசாகரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறை துறை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் சண்முகம், ஹாலில் அவரது மனைவியும் தூங்கி கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் கொள்ளை கும்பல் திறந்து இருந்த ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவின் தாழ்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் செயினை வெட்டி எடுத்தனர். அவர் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்து இருந்தார். அதை வெட்டி எடுக்க முயன்றபோது அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே கொள்ளைளயர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே யாரும் இல்லை.

    இதே கொள்ளையர்கள் கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு இவர்களது வீட்டிற்கு எதிரே குடியிருந்த செல்வம் என்பவரின் வீட்டு கதவையும், பூட்டையும் உடைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை.

    தர்மபுரி பாரதிபுரத்தில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரி அசோகன் வீட்டில் கொள்ளை நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    பாரதிபுரம் டி.ஏ.எம்.எஸ். காலனி அருகே வசிப்பவர் அசோகன் (52). இவரது மனைவி கர்லின்ராஜ். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கீழ்வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். மாடியில் நள்ளிரவு 2.30 மணிக்கு கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஹோம் தியேட்டர் பிளேயர், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

    இவர்கள் வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 6 பவுன் நகை கொள்ளை போனது. இதேபோல இவர்களது பக்கத்து வீடுகளில் வசித்த 2 பேரின் வீடுகளிலும் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டையார்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி துணி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் ரெடிமேடு துணிக்கடை உள்ளது. இந்த கடையில் விக்னேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் துணி எடுக்க கடைக்கு சென்றனர். ரெடிமேடு துணி வகைகளை எடுத்துக்காட்டிய ஊழியரை தாக்கி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கொள்ளை அடித்தனர்.

    மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஜவுளிக் கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விக்னேஷ் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் உருவமும், தாக்கியதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. முகேஷ், விமல், சூர்யா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து துணிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    போரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாபுசங்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டு போடுவதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றார்.

    நேற்று அதிகாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே விவசாயி வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 48) விவசாயி, கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

    நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த 2பவுன் நகை பணம் 2 ஆயிரம் மற்றும் ஒரு கம்ப்பூட்டர் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து உள்ளனர்.

    வீடு பூட்டி கிடப்பதை கண்டு நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் அவர்கள் திருக்குவளை மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38) கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அய்யப்பன் ( வயது 19)ஆகியோர் என்பதும் அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதில் லாரி உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி சாந்திமதி (வயது 45).இவர்களுக்கு பொன்னி, தாமரை ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதி (70) என்பவரும் வசித்து வருகிறார். 

    பொன்னியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ஆஸ்பத்திரி செலவுக்காக பொன்னி தனது நகைகளை புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து விட்டு ரூ.6 லட்சம் பெற்றார். பின்னர் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தாயார் சாந்திமதியுடன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டியின் பின்னால் சாந்திமதி இருந்தார். அப்போது யாரோ அவர் மீது அரிப்பு பொடியை தூவியதாக தெரிகிறது.

    இதனால் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும் பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு சாந்திமதி ஒரு அறைக்கு சென்று விட்டார். கட்டிலில் ரங்கநாதனின் தாயார் பார்வதி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து கட்டிலில் இருந்த பணப்பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் அவர் அங்கு நின்ற மற்றவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்னி வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வருவதை பார்த்து நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் ஒரு வங்கியின் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது கட்டிட காண்டிராக்டர் ரங்க நாதன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண் பாண்டி (22), மூர்த்தி (48) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக் கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் பெரும்பாலும் அரிப்பு பொடியை தூவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

    மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×