search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    கல்லூரி மாணவியிடம் பைக்கில் வந்து நகை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன் றத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி, ரெயில்வே ஊழியர். இவரது மகள் வித்யா (வயது21). பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை இவர் நிலையூர் பிரிவு சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று வித்யா அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோல் எஸ்.எஸ்.காலனி துரைச்சாமி நகர் ஷாலினி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (62). கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே கோவிலுக்கு சென்ற நேரத்தில் கதவை உடைத்து பணம் - நகைகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை, ஜமால் உசேன் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை ராமையன், தாய் சேதும்மாள், மனைவி மலர்விழி, மகன் பவித்ரன் ஆகியோர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமையன் மற்றும் குடும்பத்தினர் இது குறித்து தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு இது குறித்து வழக்குபதிவு செய்தனர். வீட்டின் கதவை உடைத்து பணம் - நகைகளை திருடி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலுக்கு சென்ற நேரத்தில் கதவை உடைத்து பணம் - நகைகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காட்பாடியில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற போதை வாலிபர், காலி மதுபாட்டிலை வீசி சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி ரங்காலயா திருமண மண்டபம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றிரவு ஒரு வாலிபர் மதுபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அவர் ஏ.டி.எம். மையம் முன்பு கையில் காலி மதுபாட்டிலை வைத்துக் கொண்டு ரகளை செய்தார்.

    போதை வாலிபரின் எல்லை மீறிய அட்டகாசம், ஏ.டி.எம். மையத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

    இதை கவனித்த அந்த வாலிபர், மதுபாட்டிலை கேமராவை மீது வீசி உடைக்க முயன்றார். இதில் கேமரா சேதமடைந்தது.

    பின்னர், ஏ.டி.எம். மையத்தில் புகுந்த வாலிபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மீண்டும் தள்ளாடி கொண்டு அங்கிருந்து சாவகாசமாக தப்பிச்சென்றார்.

    இக்காட்சிகள் முழுமையாக, சேதமடைந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், போதை வாலிபரின் உருவம் தெள்ளத்தெளிவாக இல்லை. அவர் யார்? என்பதை அடையாளம் காணுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுப்பற்றி, வங்கி சார்பில் விருதம்பட்டு போலீசில் இன்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து, ஏ.டி.எம். மையம் இருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், அலுவலகங்களில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடி ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது48). கார்பண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு மர்ம நபர் இவரது வீட்டிற்குள் நைசாக உள்ளே நுழைந்தார். ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவனை பிடிப்பதற்காக எழுந்து ஓடினார்.

    தனது மனைவி ஓடுவதை பார்த்து கணவரும் பின்னால் ஓடினார். ஆனால் வாசலில் நின்றிருந்த மற்றொரு ஆசாமி அவர்கள் மீது கல்லை தூக்கி போட வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

    கொள்ளையடித்த நபர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாக பழனிச்சாமி தெரிவித்தார்.

    மேலும் இங்கு கொள்ளையடிப்பதற்கு முன்பாக தாமரைப் பாடியிலும் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்காததால் அக்கும்பல் தப்பி ஓடியது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை தாக்கி முகமூடி கொள்ளையர் பணம் பறித்து சென்றனர்.

    எனவே அதை போன்ற முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அதே நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனரா? என்று திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கட்டிகானப் பள்ளி புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் வசித்து வருபவர் கணபதி(50). இவர் எம்.சி.பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி, குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்கள் சமீபத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே புதியதாக வீடு கட்டி அங்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் இன்னும் பழைவீட்டிலிருந்து பொருட்களை மாற்றாமல் அன்றாட தேவைக்கு குறைந்த அளவிலான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று, மாலை வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டு வசதி வாரிய வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து ஆசிரியர் கணபதி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டை பார்வையிட்டனர். அத்துடன் கைரேகை நிபுணரையும் வரவழைத்து, அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவு செய்தனர். அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே செட்டிக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பழனியம்மாள். கடந்த 27-ந் தேதி பழனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாரூர் போலீஸ இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே வீட்டு பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் மேலும் 3 வீடுகளில் திருட முயற்சி செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமம் குடிதெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கண்ணன் (வயது 38).

    இவர் கம்பரசம்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் மற்றும் பணிக்கு கண்ணன் சென்று விட்டனர். கண்ணனின் மனைவி தனியாக இருக்க பயந்து வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளைபோன தங்கம் மற்றும் வெள்ளி நகை, பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொள்ளிடம் நெ.1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கண்ணனின் வீடுபூட்டி கிடைப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் கொள்ளைபோன வீட்டின் அருகே உள்ள 3 வீடுகளில் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்று உள்ளனர் என தெரிய வந்தது.

    இது குறித்து கொள்ளிடம் நெ.1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ஈரோடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த சென்றவர்களில் ஒருவன் பிடிபட்டான். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

    கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.

    பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.

    உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.

    இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
    மது குடிக்க பணம் தராததால் சித்தப்பாவை தாக்கி நகை, பணத்தை பறித்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது40). இவரது அண்ணன் செல்வம். இவரது மகன்களான ஜெயக்குமார், உதயகுமார் ஆகிய 2 பேரும் அடிக்கடி கருப்பையாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று மது குடிக்க பணம் தருமாறு கருப்பையாவிடம் அவர்கள் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., மின் விசிறி மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.6,500 பணத்தையும் ½ பவுன் மோதிரத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    இது குறித்து தட்டிக்கேட்ட கருப்பையாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீஸ் நிலையத்தில் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாரிமுனையில் செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் ராஜா பிள்ளை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மின்ட் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தினர். பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி அருகே சென்றபோது பூக்கடை போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

    அப்போது ஒருவன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குள் தப்பி ஓடினான். அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ்குமார் என்றும், புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் மற்றொரு கொள்ளையனை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த அபிமன்யு என்பவனை கைது செய்தனர்

    அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய அரவிந்த் என்பவரை பூக்கடை போலீசார் தேடி வருகிறார்கள்.

    போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். நேற்று மதியம் அவர் வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் கார்த்திகேயனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா அவனிடம் விசாரணை நடத்தினார்.

    அவன் குன்றத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த அருண்குமார் என்ற பச்சை என்பதும் ஏற்கனவே பல முறை சிறை சென்றவர் என்பதும் தெரிய வந்தது. ஒரு வழப்பறி வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த பச்சை குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தான்.

    அவன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சென்ற போது மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனிடமிருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். #Tamilnews

    வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபட்டார்.

    கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் நதீம் தோல் வியாபாரி. மற்றும் குடும்பத்தினர் வாணியம்பாடி நியூ டவுனில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.

    பெங்களூரில் இருந்து திரும்பிய அப்துல்சமத் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இது பற்றி வாணியம்பாடி டவுன் போலீசஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.

    முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் வீட்டின் அருகில் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் கொள்ளை நடந்தது வாணியம்பாடி போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

    போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    வத்தலக்குண்டுவில் பிடிபட்ட கொள்ளை கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். வீடுபுகுந்து நகை-பணம் கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வந்தனர்.

    இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்தனர். ஒருசிலர் தனியார் காவலாளிகளை நியமித்து தங்களை பாதுகாத்தனர். இருந்தபோதும் கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி மைக்செட் மற்றும் ஆம்பிளிபயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை மர்மகும்பல் திருடிச்சென்றது. இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முருகன் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6 பேர் கொண்ட கும்பலை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் தீவிரமாக விசாரிக்கின்றனர். முதற்கட்டமாக கொள்ளை கும்பலில் 14 பேர் உள்ளது தெரியவந்தது.

    இவர்கள் வேறு ஏதும் இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் மோட்டார் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் நிலையம் அருகே மைக்செட் உரிமையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேனி அருகே கோவில் உண்டியலை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் புலிக்குத்தி கிழக்குத் தெருவில் பெருமாள் சாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் கோவில் உண்டியலை பணத்துடன் திருடிச் சென்றது.

    மறுநாள காலை கோவிலுக்கு வந்த நிர்வாக குழுவினர் உண்டியல் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே வீரபாண்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 21) இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    தேனி அருகே வீரபாண்டி வயல்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 45). இவரது மனைவி வீரமணி (வயது 39). இருவரும் அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு தேனி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    ஜக்கம்மாள் கோவில் அருகே வந்த போது இவர்களை பைக்கில் பின் தொடர்ந்த கொள்ளையர்கள் வீரமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கர்ணன் செல்போனையும் பறிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பிடித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் பதட்டமடைந்து தப்பி ஓட முயன்றனர்.

    இதில் தம்பதிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். படுகாயமடைந்த கர்ணன் மற்றும் வீரமணி தேனி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×