search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    கொடைக்கானல் அருகே 3 முறை திருட்டு நடந்த கோவிலில் மீண்டும் கொள்ளை நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறை அருகே கொம்பபட்டியில் காளியம்மன், சந்தனமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலில் பூஜை முடிந்தபிறகு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.

    கோவிலில் இருந்த 3 அடி உயரம் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. கோவிலின் மற்ற பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இந்த கோவிலில் கடந்த சில வருடத்திற்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடு போனது. அதன்பிறகு சில மாதங்கள் கழித்து கோவில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த அம்மனின் வெண்கல சிலை மாயமானது.

    அந்த சிலை தண்ணீர் இல்லாத ஒரு தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு கோவிலின் ஒரு பகுதியில் சேவலை வெட்டி அதன் ரத்தத்தை மர்ம நபர்கள் சுவரில் தடவி விட்டு சென்றனர்.

    தொடர்ந்து 3 முறை கொள்ளை நடந்த கோவிலில் தற்போது மீண்டும் உண்டியல் திருட்டு நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இக்கோவிலுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதோடு கொள்ளையர்களையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி அரசு அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தேனி:

    தேனி அன்னஞ்சி விலக்கு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் சாந்தகுமார் (வயது50). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர்கள் இருவரும் நாகர்கோவிலில் நடந்த ஒரு ஜெபகூட்ட நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அப்போது இவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இவர்கள் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரொக்க பணம், ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 800 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 800 ஆகும். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஜஸ்டின் சாந்தகுமார் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி, கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருத்தணி பைபாஸ் சாலை ஏரிக்கரை பகுதியில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ரவிக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் கதவை மூடிவிட்டு அறையில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். ரவிக் குமார் வேறொரு அறையில் தூங்கியதால் அவருக்கு கொள்ளை நடந்தது தெரிய வில்லை.

    இன்று அதிகாலை அவர் எழுந்தபோது வீட்டில் நகை- பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    தாம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
    ஆலந்தூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 29). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி சாலையில் கைக்கெடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை சந்தீப் பூட்டி விட்டு சென்றார்.

    வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க சந்தீப் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டார். இதுபற்றி சேலையூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள் கைக்கெடிகாரங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்து ரூ.35 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கைக்கெடிகாரங்களை அவர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த மாதம் கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி நகர் வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்த மற்றொரு கெடிகாரக்கடையிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கெடிகாரங்கள் கொள்ளைபோனது குறிப்பிடத்தக்கது. 
    திருவள்ளூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (51). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேப்பம்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

    செஞ்சி அருகே மின்வாரிய ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் தேவனூரில் உள்ள மின்சார வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று இரவு மாடு கன்று ஈன்றது. இதனால் முருகன் தனது வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இன்று காலை வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு முருகன் திரும்பி வந்தார். வீட்டின் கதவை உடைக்கப்பட்டது இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மர்ம மனிதர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை சம்பவம் பற்றி சத்தியமங்கலம் போலீசுக்கு முருகன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுங்கையூரில் வீட்டின் பூட்டைஉடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    கொடுங்கையூர் எழில்நகர் தொப்பை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலான்கோ. இவர் தனது வீட்டு அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்றிருந்தார். இன்று காலையில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரவோடு இரவாக உடைத்து, சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் சில நாட்களாக இணைய சேவை இல்லாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு பாதுகாப்பு பணியிலும் யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 17 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறியுள்ளார். இச்சம்பவத்தின் தொடர்புடைய அனைத்து கொள்ளையர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #ATMLoot
    அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    அவனியாபுரம்:

    அவனியாபுரம் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் ஞானசி காமணி (வயது 55). இவரது மனைவி ஜான்ஸ் பெல் ராணி. கோடை விடுமுறை யை முன்னிட்டு இவர்கள் 10 நாட்கள் நாகர்கோவில் சென்றனர்.

    நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந் தன.

    இது குறித்து அவனியா புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்tசெல்வன், போலீஸ்காரர்கள் ராஜபாண்டி, முனியாண்டி ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    பீரோவில் இருந்த 6 பட்டுச்சேலைகள், வெள்ளி பொருட்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக ஜான்ஸ் பெல்ராணி தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    புதுவை சத்யா நகரில் ஆட்டோ டிரைவரின் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சத்யா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு வாடகை வீட்டில் 2-வது தளத்தில் சீனிவாசன் (வயது 41) என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை ஆட்டோ தொழிலுக்கு சென்று விட்டார்.

    அவரது மனைவி தமிழரசி வீட்டின் கீழ் தளத்தில் படிக்கட்டில் அமர்ந்து அருகில் குடி யிருந்தவர்களிடம் பேசி விட்டு பின்னர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    தமிழரசி பக்கத்து வீட்டுக் காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே மனைவியிடம் நகை பறித்த கொள்ளையர்களை தடுத்த கணவரை கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவரது மனைவி விஜயா. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் திருவெள்ளைவாயில் உள்ள பஜாருக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    திருவெள்ளைவாயிலை தாண்டி சிறிது தூரத்தில் வந்த போதுமோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயராமனையும், விஜயாவையும் வழி மறித்தனர். திடீரென விஜயா அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயராமனை வெட்டினர். மேலும் விஜயாவையும் சரமாரியாக தாக்கினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தேவதானம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அங்கு வந்தார். அவரையும் கொள்ளை கும்பல் தாக்கி விட்டு 10 பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஜெயராமனின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது மனைவி விஜயா மற்றும் ஆறுமுகம் ஆகியோரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். விஜயாவின் நிலைமை மோசமாக உள்ளது. ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையை தடுத்த முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் அருகே வீட்டை உடைத்து 11 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52), ஆட்டு பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகவடிவு.

    இவர்களது மகள் ஜெயராமன். இவரை சாத்தான்குளத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது கோடை விடுமுறையையொட்டி ஜெயராமன் தனது 5 வயது மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். ஜெயராமன் தனது நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் கழற்றி வைத்திருந்தார்.

    நேற்றிரவு சுப்பிரமணியன் ஆட்டு பண்ணைக்கு தூங்கச் சென்றார். வீட்டில் சண்முகவடிவு, ஜெயராமன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தூங்கினர். அதிகாலையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் பீரோவில் இருந்த பொருட்களை சிதறியடித்த கொள்ளையர்கள் அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.6,500 ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பியோடி விட்டனர். இன்று காலை கண்விழித்து பார்த்த சண்முக வடிவு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே பழைய கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×