search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • தமிழ்நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள் தான்.
    • பருவக் காலம் மாற்றம் குறித்து சிறுமி ஒருவர் பேசியது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது.

    இதில் தலைமை விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அவர் தலைமை பண்பு குறித்து மாணவர்களிடம் பேசினார்.

    சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதே போன்று தான் காலை உணவு திட்டத்தையும் இந்திய அளவில் தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளது.

    இந்திய அளவில் ஐ.டி.சி பாலிசியை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மிகச்சிறந்த தலைவர்கள் மக்களை படிக்கக்கூடியவர்கள். தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இணைத்து கருத்துகளை தெரிவிக்கும் தலைவராக கலைஞர் இருந்துள்ளார்.

    தமிழ்நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள் தான்.

    கம்யூனிகேசன் என்பது வளர்ந்து வருவதுடன் மாறி கொண்டே செல்கிறது. அதனால் தான் அரசியலில் தவறுகள் ஏதும் நடைபெற்றால், அது தொழில் நுட்பத்தால் வைரல் ஆகிறது. தொழில் நுட்பம் இளைஞர், இளம் பெண்களின் உலகமாக உள்ளது.

    பருவக் காலம் மாற்றம் குறித்து சிறுமி ஒருவர் பேசியது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தகவல் தொழில்நுட்பம் தான்.

    தகவல் தொழில்நுட்பம் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அதை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். உலகம் இன்று இளைஞர்கள் சமுதாயமாக உள்ளது.

    வீட்டை விட்டு பெண்கள் வெளியே போககூடாது. ஆண்கள் வெளிநாடு போக கூடாது என பொய்யான, போலியான பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

    பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் கம்யூனிகேஷனில் எந்த இடத்தில் இருக்கோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் தமிழ் உணர்வு இல்லை என்றார்கள். இங்கு நான் தமிழில் தான் பேசுகிறேன். இங்கு இருக்கிற இளைஞர் கூட்டம் தான் மெரினாவில் போராட்டம் நடத்தி சாதனை படைத்தனர்.

    தமிழ் என்பது கம்யூனிகேசன் மொழி மட்டுமல்ல. தமிழ் நமது அடையாளம். நம்முடைய அடையாளம் நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம். நாம் இன்னும் தமிழ் பேசுகிறோம். தமிழ் உணர்வோடு இருக்கிறோம். நம்மிடம் பேச நினைப்பவர்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்மொழி என்பது நமது அடையாளம். பிற மொழியை திணிக்க கூடிய உரிமை யாருக்கும் இல்லை.

    மீண்டும் மொழி போர் வரக்கூடாது என்பது முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே அந்த நிலையானது மீண்டும் வரக்கூடாது.

    பெரியார் சொன்னது போல உலகுடன் பேச ஆங்கிலம் தேவை. நாட்டில் பேசுவதற்கு தாய்மொழி தான் தேவை.

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக உள்ளது. தமிழிசை சவுந்திரராஜன் ஆடை கட்டுபாடு குறித்து பேசியது தொடர்டான கேள்விக்கு, பெரியார் கூறியது போல ஆடையும், அலங்காரமும் பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை நாங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞருக்கு பிறகு தி.மு.க.வில் வெற்றிடம் உருவாகிவிடும் என்று பல பேர் சொன்னார்கள். வெற்றிடம் உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
    • தளபதி முன்னால் இன்று இருக்கும் போராட்டம் என்பது வெறும் அரசியல் போராட்டம். வெற்றிக்கான போராட்டம் இல்லை.

    சென்னை:

    தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் அவர் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது கனிமொழி பேசியதாவது:-

    இந்த இயக்கத்தை கட்டி எழுப்பி உருவாக்கிய அண்ணா ஏற்றிருந்த பொறுப்பை, கலைஞர் ஏற்றிருந்த பொறுப்பை இன்று 2-வது முறையாக தளபதி ஏற்று எங்களை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார்.

    கலைஞருக்கு பிறகு தி.மு.க.வில் வெற்றிடம் உருவாகிவிடும் என்று பல பேர் சொன்னார்கள். வெற்றிடம் உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். நம்முடைய பரம்பரை பகைவர்கள் கனவு கண்டார்கள். நமது கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என்று நினைத்தார்கள்.

    ஆனால் அந்த சாம்ராஜியங்களை எல்லாம் தகர்த்து எறியக்கூடிய வகையில் அந்த வெற்றிடத்தை ஆழிப்பேரலையாக அவர்களை அழிக்கக்கூடியவர்களில் ஒருவராக தளபதி எழுந்து நின்று காட்டினார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப்பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறார்.

    இங்கு இருக்கும் பெண்களுக்கு சம உரிமை உருவாக்கக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் அந்த பெண்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி சமையல் அறையில் அடைக்க வேண்டும் என்று சனாதன சக்திகள் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    தளபதி முன்னால் இன்று இருக்கும் போராட்டம் என்பது வெறும் அரசியல் போராட்டம். வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது நம் கொள்கைக்கான போராட்டம். நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம். நமது சுய மரியாதைக்கான போராட்டம்.

    அந்த போராட்டத்தில் தளபதியுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    அப்பா இல்லாத இடத்தில் கலைஞர் இல்லாத இடத்தில் உங்களை இந்த நாடு வைத்து பார்க்கிறது. போற்றுகிறது. அப்பா இல்லாத இடத்தில் அண்ணா நான் உங்களை வைத்து பார்க்கிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் அடிகள், உங்களின் போராட்டங்கள் அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கனிமொழி பேசும்போது மிகவும் உருக்கமாக பேசினார். அவர் தனது பேச்சை முடிக்கும்போது கண்கலங்கினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.
    • சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார்.

    திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழுவில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.க்கு கூடுதல் பதவியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்த ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் 2-வது முறையாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆகிறார்.
    • இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. உள்கட்சி தேர்தலின் இறுதி கட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதேபோல் பொதுச்செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    9-ந்தேதி கூடும் தி.மு.க. பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அப்போது துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட நியமன பதவிகளுக்கு யார்-யார் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரமும் வெளியிடப்படும்.

    தற்போதைய சட்ட விதிகளின் படி 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். அரசியலில் இருந்து விலகி கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

    இதனால் மகளிருக்கான ஒதுக்கீட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக தி.மு.க. மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கனிமொழிக்கு பதவி உயர்வு கிடைப்பதன் மூலம் கட்சியில் அவரது அந்தஸ்து மேலும் உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டுக்கான சிஜிஎல் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
    • அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என கனிமொழி தெரிவித்துள்ளார்

    சென்னை:

    மத்திய அரசு துறைகளில் உயர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பணியாளர் தேர்வாணையத்தால் சி.ஜி.எல் (CGL) தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை. இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழாவுக்கு டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார்.
    • விழாவில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 40-வது ஆண்டு ரூபி ஜூபிளி விழா தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். விழாக்குழு தலைவர் ஜோபிரகாஷ் வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் உருவாவதற்கு காரணமானவர்களை கவுரவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 40 ஆண்டுகால நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். சாதனை படைத்த தொழில் அதிபர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.

    தபால்தலை வெளியீடு

    விழாவில் ரூபி ஜூபிளி விழா சிறப்பு தபால்தலை மற்றும் தபால் உறையை மதுரை மண்டல தபால்துறை தலைவர் ஜெயசங்கர் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    ஒரு நிறுவனத்தை 40 ஆண்டுகளாக நடத்துவது சவாலான ஒன்று. பல நிறுவன தலைவர்கள் ஒன்றாக இணைந்து தூத்துக்குடியின் தொழில் வளர்ச்சிக்காக உங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறீர்கள். தூத்துக்குடியில் ஒவ்வொரு இளைஞருக்கும், தான் ஒரு தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற கனவு உள்ளது. இன்றைய இளைஞர்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருகாலத்தில் மிகவும் சாதாரணமாக இருந்த மாவட்டத்தில், நம் முன்னோர்கள், முன்னோடிகள் மிக தைரியமாக தொழில் முதலீடுகளை செய்து உள்ளனர். அவர்களின் உழைப்பு காரணமாக தூத்துக்குடியை தொழில் முதலீட்டாளர்கள் திரும்பி பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

    விடாமுயற்சி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும், தொழில் முதலீடுகள் உருவாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதனால் தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்.

    தொழில் முனைவோர்கள் இந்த பகுதியில் உருவாக வேண்டும் என்பது நம் அத்தனை பேரின் கனவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறை மிகப்பெரிய சவால்களை சந்தித்து உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா தொற்று போன்றவற்றை தாண்டி வெற்றி பெற்று நின்று கொண்டு இருக்கிறோம். அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கைதான் காரணம். தொடர்ந்து எதற்கும் சளைக்காமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்ற முனைப்பு உள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், எஸ்.இ.பி.சி. அனல்மின்நிலைய தலைமை அதிகாரி நரேந்திரா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோவில்லவராயர், மணி, உதயசங்கர், வேல்சங்கர், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க பொதுச் செயலாளர் சங்கர்மாரிமுத்து, பொருளாளர் சேசையா வில்லவராயர், துணைத்தலைவர்கள் பிரேம்வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நார்டன், நிர்வாக செயலாளர் பிரேம்பால் நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி கட்சி தலைவரால் நியமிக்கப்படும் பதவி என்பதால் முதல்- அமைச்சர் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே தனது ராஜினாமா கடிதத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதனால் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதவி கட்சி தலைவரால் நியமிக்கப்படும் பதவி என்பதால் முதல்- அமைச்சர் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த பதவியை பெற பலபேர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

    எல்லோரிடமும் அன்பாக பேசி, சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் கனிமொழி இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    கனிமொழி எம்.பி. இந்த பதவியை ஏற்க மறுத்தால் புதுக்கோட்டை விஜயா பெயர் பரிசீலிக்கப்படலாம் என தெரிகிறது. மாநில கொள்கை பரப்பு இணை செயலாளராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் உள்ள புதுக்கோட்டை விஜயா ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க.வில் உள்ளார். கட்சியிலும் மூத்த நிர்வாகியாக உள்ளார். எனவே இவருக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளராக யாரை நியமிப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படும்.

    • எல்லோரிடமும் அன்பாக பேசி, சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
    • தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே தனது ராஜினாமா கடிதத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதனால் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதவி கட்சி தலைவரால் நியமிக்கப்படும் பதவி என்பதால் முதல்-அமைச்சர் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த பதவியை பெற பல பேர் முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

    எல்லோரிடமும் அன்பாக பேசி, சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் கனிமொழி இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    கனிமொழி எம்.பி. இந்த பதவியை ஏற்க மறுத்தால் புதுக்கோட்டை விஜயா பெயர் பரிசீலிக்கப்படலாம் என தெரிகிறது. மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் உள்ள புதுக்கோட்டை விஜயா ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க.வில் உள்ளார். கட்சியிலும் மூத்த நிர்வாகியாக உள்ளார். எனவே இவருக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளராக யாரை நியமிப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படும்.

    • கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வட்டம் எம்.சண்முகபுரம் ஊராட்சி வடக்குசெவலில், சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    கனிமொழி எம்.பி. தலைமை வகித்து சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, புதூர் ஊராட்சி ஒன்றியம் கவுண்டன் பட்டி, நாகலா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நாகலாபுரம், வேப்ப லோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.3.73 கோடியில் தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு பூமி பூஜையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, நவநீதகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, துணைத் தலைவர் அனிதா பரணி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது
    • தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாக துடிசியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்(துடிசியா) சங்க தலைவர் நேரு பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராஜ், சந்திர மோகன், சுப்புராஜ் இலையன்ஸ்ராஜா ஆகியோர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

    தொழில் கண்காட்சி

    தூத்துக்குடியில் 3 வருடங்களுக்கு ஒருமுறை தொழில் கண்காட்சியை துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது.தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி உதவும்.

    அதன்படி இந்த வருடம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12, 13 மற்றும் 14-ந் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில் தொழில் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

    சிறு, குறு கனரக நிறுவனங்கள்

    இதில் 180-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக நிறுவனங்கள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

    மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான அரங்குகள்மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.

    அரசு துறைகளான சிட்கோ, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை, தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாவட்ட தொழில் மையம் போன்றவையும், தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, போன்ற வங்கிகளும் அரங்குகளை அமைக்கின்றன.

    தொடக்க விழா

    நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

    கனிமொழி எம்.பி., சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர்கள் கீதாஜீவன், செஞ்சி . மஸ்தான், கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி 3-வது மைலில் ஆரம்பித்து பக்கிள்ஓடை முடிவடையும் பகுதி வரை திரேஸ்புரம் கடற்கரையை தூர்வரப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை பக்கிள் ஓடை கடற்கரையில் சந்திக்கும் இடமான திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி . மஸ்தான், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.
    • இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை கனிமொழி எம்.பி. கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    தூத்துக்குடி:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி கடந்த மே மாதம் 18-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 2-ம் கட்டமாக கடந்த 22-ந் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிலையில் 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.

    அதனை கனிமொழி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    இந்த கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16.356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் பால்பவுடர், ரூ. 14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பில் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ×