search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97185"

    • சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள்.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை தீர்த்தவாரி நடக்கிறது.

    மாசி மகத்தையொட்டி சென்னையில் கோவில்களில் இருக்கும் உற்சவர் சிலைகளை மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    திருவிழா நடக்கும் கோவில்களில் இறுதி நாளில் மகம் நட்சத்திரத்தில் கடலில் சாமி உற்சவர் சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்து சந்திரனை பார்த்து தீர்த்தவாரி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டேன் என்று கூறி உற்சவர் விடைபெறுதலே தீர்த்தவாரி ஆகும்.

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை கோவில் சிலைகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரை யில் கோலாகலமாக தீர்த்தவாரி நடந்தது.

    பூந்தமல்லி, பட்டாபிராம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சூளை திரவுபதி அம்மன் கோவில், வினை தீர்க்கும் விநாயகர் கோவில், பெரம்பூர் அகரம் முருகன் கோவில், புதுப்பேட்டை கொள்ளாபுரி அம்மன் கோவில், பாலசுப்பரமணிய சுவாமி கோவில், தின்ன கடையம்மன் கோவில், சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் வராகி கோவில் உள்ளிட்ட 50 கோவில்களில் இருந்து உற்சவர் சாமி சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    கடற்கரை சென்றதும் அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி செய்தனர். பின்னர் சாமி சிலைகளை எடுத்து வந்த பக்தர்களும் புனித நீராடினார்கள். அதன் பிறகு அங்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    50 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சாமி சிலைகள் கடற்கரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நின்றன. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பெருமாள் கோவில்களில் உள்ள சிலைகளை நடனமாடி எடுத்து வந்தனர். பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் சாமி சிலைக்கு நாளை (7-ந்தேதி) தீர்த்தவாரி நடக்கிறது.

    • நாளை அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
    • சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம். அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு செல்கிறார்.

    பின்னர் காலை 7:30 மணியளவில் கடற்கரையில் தேவநாத சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலுக்கு சாமி செல்கிறது. அங்கு விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தேவநாத சாமி மாலை 3 மணியளவில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மீண்டும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாசாமி கோவிலை வந்தடைகிறார்.

    முன்னதாக நாளை காலை தேவநாதசாமி கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சாமி புறப்பட்ட பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு, மாலையில் சாமி திரும்ப வந்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர்.
    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், ஞானாம் பிகா சமேத காளஹஸ் தீஸ்வரர், சவுந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் யானை, காமதேனு, குதிரை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவில் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 7-ம் நாள் திருக்கல்யாணமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெற்றது.

    இதேபோல் குடந்தை கீழக்கோட்டம் பிரஹன் நாயகி சமேத நாகேஸ்வரர், சோம கமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர், ஆனந்த நிதியம்பிகா சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் மற்றும் சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக விழா கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. விழாவை யொட்டி மேற்கண்ட 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.

    பின்னர், மகாமக குளபடித்துறையில் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் இறங்கி புனித நீராடினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் குளத்தின் 4 கரைகளிலும் சுற்றிவந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டு மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடி வழிபட்டனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • சில்வர் பீச்சில் தீர்த்தவாரி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்கிறது.

    பின்னர் அங்கு கடற்கரையில் காலை 8 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளியதும், சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் சாமி வீதிஉலா நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ராஜவீதி உலா முடிந்ததும், இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
    • தேரோட்டமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    பட்டீஸ்வரம்

    கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவ ஆலயங்களான சுதர்சனவல்லிதாயார், விஜயவல்லிதாயார் சமேத சக்கரபாணிசுவாமி, அம்புஜவல்லிதாயார் சமேத ஆதிவராஹப் பெருமாள், ருக்மணிதாயார், ஸத்யபாமாதாயார், செங்கமலத் தாயார் சமேத இராஜ கோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) மற்றும் தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய வைணவ திருக்கோயி ல்களில் மாசிமகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று முதல் இவ்வால யங்களில் தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் இந்திர விமானம், சந்திரபிரபை, சேஷம், நான்காம் நாள் ஓலைச்சப்பரத்தில் கருட சேவை, அனுமந், யானை, புன்னைமரம், குதிரை ஆகிய வாகனங்களில் வண்ண மின் விளக்குகள் ஒளிர மங்கல இன்னிசை முழங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சி நடைபெறும்.

    மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவி லில் காலையில்திருத்தே ரோட்டமும், ராஜகோ பாலசுவாமி, ஆதிவராஹப் பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    • திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.
    • ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருக்குளத்தில் மாசிமகத் விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி அன்று பகல் 12 - மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் திருக்கோயில்களான அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர், சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவி ஸ்வநாதர், ஞானாம்பிகா சமேத காளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப் பெருவிழாவின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி, என சிறப்பு பரிகார பூஜைகள் நேற்று இரவு செய்யப்பட்டு இன்று 25-ந்தேதி காலை திருக்கொடியொற்றத்துடன் மாசிமகத் தீர்த்தவாரி பெருவிழா தொடங்கியது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை, சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி, காமதேனு, குதிரை, கிளி, ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும், ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    • மகாமக குளக்கரையில் 12 சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.
    • தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருகுளத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் கோவில்களான மங்களாம்பிகை சமேதஆதி கும்பேஸ்வரர்,

    சோமசுந்தரி சமேதவி யாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேதகாசிவிஸ்வநாதர்,

    ஞானாம்பிகா சமேதகாளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப்பெருவிழா வின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர்,

    வாஸ்து சாந்தி என சிறப்பு பரிகார பூஜைகள் இன்று இரவு செய்யப்பட்டு நாளை

    (சனிக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா தொடங்க உள்ளது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை ,

    சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி , காமதேனு, குதிரை ,கிளி , ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும் , ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது .

    இதேப்போல் குடந்தை கீழ்கோட்டம் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் , சோமகமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர் , ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், மற்றும் கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடிஸ்வரர், சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய கோயில்களில் இருந்து வரும் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் மகாமகத் திருக்குளக் கரையில் 12-சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமகத் தீர்த்தவாரி விழாவும்நடைபெற உள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் மாசிமகப் பெருவிழா, திருத்தேரோட்டம், தெப்போத்ஸவம் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேதஸ்ரீ சக்கரபாணி , அம்புஜவல்லி சமேதஸ்ரீஆதி வராஹ பெருமாள், ருக்மணி,

    சத்யபாமா, செங்கமலத் தாயார் சமேத இராஜகோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய கோயில்களில் வரும் 26-ந்தேதி காலை கொடியேற்றமும் அதனை தொடர்ந்து மாசிமகப் பெருவிழாவையெட்டி தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன், அனுமந், யானை, புன்னைமரம்,குதிரை ஆகிய வாகனங்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சியும் நடைபெறும்.

    மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவிலில் காலையில் திருத்தேரோட்டமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராஹப்பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    மாசி மகத்ததன்று மாலை சார்ங்கபாணி திருக்கோயில் குளமான பொற்றாமரை திருக்குளத்தில் உற்சவ நாச்சியார்களுடன் ஆராவமுதப் பெருமாள் எழுந்தருள தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி , மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் ராணி (கூ.பொ) கண்காணிப்பாளர்கள் சுதா ,

    பழனிவேல் ஆய்வாளர்கள் தனலட்சுமி , கோகிலதேவி மற்றும் செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சிவசங்கரி, கணேஷ்குமார், மற்றும் அந்தந்த கோயில்களின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பரமபதவாசல் திறக்கப்பட்டு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • இன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • இன்று வீணை வாத்தியம் கிடையாது.
    • நாளை இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், 9.45 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 10.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைகிறர். இன்று வீணை வாத்தியம் கிடையாது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
    • கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடை பெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    மங்களாம்பிகை அம்மன் 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை சேர்த்து 72ஆயிரம் கோடி சக்திகளையும் உடையவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இக்கோவில் மகாப்பிரளயத்திற்கு பிறகு உலகில் தோன்றிய முதல் தலமாக கருதப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடை பெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி விநாயகர், முருகன், சாமி, அம்பாள் ஆகிய 4 தேரோட்டமும், 5-ந் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், 6-ந் தேதி மகா மககுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமமும், கணபதி பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து 2 பந்தக்காலுக்கு 16 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் வளாகம் மற்றும் விநாயகர் தேரில் பந்தக்கால் நடப்பட்டது.

    இந்த விழாவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல், கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலை மலை வேதரத்னம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் வாசித்தார்.

    பின்னர், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தைப்பூசவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது.

    பட்டிஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்து ள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் தைப்பூச திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது,

    மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15 வது திவ்ய தேசமான

    இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. ஆதலால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.தலத்தின் பெயரும் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது.

    காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது என்பது தலவரலாறாகும்.

    மேலும் கங்கை நதியை விட மேலான சிறப்படைய தவமிருந்த காவிரித் தாய்க்கு பெருமாள் மழலையாக எழுந்தருளி வரமருளிய தினம் இத் தைபூசத் தினமாகும்.

    இந்நிகழ்வை ஆண்டு தோறும்தைப்பூசப் பெரு விழாவாகதிருச்சேறை தலத்தில் அமையப்பெ ற்றுள்ள சாரநாதப் பெருமாள் கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவானது கடந்த ஜன.28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,

    இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை மங்கல இன்னிசை முழங்க, அருளும் சாரநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் (பஞ்ச லட்சுமிகளுடன்) திருத்தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வடம் பிடித்தார்கள்.

    இவ்விழாவினை தொடந்து இன்று இரவு 7- 30 மணிக்கு கோவில் திருக்குளமான சாரபுஷ்கரணியில் காவிரித்தாய்க்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது இவ்விழா ஏற்பாடுகளை

    ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×