search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உற்சவ மூர்த்திகளுக்கு 7-ந்தேதி தீர்த்தவாரி
    X

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உற்சவ மூர்த்திகளுக்கு 7-ந்தேதி தீர்த்தவாரி

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • சில்வர் பீச்சில் தீர்த்தவாரி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்கிறது.

    பின்னர் அங்கு கடற்கரையில் காலை 8 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. தீர்த்தவாரி முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளியதும், சேவார்த்திகளுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் சாமி வீதிஉலா நடக்கிறது. பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ராஜவீதி உலா முடிந்ததும், இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×