search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    அபிராமபுரத்தில் சிறுவனை மிரட்டி பணம், செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் இட்லி மாவு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் வேலை செய்து வந்தான்.

    இவன் கடை உரிமையாளருக்கு உணவு வாங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் சென்றான். அப்போது 2 வாலிபர்கள் சிறுவனை வழி மறித்தனர்.

    அவனை மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் ரூ.300 பணத்தையும் பறித்தனர். அதோடு நிற்காமல் சிறுவன் அணிந்திருந்த சட்டையையும் கொள்ளையர்கள் கழற்ற சொன்னார்கள். பின்னர் அதனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி சிறுவன் கார்த்திக் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போன்-பணத்துடன் தப்பிய ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.

    காதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.

    மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.

    அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    கம்பத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தாத்தப்பன்குளத்தை சேர்ந்த முகமதுபாசில்(21) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக பாசில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவரது ஆட்டோவில் மாணவியை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

    சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவியை கையை பிடித்து இழுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு பாசில் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே புகைப்படத்தை சமூகவலைத் தளங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் பாசில்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சீனிநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி பாப்பம்மாள் (வயது 35). இவருக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் சரவணன் (23). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாளிடம் சரவணன் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பம்மாள் சத்தம் போட்டார். இதனைத் தொடர்ந்து சரவணன் இந்த வி‌ஷயத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (40). இவரது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சை முத்து, ஆனந்தன், முத்தாயி ஆகியோர் அங்கம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அங்கம்மாள் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    கோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    கோவை வரதராஜபுரத்தை அடுத்துள்ள எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்த கோபால் (66). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவருடன் தொழில் ரீதியாக கோவையை சேர்ந்த டென்னிஸ் பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்த கோபாலிடம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.

    இதற்கு நடந்த கோபாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 26-ந் தேதி நந்த கோபாலை சந்தித்த டென்னிஸ் திருப்பூரில் உள்ள தனது நண்பர்களையும் சீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடலாம் என கூறி இருக்கிறார்.

    இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்தகோபால் காரிலே அவரையும், அவரது நண்பர் ராமமூர்த்தியையும் திருப்பூரை அடுத்துள்ள கணியாம் பூண்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு டென்னிஸ் நண்பர்களான செல்வா, போலீஸ் கார்த்தி, ரகு ஆகியோர் ஒரு வீட்டில் இருந்தனர்.அங்கு நந்த கோபால், ராமமூர்த்தி ஆகியோரை அழைத்து சென்று அவர்களது கைகளை கட்டி போட்டு சிறை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் ரூ. 1 கோடி எடுத்து வர சொல்லுமாறும் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.இதற்கிடையே கணியாம்பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் நடமாடுவதாக அனுப்பர்பாளைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்குள்ள வீட்டில் நந்தகோபால், ராமமூர்த்தி அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் மீட்டனர். நந்த கோபால் காரும் கைப்பற்றப்பட்டது.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கார்த்தி காரையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த டென்னிஸ், செல்வா, கார்த்தி ஆகிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரகு மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஒரு தனிப்படையினர் கோவைக்கும் விரைந்து உள்ளனர். நந்த கோபாலை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணியாம்பூண்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.அதன் உரிமையாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் வீட்டை பார்க்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர். அவரும் வேறு ஒருவர் மூலம் சாவியை கொடுத்துள்ளார்.

    அங்கு தான் நந்தகோபால், ராமமூர்த்தியை கடத்தி வைத்து உள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேர் மீதும் திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
    ஈத்தாமொழி அருகே காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழியை அடுத்த புதூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

    மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் அவரை தினமும் பின் தொடர்ந்தார். மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

    வாலிபரின் காதலை மாணவி ஏற்க மறுத்தார். மேலும் இது பற்றி பெற்றோரிடமும் கூறினார்.

    இதை அறிந்த வாலிபர் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்தார். தன்னை காதலிக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.

    இதைக்கேட்டு பயந்துபோன மாணவி, வாலிபரின் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதார். பள்ளிக்குச் செல்லவும் மறுத்தார்.

    வாலிபரின் தொல்லை அத்துமீறியதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதில் ஈத்தாமொழியை அடுத்த நெடுவிளையைச் சேர்ந்த வாலிபர் தபின் (வயது21) என்பவர் தனது மகளை பின் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார். கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என்று கூறியதோடு, தகாத வார்த்தைகளும் பேசுகிறார். போலீசார் அவரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் விசாரணை நடத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் தபின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார். #tamilnews
    வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ சத்தியா மீது கோவிந்தராஜ் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வடபழனி சோமசுந்தர பாரதிநகர் சங்கம் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் டேபிள், சேர், பாத்திரம், சாமியானா பந்தல் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறேன். கடையின் மேல்தளத்தை அதிமுக வத்தலக்குண்டு ஆறுமுகம் நினைவு மன்றத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.

    தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியா கூறியதாக அவரது ஆட்கள் புதூர் உதவியா, கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னிடம் கேட்டனர். நான் தற்போது பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றேன்.

    அவர்கள் பணம் தரவில்லை என்றால் உனது கடையை எங்கள் கட்சி அலுவலகமாக மாற்றி விடுவோம் என்று மிரட்டினார்கள். பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி எனது கடையை பூட்டி பொருட்களை அடித்து நொறுக்கினார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    கடந்த 4-ந்தேதி நான் வெளியூர் சென்றிருந்தபோது சத்தியா எம்எல்ஏ கூறியதாக கோகுல், பாலசுப்பிரமணியன், புதூர் உதயா ஆகியோர் எனது கடையை உடைத்து பொருட்களை வெளியே எடுத்து போட்டு ரூ.76 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி சத்தியா எம்எல்ஏ, கோகுல், பாலசுப்பிரமணி, புதூர் உதயா ஆகியோர் வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து என்னிடம் வந்து வழக்கை வாபஸ் வாங்கு மாறும் இல்லாவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்து என் கடையை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
    பெட்ரோல் பங்கை தகர்த்து விடுவேன் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் 4-வது முறையாக கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 36).

    இவர் உக்கடம் அருகே பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியதும் ஊழியர் பணம் கேட்ட போது பீர் முகமது தகாத வார்த்தைகளால் திட்டினார். பங்க் ஊழியர்கள் அவரை கண்டித்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த பீர்முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.

    கைதான பீர் முகமது மீது ஏற்கனவே இதுபோல 3 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானார்.

    ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. தற்போது 4-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் வன அதிகாரியை மிரட்டிய கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மண்ணார்க்காடு காஞ்சிரப்புழாவில் ஆக்கிரமிப்புக்கு எதிராக வன ரேஞ்சர் நடவடிக்கை எடுத்தார்.

    இதனையடுத்து வன அதிகாரியை கோங்காடு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ., விஜயதாஸ் வனரேஞ்சருக்கு போன் செய்து உனது காலை உடைப்போன் என்று மிரட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில்வன அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மண்ணார்க்காடு போலீசார் எம்.எல்.ஏ., விஜயதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து எம்.எல்.ஏ., விஜயதாஸ் கூறும்போது, வன ஊழியர்கள் பழங்குடி மக்களை வீடு புகுந்து மிட்டியுள்ளனர். அவர்களின் விவசாய நிலங்களில் உள்ள தண்ணணீர் குழாயை உடைத்து பயிர்களை சேதப்படுத்தினர்.

    1987-க்கு முன்பே இங்கு குடியிருந்த மக்களிடம் அதற்கான ஆவணங்களும் உள்ளன. இது குறித்து வன ரேஞ்சருக்கு போனில் அறிவுரை மட்டுமே கூறினேன். மிரட்டவில்லை. மிரட்டியதுபோன்ற குரல் என்னுடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma
    நொய்டா:

    பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம்-ஐ நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி அருகே நொய்டாவில் உள்ளது.

    அதில், அதிபரின் செயலாளராக பணியாற்றும் ஒரு பெண், தன் கணவர் ரூபக் ஜெயின், சக ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து அதிபரின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக்கொண்டு, அவரை பிளாக்மெயில் செய்தனர்.

    அந்த தகவல்களை வெளியிட்டால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நற்பெயர் கெட்டுப்போகும் என்றும் எனவே, வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ரூ.20 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டி வந்தனர். இதுபற்றி நொய்டா போலீசில் விஜய் சேகர் சர்மா புகார் செய்தார்.

    அதன்பேரில், அந்த பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 4-வது நபரான ரோகித் சோமல் என்பவனை தேடி வருகிறார்கள்.  #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma 
    மதுரை அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் உலகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). நேற்று இரவு ஆத்திக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த போக்கு வரத்து போலீஸ்காரர் கார்த்திக், தடுத்து நிறுத்தினார். அவர் ராஜ்குமார் மது அருந்தி உள்ளாரா? என்பதை அறிய அதற்கான கருவி மூலம் பரிசோதனை நடத்த முயன்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜ்-குமாரை கைது செய்தனர்.

    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BombThreat #TrainBombThreat

    போரூர்:

    சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு இன்று காலை 6.50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசியவர், சென்னையில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட போன் நம்பரை வைத்து அது யார் என்பதை கண்டுபிடித்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான நவின் குமார் என்பவர் போனில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நவின் குமார் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் காட்பாடி. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வேலை தேடி வந்தேன். தற்போது விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர் செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி செல்ல முடிவு செய்தேன்.

    இன்று காலை கிளம்பினேன். ஆனால் நான் செல்வதற்கு சற்று நேரமாகி விட்டதால் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறினால் ரெயில் புறப்பட காலதாமதமாகும். எனவே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #BombThreat #TrainBombThreat

    ×