search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா"

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர்.
    • வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார்.

    மேலும் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய பேரும் புகழையும் சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.

    2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    நேற்று வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் வெற்றிமாறன் தவிர்க்க முடியாதவர். அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
    • சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது.

    பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

    முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.



    சாய் பல்லவி - நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் படம் தண்டேல். இப்படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார்.

    தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். இதனால் சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உள்ளது. இப்படத்திற்கு நாகசைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார்.இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது




    இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை.
    • இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

     இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-

    ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.

    இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.
    • ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.

    சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.



    இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.

    பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.

    இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.




    இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
    • ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான்.

    இசையமைப்பாளர் இளையராஜா பாடல் உரிமை தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது முதல் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகை குஷ்பு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, "சினிமா துறையில் எல்லா விஷயங்களுமே கூட்டு முயற்சியால்தான் நடக்கிறது. எது பெரிது என்ற விஷயத்தை இயக்குனரும், இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் இடையே பிரச்சினை இருந்தால் அவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்.

    தயாரிப்பாளர்கள் இசை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவது குறித்து ஒரு தயாரிப்பாளரான உங்களின் கருத்து என்ன என்று கேட்டபோது, `மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டு.
    • ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.

     காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.

    அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி சுற்றுச்சுழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.

    • இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார்.
    • தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் பாராட்டினார்கள்.

    பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் 51- வது படம் 'குபேரா'. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ஐதராபாத் , திருப்பதி உள்பட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.




    தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார்.

    மேலும் சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் அவர் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாக பணம் இருப்பது போல காணப்பட்டது.

    இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் அங்குள்ள ஒரு பெரிய குப்பை மேட்டில் நடித்தார். இதில் அவர் 10 மணி நேரம் முககவசம் எதுவும் அணியாமல் நடித்துள்ளார்.




    மேலும் உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக அவர் முகக்கவசம் அணியாமல் அங்குள்ள துர்நாற்றத்தை சகித்து நடித்ததாக படக்குழு தெரிவித்தது.தனுஷின் துணிச்சலான நடிப்பை படக்குழுவினர் வியந்து பாராட்டினார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
    • இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது.

    'ஓடிடி பிளஸ்' என்ற புதிய ஓடிடி தள அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த ஓடிடி தளத்தில் மாதம் ரூ.29 சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்டவைகள் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் டிரைலர்கள் தொடக்க விழாவில் திரையிடப்பட்டன. விழாவில் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் சமீப காலங்களில் தங்களது சினிமாக்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், "இன்றைக்கு இந்த இணையதள வளர்ச்சி, அனைத்தையுமே பார்த்து படிச்சு புரிஞ்சிக்கிற அளவிற்கு வந்துவிட்டது. இன்றைக்கு பெரும்பான்மையான பெற்றோருடைய கவலை, குழந்தைகளிடம் கொடுத்த போனை எப்படி திரும்ப வாங்குவது என்பதுதான். அப்பா, அம்மா, டீச்சர் என யார் சொன்னாலும் கேட்கமாட்டேங்குறான். ஆனால் கூகுள் சொன்னால் கேட்கிறான். இப்படி இருக்கும் சூழலில் இந்த இணையதளத்தின் மூலமாக கதைகள், அதன் மூலமாக கருத்துக்கள், நல்ல செய்திகள் சொல்ல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சினிமாவிற்கு புதிய வெளிச்சமாக இந்த ஓ.டி.டி இருக்கும் என நம்புகிறேன். புதிய தொழில்நுட்பத்தின் வழியாக தமிழ் கதைகள் மக்களை போய் சேர வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில், இப்போது தோன்றியுள்ள இந்த ஓடிடி, நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன்.

    எங்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ அங்கு ஒரு புதிய வாசல் திறந்து கொண்டே இருக்கிறது. அதை காலமும் விஞ்ஞானமும் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஓ.டி.டி பிளஸ் நிறைய தமிழ் கலைஞர்கள், உலக மக்களோடு உரையாடுவதற்கும் தன் கலைகளை வழங்குவதற்கும் உதவும். சினிமா என்பது திரையரங்கிற்கான அனுபவம். இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சினிமாவுக்கான வெளியீட்டு விதி எப்போது வந்ததோ, அந்த விதியில், சிறு படங்கள், கடை படங்கள், பெண்களுக்கான படங்கள் பாதிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு கூட்டம் வரவேண்டும் என்ற நிலை இருக்கிறது. முதல் மூணு நாளில் காட்சிகள் நிறைய வேண்டும்.

    அப்போது நட்சத்திர அந்தஸ்து இல்லாத திரைப்படங்களுக்கு நிச்சயம் கூட்டம் வராது. இந்த நிலையில் மக்களிடம் படம் பேசப்பட்டு, அவர்கள் திரையரங்கிற்கு வருவது வரைக்கும் படங்களை திரையரங்கில் தாங்கி பிடிக்க முடியாது. அப்போது மூணு நாள் கழித்து அதிக தியேட்டர் கிடைக்கும் போது அந்த வியாபார விரிவு தான் சிறிய படங்களுக்கான கதவுகளை அடைத்துவிட்டது. அப்படி அடைத்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்து வெளியில் வருவது தான் கலையுடைய வேலை. அப்படி நிராகரிக்கப்பட்ட படங்கள், இந்த ஓ.டி.டி.யின் வழியாக, தன் வாழ்க்கையை பணயம் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தரும் என நம்புகிறேன்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும்.இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    கோட் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட 2 வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.




    இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில் விஜயின் 69 -வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர்.

    லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்தது. தென்னிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" பாடலை தற்போது விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    இந்நிலையில் விசில் போடு பாடல்  யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை தற்பொழுது கடந்துள்ளது. தென்னிந்திய சினிமா பாடலுக்கு இவ்வளவு பார்வைகளை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்குறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

    ×