search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97284"

    • காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன்கள் எடுத்தார்.
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மெல் லானிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாம் இடம் பிடித்தார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன் எடுத்ததால் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 5ம் இடத்தில் உள்ளார்.

    டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 5வது இடத்தில் உள்ளார்.

    இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • ஐ.சி.சி.அறிவிப்புக்கு பி.சி.சி.ஐ.வரவேற்பு
    • அனைத்து வித உள்கட்டமைப்பு வசதியும் இருப்பதாக பி.சி.சி.ஐ. தகவல்

    அடுத்து நடைபெற உள்ள ஐ.சி.சி.உலக கோப்பை தொடர்களுக்கான இறுதிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஆண்டுக்கான பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஆகியோர் வரவேற்றுள்ளனர். 2025 ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எங்களிடம் அனைத்து உள்கட்டமைப்பும் உள்ளது என்றும், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

    • ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இதில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார்.

    அதேபோல் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் விராட் கோலியும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 8-வது இடத்தில் உள்ளார்.

    • கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
    • வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதிப்படி தனது மாதிரியை பரிசோதனைக்கு ஷாஹிதுல் இஸ்லாம் வழங்கியிருந்தார். அதில் தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு 10 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி. ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தின் பிரிவு 2.1-யை மீறியதற்காக வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.

    அவர் கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

    • இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டி20 தரவரிசையில் டாப் 10-ல் இருக்கிறார்.
    • டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டனும் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் உலகின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார்.

    பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டாப் 10-ல் இருக்கிறார். இஷான் கிஷன் 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

    டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவர் 2 முறை நான்கு சதங்கள் தொடர்ச்சியாக அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் பேட்டிங்கிலும் சாதனை படைக்க பாபர் அசாம் இலக்கு வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதில் திருப்தி அடையாத அசாம், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆவதற்கு இப்போது தனது பார்வையை திருப்பியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அசாம் தற்போது 815 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திலேயே தொடர்கிறார்.
    • ஆஸ்திரேலியா அணியின் சோபியா இடண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி இன்று வெளியிட்டது. பேட்டிங் தரவரிசையில் இலங்கை டி20 அணியின் கேப்டன் சமாரி அதபத்து ஒரு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்தார். இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் சமாரி அதபத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா சொதப்பியதால் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திலேயே தொடர்கிறார். ஆஸ்திரேலியா அணியின் சோபியா இடண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆல்-ரவுண்டர் பட்டியலிலும் இலங்கை கேப்டன் சமாரி அதபத்து 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் தீப்தி வர்மா 3-வது இடத்தில் தொடர்கிறார்.

    • டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
    • பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.

    டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பொறுத்தவரை இந்திய அணியில் இஷான் கிஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளார். சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.

    6-வது இடத்தை ஆஸ்திரேலியா வீரர் கான்வேவுடன் இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார். முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். பாபர் ஆசம் முதல் இடத்திலும் ரிஷ்வான் இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர். இலங்கை அணி வீரர் நிசாங்கா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.


                                                                                        தினேஷ் கார்த்திக் - இஷான் கிஷன்


    ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் (108-ல் இருந்து 87) முன்னேறி உள்ளார்.

    டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடரில் சொதப்பிய நோர்க்கியா ஒரு இடம் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹசில்வுட் முதல் இடத்தில் தொடர்கிறார்.

    டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் அஸ்வினை பின்னுக்கு தள்ளி வங்களாதேச வீரர் சகீப்-அல்-ஹசன் 2-இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா தொடர்கிறார்.

    கும்ப்ளே வகித்து வந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவி தற்போது, பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு வழங்கப்பட்டுள்ளது
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.

    சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தலைவர் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில விசயங்களால் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அனில் கும்ப்ளே

    அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சவுரவ் கங்குலியை கிரிக்கெட் கமிட்டியின் சேர்மன் பதவிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
    துபாய்:

    ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு

    அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.

    2024 - 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
    2025 - சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

    2026 -  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை
    2027 - 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

    2028 - 20 ஓவர் உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
    2029 - சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

    2030 - 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
    2031 - 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

    பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி, ஐசிசி-யின் முதல் போட்டி நடுவராக (Match Referee) பணியாற்ற இருக்கிறார்.
    இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜிஎஸ் லட்சுமி. இவர் கடந்த 2008-2009-ல் உள்ளூர் கிரிக்கெட்டில் போட்டி நடுவராக பணியாற்றினார். பெண்களுக்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், மூன்று டி20 கிரிக்கெட் தொடரிலும் போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்.

    இந்நிலையில் லட்சுமி பெயரை போட்டி நடுவர்கள் சர்வதேச குழுவில் ஐசிசி சேர்த்துள்ளது. வருகிற 27-ந்தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதனால் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
    ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. #ICC
    இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

    குற்றச்சாட்டு எழுந்த காலத்தில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சனத் ஜெயசூர்யா தேர்வுக்குழு தலைவராக இருந்தார். இவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்த முடிவு செய்தது.

    சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் முக்கியமான ஆவணங்களை மறைத்து விட்டதுடன், ஆதாரங்களை அழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இந்நிலையில் ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்தவொரு கிரிக்கெட்டிலும் செயல்பட முடியாது.
    ×