search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97412"

    • ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
    • ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலுக்கு மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
    • கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை .

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இன்று விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும்.
    • இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று பிரதோஷம். புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று விரதம் இருந்து மாலை சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

    புதன் என்பது அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். .

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும். இன்று நந்தி அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக நம்பிக்கையாக உள்ளது. இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று மாலை கோவிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.

    • கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான 5 1/2 அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்துள்ளது சிறப்பாகும். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதை யொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்து வாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுத முடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் பிரதேசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    இதேபோல பல்லடம் கோட்டைவிநாயகர்கோவில், பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில்,சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

    • புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி மகிழ்ச்சி அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
    • குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவாலயங்களில் பிரதோசதினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

    • பிரதோஷ விழாவை முன்னிட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
    • நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் உள்ள நேற்று மாலை பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்குக்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • ஸ்ரீநந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தில் நடராஜரின் விக்கிர தலமாக விளங்கும் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பிரதோஷத்தையொட்டி ஸ்ரீஅழகிய கூத்தர் ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடை பெற்றது. இதையொட்டி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீநந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×