search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனுஷ்கோடி"

    அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை அமைக்கப்பட்ட பின்னர் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூர பரப்பளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி விசாலமாக இருந்தது.

    சுற்றுலா பயணிகள் சாலை வளைவில் வாகனங்களை நிறுத்திவிட்டு மிக நீண்ட தூரம் வரையிலும் கடற்கரை மணல் பரப்பில் நடந்து சென்றும், ஓடி விளையாடி மகிழ்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்தனர். செல்போனிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இவ்வாறு மணல் பரப்பாக காணப்பட்ட தனுஷ்கோடி அரிச்சல்முனையை கடற்கரையை கிட்டத்தட்ட கடல் விழுங்கிவிட்டது. இதனால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.

    தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றி கடல் நீர் குறைந்து, மணல் பரப்பு மீண்டும் உருவாகுமா? என்பது சந்தேகம்தான். இருந்தாலும் நில அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு கடற்கரை மணல் பரப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


    இதையும் படியுங்கள்...இரு வாரமாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
    தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமேசுவரம்:

    தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ராமேசுவரம் கியூ பிரிவு போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் நிற்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் அந்த முதியவர் இலங்கை தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் (வயது 52) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் ராமேசுவரம் வந்தேன். இங்கு கஞ்சா வாங்கிக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டேன். அப்போது கடற்படையினர் ரோந்து வருவதைப் பார்த்து மணல் திட்டையில் பதுங்கினேன்.

    அந்த சமயத்தில் நான் வந்த படகு கரை ஒதுங்கியது. அதனை மீட்க செல்வதற்காக கடலில் நீந்தி கரைக்கு வந்தேன். அப்போது தான் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன் என்றார்.

    போலீஸ் விசாரணையில் ஜெயசீலனுக்கும், ராமேசுவரத்தில் உள்ள கடத்தல் காரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் மண்டபம், ராமேசுவரம் காவல் நிலையங்களில் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பனைமர உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5-வது நாளாக இன்றும் அதே நிலைமை தொடர்கிறது.

    தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம் முதல் பாம்பன் சாலையில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.

    காற்றின் வேகம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து செல்கின்றன.

    அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம், தனுஷ்கோடி சாலை காற்றின் காரணமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இன்று பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
    ராமேசுவரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் உள்மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.

    தெற்கு அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். நேற்றும், இன்றும் பலத்த சூறாவளி வீசுகிறது.

    இதனால் வழக்கத்தை விட தனுஷ்கோடியில் கடல் சீற்றம் இன்னும் அதிகமாக உள்ளது. பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

    முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் சாலைகள் மணலால் முழுவதும் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கடல் சீற்ற ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குகின்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் லட்சுமணன் தீர்த்தம் தெரு தெப்பக்குளம் அருகில் பனைமரம் முறிந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    தனுஷ்கோடியில் 3-வது நாளாக இன்று கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    மியான்மருக்கு 170 கி.மீட் டர் மேற்கு தென்மேற்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் ராமேசுவரம் பகுதியிலும், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கம்பிப்பாடு பகுதியை தாண்டி அரிச்சல்முனை பகுதிக்கு சாலை வழியாக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

    இன்று 3-வது நாளாக ராமேசுவரம், தனுஷ் கோடியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழும்புகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பருவ மழை தொடக்கம் எதிரொலியால் தனுஷ்கோடியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடல் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.

    ராமேசுவரம்:

    பருவ மழை தொடங்கியதையொட்டி ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    அதன்படி ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் நேற்று மாலை முதல் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடல் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் அதே நிலைதான் நீடிக்கிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தில் அலைகள் பல அடி தூரத்துக்கு எழும்பியதால் ரெயில் மெதுவாகவே இயக்கப்பட்டது.

    ×