search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைக்கோள்"

    இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது.
    வாஷிங்டன் :

    விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விண்கலத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனிடையே ரஷியாவின் இந்த ஏவுகணை சோதனை ஆபத்தான மற்றும் பொறுப்பற்றது என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் “இன்று, ரஷிய கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் அதன் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றுக்கு எதிராக, நேரடியாக தாக்கக்கூடிய செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த சோதனையானது, இதுவரை 1,500 க்கும் மேற்பட்ட கண்காணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் பயணிக்கும் கழிவு பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறிய சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது, அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன” என கூறினார்.
    செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதில், தேர்தல் விதிமீறல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை பற்றி விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.

    தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோ உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பேரில் தூர்தர்சனும், ஆல் இண்டியா ரேடியோவும் விளக்கம் அளித்தன.



    இதற்கிடையே பிரதமர் மோடி, தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேச தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த தகவலை கூறினார்.

    பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் விதிமீறல் உள்ளதா? என்று தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இதற்கான குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், மோடியின் உரையில் விதிமீறல் உள்ளதா? என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் எந்த நடத்தை விதிமீறலும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission 
    தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    புதுடெல்லி:

    நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

    இந்த செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
     


    ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘I 2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.

    கடந்த இரண்டு மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைக்கோள் இதுவாகும். கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கைக்கோள், கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.



    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

    5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் யுடிராக் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜி.பி.எஸ். பயன்பாட்டிற்கு வருகிறது. #GPS

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

    யுடிராக் ஜி.பி.எஸ். சேவை முழுக்க முழுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களின் திட்டமிடலில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ். சேவை துவங்குவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தான் எனலாம். கார்கில் போரின் போது குறிப்பிட்ட பகுதியின் ஜி.பி.எஸ். விவரங்களை வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கென சொந்தமான ஜி.பி.எஸ். சேவை துவங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.



    இதுவரை பல்வேறு ஜி.பி.எஸ். செயலிகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜி.பி.எஸ். அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது. இந்தியாவின் யுடிராக் சேவையை கொண்டு ராணுவம் மற்றும் கடற்சார் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இருவித நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. ஒன்று அனைவருக்குமான ஸ்டான்டர்டு பொசிஷனிங் சேவைகள் மற்றொன்று என்க்ரிப்ட், தடை செய்யப்பட்ட சேவைகள் அனுமதி பெற்ற பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு L5 மற்றும் S ஃப்ரீக்வன்சி பேன்ட்களில் வேலை செய்கிறது. யுடிராக் சேவை மிகவும் துல்லியமாக வழிகாட்டும் என்பதால் பயணிகள் மற்றும் ஹைக்கர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அமைப்பு ரஷயாவின் GLONASS அமைப்புடன் இணையும் வசதி கொண்டுள்ளது.
    40 லட்சம் மைல்கள் தூரத்தில் உள்ள சூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. #NASA #ParkerSolarProbe
    வாஷிங்டன்:

    வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

    பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

    இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  

    இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

    அமெரிக்காவின் அரிய முயற்சியான ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சியில் காண்பதற்காக அந்நாட்டு மக்கள் நேற்று அதிகாலை வரை விழித்திருந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ ( Delta IV ) ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து,  ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.01 மணிக்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் விமானப்படை தளத்தில் இருந்து ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #NASA #ParkerSolarProbe 
    நெருப்புக் கோளமான சூரியனை நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்த செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. #NASA #ParkerSolarProbe
    நியூயார்க்:

    வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

    பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

    இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  

    இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

    அமெரிக்காவின் அரிய முயற்சியான ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சியில் காண்பதற்காக அந்நாட்டு மக்கள் இன்று அதிகாலை வரை விழித்திருந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ 
    ( Delta IV ) ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த குறைபாடு சீரடைந்த பின்னர் நாளை விண்ணில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NASA  #ParkerSolarProbe 
    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    ×