search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97548"

    • ஆனிமாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் முக கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.
    • சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். மாதத்தில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்று வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்ட ங்களில் திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மலை அடிவாரமான குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால்,பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களுக்கு தேவை யான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
    • காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 14-ந் தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

    மேற்கண்ட நான்கு நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது, இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்துக்கு மேற்கண்ட 4 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

    இந்த நிலையில் கார்த்திகை மாத பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 19-ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.

    மேலும் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாகவும், இன்று மழை பெய்வதற்கான அறிகுறி இருப்பதாலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று பிரதோ‌ஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.

    இதனால் பிரதோ‌ஷத்தை முன்னிட்டு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். அவர்களிடம் போலீசாரும், வனத்துறையினரும் மழை விவரங்களை கூறி திருப்பி அனுப்பினர்.

    ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    17-ந் தேதி பவுர்ணமியன்று சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில் மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ×