search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97567"

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகியுள்ளது. #mahindra



    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

    எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
    இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #MahindraXUV300



    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

    எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MahindraXUV300



    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய புகைப்படங்களின் படி இந்த கார் புதிய மஹிந்திரா சீரிசின் பேஸ் வேரியன்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

    புதிய சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், எக்ஸ்.யு.வி. 500 போன்றே எக்ஸ்.யு.வி. 300 மாடலும் டபுள்யூ ரகத்தில் கிடைக்கும் என்றும் இது டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ 8 மற்றும் டபுள்யூ10 உள்ளிட்ட வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் க்ரோம் பிட்கள் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பேஸ் வேரியன்ட் மாடலின் பம்ப்பரில் பிளாக் கிளேடிங் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.


    புகைப்படம் நன்றி: autopunditz

    காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப் மற்றும் பின்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் கேபின் பற்றிய புகைப்படங்கள் தெளிவாக இல்லாத நிலையிலும் சென்டர் கன்சோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டிரைவர் பக்க கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மஹிந்திரா கார் 12 வோல்ட் யூனிட் கொண்ட பவர் சாக்கெட், யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் இன் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லீவர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 

    கார் என்ஜின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் ஜி80 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. #MahindraXUV300 #ElectricVehicle



    மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாட்டின் முதல் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. 300 அறிமுகம் செய்யப்படலாம். 

    வடிவமைப்பு ரீதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் உடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை மஹிந்திரா நிறுவனம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.



    இதற்கென மஹிந்திரா நிறுவனம் எல்.ஜி. செம் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. எல்.ஜி. செம் நிறுவனம் இந்தியாவில் பயன்படுத்த ஏதுவாக பேட்டரி செல்களை விநியோகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மாடல் நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிறப்பம்சங்கள் மற்றும் உபகரணங்களும் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மற்றும் வழக்கமான எக்ஸ்.யு.வி. 300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மேலும் இந்த காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் / கேமரா, சன்ரூஃப், ஏழு ஏர்பேக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம். 
    மஹிந்திரா நிறுவனம் சில காலமாக சோதனை செய்து வரும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraXUV300



    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.300 காரினை இந்தியாவில் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய கார் முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.



    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராசோ எம்.பி.வி. காரின் சர்வதேச பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. #Mahindra #Marazzo4safety



    மஹிந்திரா மராசோ பாதுகாப்பு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் வெளியாகும் புது கார்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனையான NCAP முடிவுகள் மஹிந்திரா மராசோ காருக்கு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்ட மஹிந்திரா மராசோ அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கார்களில் நான்கு புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் நான்கு புள்ளிகள் பெற்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். மஹிந்திரா மராசோ கார் வயதானோர் பயணிக்க 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் குழந்தைகள் பயணிக்க 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை மராசோ பெற்றுள்ளது. 



    அந்த வகையில் குழந்தைகள் பயணிக்க மராசோ இரண்டு நட்சத்திர புள்ளிகளை பெற்றுள்ளது. நவம்பர் 16, 2018 காலத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து மஹிந்திரா மராசோ கார்களுக்கும் இந்த சோதனை முடிவுகள் பொருந்தும். மராசோ கார் பெற்று இருக்கும் பாதுகாப்பு புள்ளிகளை இதுவரை வெளியான எந்த மஹிந்திரா வாகனமும் பெற்றதில்லை.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் லாட்ஜி, செவர்லே என்ஜாய் மற்றும் மாருதி சுசுகி இகோ உள்ளிட்ட மாடல்கள் சர்வதேச பாதுகாப்பு சோதனையில் வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #Mahindra #Marazzo4safety
    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. பெயர் அறிமுக தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த விவரங்களை பார்ப்போம். #mahindra



    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலின் பெயர் நேற்று (டிசம்பர் 1) அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், புதிய காரின் பெயரை பின்னர் அறிவிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    “தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று நடைபெற இருந்த பெயர் அறிமுக விழா தள்ளிவைக்கப்படுகிறது. பெயர் அறிமுக விழாவிற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேதி தள்ளிவைக்கப்பட்டதால் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. எஸ்201 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் சங் யோங் டிவோலி காம்பாக்ட் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. கார் இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    மஹிந்திரா எஸ்201 மேட்டுப்பாளையம், உதகமண்டலம் போன்ற பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதேபோன்று லெ, லடாக் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளிலும் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. எஸ்201 கார் எக்ஸ்.யு.வி.300 என அழைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


    புகைப்படம் நன்றி: Motorbeam

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். #mahindra
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலான அல்டுராஸ் ஜி4 இந்தியாவில் வெளியிடப்பட்டது. #AlturasG4



    இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 வெளியிடப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக அமைந்திருக்கிறது. புதிய எஸ்.யு.வி. 2WD AT மற்றும் 4WD AT என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அல்டுராஸ் ஜி4 டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.29.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல் ஆகும். காரின் வெளிப்புறம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், மஹிந்திரா லோகோ கொண்ட கிரில் கொண்டிருக்கிறது. 

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் டோன் இன்டீரியர், குவில்டெட் நேப்பா லெதர், பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. 



    இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. இரண்டு வேரியன்ட்களில், ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    புதிய அல்டுராஸ் ஜி4 ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். புதிய அல்டுராஸ் ஜி4 புதிய பியல் வைட், நபோளி பிளாக், லேக்சைடு பிரவுன், டிசட் சில்வர் மற்றும் ரீகல் புளு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹோன்டா சி.ஆர்.-வி. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அல்டுராஸ் ஜி4 கார் இந்தியாவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. #AlturasG4 #Mahindra
    மஹிந்திரா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் அல்டுராஸ் ஜி4 காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AlturasG4 #Mahindra
    மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் நவம்பர் 24ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய எஸ்.யு.வி. காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இந்த கார் யு400 எஸ்.யு.வி. என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அல்டுராஸ் ஜி4 மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. மேலும் இது மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட சங்யோங் ரெக்ஸ்டான் நான்காம் தலைமுறை மாடல் ஆகும்.

    காரின் வெளிப்புற வடிவமைப்பின் படி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 18-இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள், மஹிந்திரா லோகோ கொண்ட கிரில் கொண்டிருக்கிறது.

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உயர் ரக 4WD மாடலில் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி, டூயல் டோன் இன்டீரியர், குவில்டெட் நேப்பா லெதர், பவர் டிரைவர்சீட், மெமரி அம்சம், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரினுள் 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது.



    இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதி, 360 டிகிரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி. இரண்டு வேரியன்ட்களில், ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. / 420 என்.எம். டார்கியூ செயல்தின் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. 2WD மற்றும் 4WD என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்.யு.வி. மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹோன்டா சி.ஆர்.-வி. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அல்டுராஸ் ஜி4 கார் இந்தியாவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் அசம்பிள் செய்யப்படுகிறது. #AlturasG4 #Mahindra
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் விலையை மாற்றியமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. #Mahindra #Marazzo



    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ கார் மாடலின் விலையை மாற்றியமைக்க இருக்கிறது. அதன்படி புதிய மராசோ விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்படுகிறது. புதிய விலை மாற்றம் ஜனவரி 1, 2019 முதல் அமலாகும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

    மராசோ கார் அறிமுகம் செய்யப்படும் போதே புதிய காரின் விலை அறிமுக சலுகை தான் என மஹிந்திரா & மஹிந்திரா அறிவித்து இருந்தது. விற்பனை துவங்கிய நான்கு மாதங்களில், மராசோ கார் விலை ஜனவரி 1, 2019 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ் வேரியன்ட் மாடலான M2 விலை ரூ.9.99 லட்சம் என்றும் டாப்-என்ட் M8 வேரியன்ட் ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஒரே மாதத்தில் 10,000 முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. சமீபத்தில் மராசோ மாடலில் ஆப்பிள் கார் பிளே சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய மராசோ மாடல் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ எஸ்9 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம். #Mahindra #Scorpio



    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ வேரியன்ட் இந்தியாவில் டாப் என்ட் வேரின்ட்டான எஸ்11 மாடலுக்கு கீழ் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் புதிய காரில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கார்பியோ இந்தியா முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனை மையங்களிலும் துவங்கியது.

    புதிய ஸ்கார்பியோ எஸ்9 மாடலில் ஸ்டாடிக் பென்டிங் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்பக்கம் ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. கைடு லைட்கள், ஹைட்ராலிக் அசிஸ்ட் செய்யப்பட்ட பொனெட், இன்டெலிபார்க் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் இன்டிகேட்டர்களுடன் ORVMகள் வழங்கப்பட்டுள்ளது. 



    ஸ்கார்பியோ எஸ்9 மாடலின் உள்புறம் 5.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் டெம்ப்பரேச்சர் கன்ட்ரோல், ஸ்டீரிங் வீலில் ஆடியோ மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எம்ஹாக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ஆன்டி-தெஃப்ட் வார்னிங், பேனிக்-பிரேக் இன்டிகேஷன் மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. #Marasso



    மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய மராசோ காரின் இந்திய விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய மராசோ விற்பனை மராது சுசுகி நிறுவனத்தின் எர்டிகாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 

    அக்டோபர் 2018ல் மராசோ கார் மொத்தம் 3,810 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே மாதத்தில் எர்டிகா கார் வெறும் 1,387 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமான முதல் மாதத்திலேயே மஹிந்திரா மராசோ சுமார் 10,000 அதிகமான முன்பதிவுகளை பெற்று இருந்தது. மஹிந்திரா மராசோ கார் சமீபத்தில் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. 



    தற்சமயம் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்ட முதல் மஹிந்திரா வாகனமாக மராசோ இருக்கிறது. இந்தியாவில் ஏழு மற்றும் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில இரண்டு வேரியன்ட்களில் மராசோ கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்குகிறது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    ×