search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர்.
    • கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது

    பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவேபாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள் இறந்தால் அவர்களை தெய்வத்திற்கு சமமாக பாவிப்பது நமது மரபு. அதுவும்வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாகஇறந்தால் அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்து வருகிறது.

    இறந்த கன்னிப் பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள்.

    ஒரு பருவப் பெண் கன்னி கழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தை திருமணம்) மிகுதியாக இருந்தது. மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால்நோய் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவன் இறந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கன்னி கழியாமல் , மறு திருமணமும் செய்யாமல் தன் புகுந்த வீட்டில் அல்லது பிறந்த வீட்டு உறுப்பினர்களுக்கு சேவை செய்தே தங்கள் வாழ்நாளை கழித்தனர்.பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து உடன் பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்து இருக் கிறார்கள்.

    பழங்காலத்தில் ராஜ குடும்பத்தினர், ஜமீன்கள் போன்ற பலர் அழகிய பருவ வயது பெண்களை தார்மீகமற்ற முறையில் கன்னிகைகளை கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தார்கள். இது பற்றிய பல்வேறுபுராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் , பாரம்பரிய குடும்ப கவுரவத்தை காக்கவும்தாங்களே தங்களை மாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

    இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில குடும்பங்களில் பருவம் அடைந்த பருவப் பெண்கள் காதலித்தால் குடும்ப கவுரவத்தை காக்க பருவமடைந்த கன்னியை உடன் பிறந்தவர்கள் அல்லது பெற்றோர்கள் கொலையும் செய்து இருக்கிறார்கள். இந்தக் கன்னிகள்தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விட்டவர்கள்.

    மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. தன் கன்னித்தன்மை வேறு குடும்பத்து ஆணுக்கு கொடுத்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்யும் பெண்கள் மகாசக்திகள் தான். பெண்களால் மட்டுமே ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். கணவனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தன் பிறந்த வீட்டு சீதனத்தை கொடுத்து குடும்ப கவுரவத்தை காக்கிறார்கள். பல பெண்கள் கருக்கலைப்பில் தங்கள் உயிரையும் இழந்து இருக்கிறார்கள்.

    தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உருவாக்கப்பட்ட ஸ்கேன் என்ற கருவி பல பெண் குழந்தைகளை தாயின் கருவறையிலேயேகல்லறையாகச் செய்து பெண்களின் விகிதாசாரத்தை குறைத்துவிட்டது. தாயின் கருவறையில் இறந்த பல பெண் குழந்தைகளின் சாபம் தான் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடைக்கு பிரதானமான காரணம்.

    நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதால் தான் திருமணம் என்ற அத்தியாயமே இல்லாமல்பல ஆண்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர். இல்லையில்லைமறந்தே விட்டனர். இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது. பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும். காலச் சூழல் காரணமாக வழிபாட்டை மறந்து வாழ்ந்த பல குடும்பங்கள் வீழ்ந்து போய் வாழ்ந்த சுவடே இல்லாமல் இருக்கிறார்கள்.

    • இன்று அங்காள அம்மனை வழிபட உகந்த நாள்.
    • திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

    ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் அம்சமான அங்காள அம்மனை விரதம் இருந்து பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

    சுய ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்க்கையால் உள்ள இடர்பாடுகள் தீரும். தவறான காதல் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மீண்டு வரக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.

    திருமணத்திற்கு பிறகு தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி வாழக் கூடிய மாற்றங்கள் உண்டாகும்.

    திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

    • தினமும் முன்னோரை வழிபடவேண்டும்.
    • முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை.

    தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம் தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களை மனதால் நினைத்து, அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசை தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

    'எனக்கு அப்பா இருக்கிறார். அம்மா இல்லை', 'எனக்கு அம்மா உண்டு, அப்பா இல்லை', எனக்கு அப்பா அம்மா இரண்டுபேருமே இல்லை, இறந்துவிட்டார்கள்' என்றால் அவர்கள் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    'என் அண்ணன் இருக்கிறார். அவர்தான் கொள்ளிவைத்தார். தம்பி உண்டு. அவர்தான் கொள்ளிவைத்தார்' என்றாலும் தாயாரை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த சகோதரர்கள் அனைவருமே தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். 'என் அண்ணன் தர்ப்பணம் செய்கிறாரே. நானும் செய்யவேண்டுமா?' எனும் கேள்விக்கே இடமில்லை.

    மகன்கள் அனைவருக்கும் சொத்தில் எப்படி பங்கு உண்டோ, மகன்கள் அனைவருக்கும் பெற்றோரின் கடனை அடைப்பது எப்படிக் கடமையோ, அதேபோல், மகன்கள் எல்லோருமே தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் அப்படிச் செய்யாததெல்லாம் பாவமாக, நம் தலையிலும் நம் சந்ததியினரின் தலையிலும் வந்துவிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    ஆகவே, அமாவாசை நாளில், ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு நன்றி சொல்லும் நல்லவாய்ப்பாக எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்து வழிபடுவோம். அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லுவோம்.

    இன்று ஆடி அமாவாசை. முன்னோர்களை வணங்குவோம். அவர்களுக்கு புண்ணியங்களைக் கொடுத்து, புண்ணியங்களைப் பெறுவோம். நம் சந்ததியினருக்கும் புண்ணியங்களைச் சேர்த்துக் கொடுப்போம்.

    • தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
    • அமாவாசை என்றால் எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

    ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள் உண்டுதானே. ஆத்மாக்களும் பாவம் புண்ணியம் என்று இரண்டும் உண்டுதான். அந்த பாவ புண்ணியங்களைக் கொண்டுதான், பித்ருலோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்.

    அமாவாசை முதலான நாளில், முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    தினமும், முன்னோரை வழிபடவேண்டும். நம்மை இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை தினமும் வழிபடுவதில் தப்பே இல்லை. அதேசமயம் முன்னோர் வழிபாட்டை வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    அதாவது, மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப் பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளய பட்சம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள் என்று தர்ப்பணம் செய்யவேண்டும்.

    • மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை விரத வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனித தலங்களில் கடலில், நீர் நிலைகளில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    அன்று நீர் நிலையில் பித்ருகள்பூஜை செய்து வேதவிற்பன்ன ருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதன் பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் முன் தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயாசத்துடன்படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகி ஓடும்.

    அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.

    முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும்.

    • ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக கொண்டனர்.

    தரங்கம்பாடி :

    தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறில் ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கொடி ஊர்வலம் புறப்பட்டபோது சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா குழந்தை ஏசு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் விமர்சையாக ஊர்வலம் புறப்பட்டது.

    அப்போது பக்தர்கள் மாலை அணிந்து 60 நாட்கள் விரதம் இருந்து சிகப்பு உடை அணிந்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவு செய்யும் வகையில் பெண்கள் புடவை பழவகைகள், இனிப்பு வகைகள், வளையல்கள், தென்னை கன்று உள்ளிட்ட பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து முன் வரிசையில் செல்ல பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி வர ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    அதை தொடர்ந்து பல்வேறு தெரு வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்து அடைந்ததும் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்கப்பட்டது. பக்தர்களுக்கு கஞ்சி வழங்கினர். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிர க்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    • திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

    அரசியல் ஆதாயம், அரசு உத்தியோகம், ஆன்ம பலம், ஆரோக்கியம் பெருக்கும் ஆடிக்கிருத்திகை.

    ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் விரத வழிபாடு சர்வரோக நிவாரணி. தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார்.

    கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம்.

    சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர பிராப்தம், திருமணம், உத்தியோகம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும்.

    வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

    • பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
    • ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்புடையவை.

    பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில்தஷ்ணாயணத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்க வேண்டும். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். மாங்கல்ய பலம் கூடும்.

    பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து 10 வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்,கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்துபால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபடவீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    அம்மனை வழிபடும் போது'லலிதாசகஸ்ர நாமம்' பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்க செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம்.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் விநாயகரை பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்துவிநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத் தடை விலகும்.

    ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை முறையாக செய்தால் நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல இன்னல்கள் தீரும்.

    வெளியில் சொல்ல முடியாத அவமானங்கள் கஷ்டங்கள் கூட,காணாமல் போய்விடும். காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் வீட்டு பூஜை அறையில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு, விளக்கேற்றி வாசனை மலர்கள் அணிவித்து "ஓம் சர்வ சக்தி தாயே போற்றி" என்ற மந்திரத்தை 108 முறை கூற தீராத துன்பம் என்று உங்களுக்கு எது இருக்கின்றதோ அந்த பிரச்சினை தீரும் என்று முதலில் மனதார வேண்டிக் கொண்டு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    இதேபோல், ஆடி மாதம் வீட்டு வாசலில்வேப்பிலையை சொருகி வைக்க ஆடிமாதக் காற்றில் பரவும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எதுவும் நம் வீட்டிற்குள் நுழையாது.

    • பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பது நல்லது.
    • துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள்.

    ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேச பலன்களை பக்தர்களுக்கு தரவல்ல ஒரு அற்புத தினமாக இருக்கிறது.

    வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

    மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று விரதம் இருந்து பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.

    • செவ்வரளி பூக்கள், மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம்.
    • 'லலிதா சஹஸ்ரநாமம்' கூறலாம், அல்லது அதை பாடலாக ஒலிக்கச் செய்யலாம்.

    தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதப் பிறப்பை, ஆடிப்பண்டிகை என்று பலரும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு, ஜூலை 17-ம்தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறந்தது. ஆடி மாதம் முழுவதும் விரதம் இருந்து வீட்டில் சிறப்பாக அம்மனை வரவேற்று, அம்மனின் ஆசி பெறுவது எப்படி இங்கே பார்க்கலாம்.

    வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, எளிதாக அலங்கரியுங்கள். வழக்கமாக, எந்த பண்டிகையாக இருந்தாலும் முதல் நாளே வீட்டை துடைத்து, பூக்கள், மாவிலை தோரணம் என்று அலங்கரிக்கும் பழக்கம் உள்ளது. வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, அழகாக கோலமிடுங்கள். மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் தெளித்து, விளக்கேற்றுங்கள். அம்மனுக்கு படைப்பதற்கென்று, தனியே சிவப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியை வாங்கி வைக்கலாம்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    செவ்வரளி பூக்கள், மணம் வீசும் மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம். ஒரு வெண்கல சொம்பில் புதிதாய் தண்ணீர் பிடித்து, ஒரு சிட்டிகை மஞ்சள், குங்குமம் சேர்த்து, பூஜை அறையில் வைத்து மனதார அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

    தெரிந்தவர்கள், 'லலிதா சஹஸ்ரநாமம்' கூறலாம், அல்லது அதை பாடலாக ஒலிக்கச் செய்யலாம். பழங்கள் மற்றும் இனிப்பை வைத்து நைவேத்தியம் செய்யலாம், அல்லது அம்பாளுக்கு பாயசம், அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து வணங்கலாம். புதிதாக காய்ச்சிய பாலில், சிறிது சர்க்கரை சேர்த்து நைவேத்தியம் செய்யலாம். அதே போல, தனியே பிரசாதம் செய்து, மற்றவர்களுக்கு வழங்கலாம்.

    கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.

    • மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.
    • ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும்.

    பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும். ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து சிவப்பு நிற ஆடையணிந்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வாசனை மலர்கள், செந்நிற மலர் அல்லது செண்பக மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு படைத்து அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.

    மிகக் குறிப்பாக காலை 8-9 மணி வரையான சுக்கிர ஓரை மற்றும் மதியம் 3 - 4.30 வரையான ராகு வேளையில் வழிபட வேண்டும். இயன்றவர்கள் அன்னதானம் மற்றும் சிகப்பு துவரை தானம் செய்யலாம்.

    சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் கொடுக்க வேண்டும். இதனால் ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும்.

    திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். ரத்த சம்பந்தமான பதினாறு பேறும் கிட்டும். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் ராகு/கேது சம்பந்தத்தால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.

    ×