search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97736"

    கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி மேலும் சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு இருப்பதாக நீர்ப்பாசனத்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 30ஆயிரம் கன அடி வீதமாகவும், கபினி அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதமாகவும் நீர் வந்தது. கபினி அணையில் இருந்து 40ஆயிரம் கன அடி நீர் வீதமும், கே.ஆர்.எஸ். அனணயில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும், தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடகா மற்றும் தேரளாவில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது இதை தொடர்ந்து கபினி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் இன்று மாலை தமிழகத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நேற்று விடப்படும் நீர்வரத்து 92 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று இரவு கபினி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது, இது இன்று மாலை ஒகேனக்கல் வந்தடைவதால். மேலும் ஒகேனக்கல்லில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் காவிரி கரையோர மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து 37-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் 2-வது முறையாக நிரம்பின. இதனால் நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

    இந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் நீர் திறப்பு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கனஅடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 62 ஆயிரத்து 319 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று பகல் 12 மணிக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    ஐந்தருவியில் பாறைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி

    இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஐந்தருவியில் உள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலும் தண்ணீர் செல்கிறது.

    தொடர்ந்து இன்று 34-வது நாளாக பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல் வந்திருந்தனர். வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளதால் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியவில்லை.

    மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள். ஒகேனக்கல்லில் உள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டு யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து உள்ளது.

    இன்று பிற்பகலுக்குப் பிறகு நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின.

    இதனால் நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் நேற்றிரவு தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கலில் நேற்று காலை 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றிரவு 8 மணிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின்அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதை காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலை 8 ஆயிரத்து 311 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 ஆயிரத்து 969 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.85 அடியாக உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று பிற்பகல் 60 ஆயிரம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தண்ணீர் வரும் பட்சத்தில் அணையில் இருந்து இதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் சரவணன் தமிழக அரசுக்கும், 6 மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி உள்ளார்.

    அதில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கும், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


    இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் கேட் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை ஆடி அமாவாசை என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் தர்ப்பணம் கொடுக்க நாகர்கோவில் மற்றும் முதலைப்பண்ணை அருகே 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அங்கே தர்ப்பணம் கொடுத்து விட்டு மெயின் அருவிக்கு சிறிய கால்வாய் போல் தண்ணீர் வரும் இடத்தில் பக்தர்கள் குளிக்குமாறும், கரைபுரண்டு ஓடும் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இன்று காலை முதல் ஏரியூர் அருகே உள்ள நாகமறையில் இருந்து சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறைக்கு இயக்கப்பட்டு வந்த பரிசல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    காவிரி கரையோரத்தில் உள்ள ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பட உள்ளதால் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டணம், சேலம் கேம்ப், தொட்டில்பட்டி, எடப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஆறுகளில் குளிப்பதையும், புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. #MetturDam
    ஒகேனக்கல் மெயினருவியில் குளிக்க தடைவிதித்து இருப்பதால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் தடுப்பு கம்பிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் மழை குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அணைகளில் இருந்து உபரி நீர் குறைவாக திறந்து விடப்பட்டது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. நீர்வரத்து படிப்படியாக குறைந்து கடந்த 2 தினங்களாக 13 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்து கொண்டிருந்தது.

    நேற்று முன்தினம் 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து 43 ஆயிரத்து 854 கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த நீர் நாளை காலை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்பதால், நீர்வரத்து குறித்து தொடர்ந்து பிலி குண்டுலுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். அதிக நீர்வரத்தின்போது ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயினருவியில் உள்ள தடுப்பு கம்பிகள் உடைந்தது. இதனால் குளிக்க தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவில் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் குறைவாக வருவதால் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்தனர்.

    மெயினருவியில் குளிக்க தடைவிதித்து இருப்பதால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் சரிவர வேலை இல்லாமல் திண்டாடினர். அவர்கள் இன்று மெயினருவியை சுத்தம் செய்து வருகின்றனர். தடுப்பு கம்பிகளை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ளதால் மாமரத்து கடுவு பகுதியில் பரிசல் இயக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு உள்ளது. மாற்று வழிப்பாதையான கோத்திக்கல் பாறை வழியாக மட்டும் பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். #Hogenakkal #Cauvery
    மெயினருவியில் தடுப்பு கம்பிகள் உடைந்து போனதால் நீர்வரத்து குறைந்தும் இன்று 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைவானதால் தமிழகத்திற்கு நீர்வரத்து படிபடியாக குறைந்தது. இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு கடந்த சிலநாட்களாக 15 ஆயிரம் கனஅடிக்கும் குறைவான அளவிலேயே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் 13 ஆயிரம் கனஅடியாக வந்த கொண்டிருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து குறைந்தும் சுற்றுலா பயணிகளை மெயினருவியில் தடுப்பு கம்பிகள் உடைந்து போனதால் இன்று 31-வது நாளாக அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிகுள்ளாகினர். மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரத்திலும், மெயினருவிக்கு செல்லும் நடைபாதையின் அருகே நீரோடையிலும் பாதுகாப்புடன் குளித்து மகிழ்ந்தனர்.

    இதேபோன்று வழக்கமாக பரிசல் இயக்கப்படும் மாமரத்துகடுவு பகுதியில் பரிசலை இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாற்று வழி பாதையான கோத்திக்கல் பாறையில் இருந்து கூட்டாறு வரை பரிசல் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் வந்தபோது மெயின் அருவியில் சேதமடைந்த தடுப்பு கம்பிகள் சீரமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அதில் இருந்து உபரி நீரை தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தற்போது கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    கடந்த மாதம் ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் வந்தபோது மெயின் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது. இந்த கம்பிகளை உடனடியாக சீரமைத்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இன்று 29-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், வழக்கமான பாதையில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் மாற்று பாதையான கோத்திக்கல் பாறை வழியாக குறைந்த அளவில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல தருமபுரி மாவட்டம் நாகமரை - சேலம் மாவட்டம் பண்ணவாடி இடையே பரிசல்களும், படகுகளும் கிராம மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆற்றங்கரையோரம் மட்டும் குளித்து விட்டு செல்கின்றனர். அதேபோல மெயின் அருவிக்கு வரும் பாதையில் ஒரு சிறிய கால்வாயில் காவிரி ஆற்று நீர் வருகிறது. அந்த கால்வாயிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். #Hogenakkal #Cauvery

    தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாக ஒகேனக்கலில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலங்களில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக -தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிப்படியாக நீர்வரத்து சரிந்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரித்ததால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 19 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று ஆடிப்பெருக்கு விழா தொடங்கப்பட்டது. இந்த விழா தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவை யொட்டி ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளப்பெருக்கின் போது மெயினருவியில் தடுப்பு கம்பிகள் சிதலமடைந்ததாலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

    மெயினருவிக்கு செல்லும் பாதையில் நுழைவு வாயின் அருகே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதில் அவர்கள் குளித்து விட்டு காவிரி அன்னையை வணங்கினர்.

    மேலும், பரிசல் இயக்கமும் நேற்று தொடங்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வழக்கமான பரிசல் நிலையத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு பதிலாக மாற்று இடமான கோத்திக்கல் பாறையில் இருந்து நேற்று பரிசல் இயக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    தொடர்விடுமுறை காரணமாக இன்று 2-வது நாளாகவும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மெயினருவிக்கு செல்லும் நடைபாதை அருகே மற்றும் முதலை பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு இவர்கள் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் தடையை மீறி செல்லாமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்காவில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று 2-வது நாளாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

    இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலை உள்ளதால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றின் கரையோரம் போன்ற தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்களை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று விடுமுறையின் காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகளால் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சிலர் குடும்பத்துடன் வந்து சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு சென்றனர். பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக வனப்பகுதி பயணியர் மாளிகை அருகே வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery


    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர் வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிபடியாக குறைந்து 18 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக வந்தது. நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிப்பெருக்கு விழா தொடங்க உள்ளது. இந்த விழா இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    ஆடிபெருக்கையொட்டி ஒகேனக்கல்லில் இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனாலும் மெயினருவில் வெள்ளபெருக்கின்போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டதால், அருவியில் குளிக்க பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் மெயினருவில் மட்டும் குளிப்பதற்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கை யொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். அவர்கள் குளிப்பதற்காக மெயினருவி செல்லும் பாதையின் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர்.

    இதுபோன்று காவிரி ஆற்றங்கரையோரம் முறையான தடுப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று இன்று முதல் பரிசல் இயக்கவும் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இன்று காலை மாற்றுவழி பாதையான கோத்திக்கல் பாறையில் சப்-கலெக்டர் சிவனஅருள் மற்றும் முன்னாள் மாவட்ட சேர்மன் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் பரிசலை இயங்கி தொடங்கி வைத்தனர்.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க காவிரி ஆற்றங்கரையோரம் மற்றும் குறைவாக நீர் செல்லும் பாதையில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் குளிக்க தடைவிதிக்கப்படும். தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

    இதுபோல் பரிசல் இயக்க வழக்கமாக ஊட்டமலை, மாமரத்துகவுடு, கோத்திக்கல்பாறை ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் மாமரத்துகடுவு பகுதியில் 4 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேலும் அதிகமானல் பரிசல் இயக்க மீண்டும் தடைவிதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 26 நாளாக ஒகேனக்கல்லில் வந்து குளிக்க முடியாத தவித்து வந்த சுற்றுலாபயணிகள் இன்று ஆடிப்பெருக்கு நாளில் மகிழ்ச்சியாக குளித்தும், பரிசலிலும் பயணித்தனர். #Hogenakkal #Cauvery



    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 23 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோல பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பரிசல் ஓட்டிகள் இன்று பரிசலை இயக்க மறுத்து விட்டனர். தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் மாற்று பாதையில் பரிசல் இயக்க அனுமதி வழங்கினால் மட்டுமே பரிசலை இயக்குவோம் என்று அவர்கள் அறிவித்து விட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    நேற்று கலெக்டர் மலர்விழி அதிகாரிகளுடன் சென்று ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு இன்று முறைப்படி பரிசல் இயக்கவும், பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. நாளை ஆடிப்பெருக்கை யொட்டி பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடுவார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுப்பார்கள். இதற்காக ஒகேனக்கல்லில் முதலைப்பண்ணை அருகேயும், நாகர்கோவில் அருகேயும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் அதிகாரிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் தொடர்ந்து இன்று 24-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு அதிகரித்து வந்த நீர்வரத்து படிபடியாக குறைந்து நேற்று முன்தினம் 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 17 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து 20 ஆயிரத்துக்கும் குறைவாக வந்து கொண்டிருப்பதால் மெயினருவி, ஐந்தருவி சினிபால்ஸ் ஆகிய இடங்களில் தண்ணீர் சீராக பாய்ந்தது.

    குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி கரையோரம் பகுதிகளில் இன்று முதல் குளிப்பதற்கான தடை நீக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் கேட்டின் ஏறி குதித்து மெயினருவியில் குளித்தனர்.

    நீர்வரத்து அதிகமான காலங்களில் குளிக்கவும், பரிசலில் செல்ல தொடர்ந்து 23-வது நாளாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்த போதிலும் அதிகாரிகள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால் தொடர்ந்து இன்று 24-வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இருந்தபோதிலும் ஒகேனக்கல் மெயினருவில் பாதுகாப்பு வளையங்கள் வெள்ளபெருக்கின்போது சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே மெயினருவில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது. இதுகுறித்து இன்று சப்-கலெக்டர் ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகுதான் ஒகேனக்கல்லில் குளிக்க தடை நீக்க முடியும். அதுவரை குளிக்க தடை தொடரும். இதேபோல் பரிசல் இயக்க அதிகபட்சமாக 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருக்க வேண்டும். தற்போது 17 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதால் இன்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாற்று ஏற்பாடு கோரி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாற்று வழி இயக்குவது குறித்து பேரிடர் மேலாண்மை துறை இதுவரை எந்தவித தகவலும், சான்றிதழும் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை.

    இதுகுறித்து உயர்குழு அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். அதுவரை நீர்வரத்து அதிகமாகும் காலங்களில் ஒகேனக்கல்லில் மாற்றுவழியில் பரிசல் இயக்க அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் கோத்திக்கல் பாறை வழியாக பரிசல் இயக்கப்படுமா? என்று பென்னாகரம் எம்.எல்.ஏ. இன்பசேகரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். #Hogenakkal

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநில அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பரிசல் இயக்க கடந்த 20 நாட்களாக தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    பரிசல் இயக்க முடியாததால் பரிசல் ஓட்டிகள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். மாற்று வழியான கோத்திக்கல் பாறை வழியாக பரிசல் இயக்கலாம் என்று பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்து கடந்த மாதம் முதல் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் பரிசல் இயக்கினால் ஆபத்துக்கள் ஏற்படும். எனவே, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரிசல் ஓட்டிகளின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் கோத்திக்கல் பாறை வழியாக பரிசல் இயக்கப்படுமா? என்று பென்னாகரம் எம்.எல்.ஏ. இன்பசேகரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூட்டாறு பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டு அருகே காவிரி ஆற்றங் கரையோரத்தில் இருந்து கோத்திக்கல் பாறை வழியாக பரிசலில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  #Hogenakkal

    ×