search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தானம்"

    ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    சபாபதி படத்தின் போஸ்டர்
    சபாபதி படத்தின் போஸ்டர்

    அந்தவகையில், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் அருண் விஜய்யும், சந்தானமும் பட வெளியீட்டில் போட்டி போட உள்ளனர்.
    ‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    பார்டர், சபாபதி படங்களின் போஸ்டர்
    பார்டர், சபாபதி படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் களமிறங்க உள்ளது. ‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி அருண்விஜய்யின் பார்டர் படத்துக்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    சிம்புவின் மன்தமன் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், சிம்பு இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
    சிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. நயன்தாரா, ரீமா சென் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர். 

    இந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் சிம்பு அடுத்து இயக்கத்திலும் இறங்க இருக்கிறார். சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.



    சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #KalaimamaniAward #VijaySethupathi
    பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, சினிமாத் துறையில், 

    2011  
    நடிகர்கள் - ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், 
    நடிகை - குட்டி பத்மினி, 
    நகைச்சுவை நடிகர் - பாண்டு, 
    நடன இயக்குனர் - புலியூர் சரோஜா
    பாடகி - சசி ரேகா

    2012
    நடிகர்கள் - என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து, 
    நடிகைகள் - டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
    கானா பாடல் கலைஞர் - உலகநாதன்
    இயக்குனர் - சித்ரா லட்சுமணன்

    2013
    நடிகர், இயக்குனர் - சி.வி.சந்திரமோகன்
    பாடகர் - ஆர்.கிருஷ்ணராஜ்
    நடிகர் - பிரசன்னா,
    நடிகை - நளினி
    பழம்பெரும் நடிகைகள் - குமாரி காஞ்சனா தேவி, சாரதா
    நடிகர்கள் - ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
    நாட்டுப்புறப் பாடற்கலைஞர் - வேல்முருகன்
    நாட்டுப்புறப் பாடகி - பரவை முனியம்மா



    2014
    நடிகர்கள் - கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
    இயக்குனர் - சுரேஷ் கிருஷ்ணா
    பாடகி - மாலதி
    நடன இயக்குனர் - என்.ஏ.தாரா

    2015
    நடிகர் - பிரபுதேவா
    இயக்குனர் - ஏ.என்.பவித்ரன்
    இசையமைப்பாளர் - விஜய் ஆண்டனி
    பாடலாசிரியர் - யுகபாரதி
    ஒளிப்பதிவாளர் - ஆர்.ரத்தினவேலு
    பாடகர் - கானா பாலா

    2016
    நடிகர்கள் - சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி

    2017
    நடிகர்கள் - விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
    நடிகை - பிரியா மணி
    இயக்குனர் - ஹரி
    இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா



    2018
    நடிகர்கள் - ஸ்ரீகாந்த், சந்தானம்
    தயாரிப்பாளர் - ஏ.எம்.ரத்தினம்
    ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன்
    பாடகர் - உன்னி மேனன்
    ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனம். #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் டாக்டராக இருக்கிறார் நாயகி ஷிர்தா சிவதாஸ். ஷிர்தாவிடம் யாராவது காதலை சொன்னால், அவரை பேய் அடித்துவிடுகிறது.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் டி.எம்.கார்த்திக், சந்தானத்தின் தொல்லை தாங்க முடியாமல், சந்தானத்தை, ஷர்தாவுடன் கோத்துவிட திட்டமிடுகின்றனர். அதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. ஷிர்தாவை பார்த்தவுடன் சந்தானத்திற்கு அவர் மீது காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்ல சந்தானத்தையும் பேய் அடித்துவிடுகிறது.

    கேரளாவில் மந்திரவாதியாக இருக்கும் ஷிர்தாவின் அப்பாவை பார்த்து பேசினால் தான் எல்லாம் சரியாகும் என்று தனது மாமா மொட்டை ராஜேந்திரனுடன் கேரளா செல்கிறார் சந்தானம்.



    அங்கு ஷிர்தாவின் தந்தையை பார்த்து தனது காதல் பற்றி பேசினாரா? சந்தானத்தின் காதலுக்கு ஷிர்தாவின் அப்பா பச்சைக் கொடி காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தில்லுக்கு துட்டுவின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் தனது வழக்கமான காமெடி மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஷிர்தா சிவதாசுக்கு தமிழில் முதல் படம் என்றாலும், அவர் தனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    சந்தானத்தின் மாமாவாக வரும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரமும் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் படத்தின் ஹைலைட். இருப்பினும் ஒரு சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. மாஸ்டர் சிவசங்கர், ஐயப்பா பைஜூ, டி.எம்.கார்த்திக், ராமர், தனசேகர் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கும் ராம் பாலா ரசிர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பேயை கலாய்க்கும்படியாக வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாவது பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷபீரின் பின்னணி இசை படத்திற்கு பலம், பாடல்களும் கேட்கும் ரகம் தான். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `தில்லுக்கு துட்டு 2' ஒர்க்அவுட்டு. #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தில்லுக்கு துட்டு 2'.

    சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிர்தா சிவதாஸ் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், மாஸ்டர் சிவசங்கர், மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஷபீர், ஒளிப்பதிவு - திப்பாக்குமார் பதி, பாடல்கள் - அருண்பாரதி & கானா வினோத், படத்தொகுப்பு - மாதவன், கலை இயக்கம் - ஏ.ஆர்.மோகன், சண்டைப்பயிற்சியாளர் - ஹரி தினேஸ், நடனம் - சாண்டி, ஆடை வடிவமைப்பு - ஆர்.பிரவீன்ராஜ், இணை தயாரிப்பு - சி.ரமேஷ்குமார், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பு - ஹாண்ட்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் - என்.சந்தானம், எழுத்து, இயக்கம் - ராம்பாலா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது,

    ‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.

    நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன். ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’ இவ்வாறு சந்தானம் கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ‘தில்லுக்கு துட்டு 2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் அளித்த பேட்டியில் தான் தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன் என்றும் நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி என்றார். #DhillukuDhuddu2
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இங்க என்ன சொல்லுது,’ ‘இனிமே இப்படித்தான்,’ ‘சக்கப்போடு போடு ராஜா,’ ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

    தற்போது சந்தானம் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு 2’, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ‘தில்லுக்கு துட்டு 2’ வருகிற 7-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், சந்தானம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

    ‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.



    சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரின் படங்களை பார்த்த திருப்தி, இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எங்கள் இருவருடன் மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர் மாஸ்டர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படம் சென்னை மற்றும் கேரளாவில் வளர்ந்து இருக்கிறது. 

    நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன்.

    ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’

    இவ்வாறு சந்தானம் கூறினார். #DhillukuDhuddu2 #Santhanam

    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் `தில்லுக்கு துட்டு 2' படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #DhillukuDhuddu2 #Santhanam
    சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

    இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    இப்படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் 2வது டீசரை நாளை (ஜனவரி 14) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #DhillukuDhuddu2 #Santhanam
    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் `தில்லுக்கு துட்டு 2' படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #DhillukuDhuddu2 #Santhanam
    சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

    இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை இம்மாதமே வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam
    தில்லுக்கு துட்டு 2 படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார். #Santhanam
    சந்தானம் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு 2’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் சந்தானம்.

    அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தை சர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான மாஸ்ட்ரம், த பர்பெக்ட் கேர்ள், லவ் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

    அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் 
    நடிக்கிறார்.



    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி வரும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #DhillukkuDhuddu2 #Santhanam
    சந்தானம் - அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

    இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'கலக்கப்போவது யாரு' புகழ் ராமர் மற்றும் தனசேகர், கோரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் N.சந்தானம் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த நிலையில், `தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீஸரை வருகிற அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. #DhillukkuDhuddu2 #Santhanam

    ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்து வருகிறார். #DhillukuDhuddu2 #Santhanam
    சந்தானம் - அஞ்சால் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பற்றி இயக்குநர் ராம்பாலா பேசியதாவது,

    “தில்லுக்கு துட்டு-2, முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படமாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன. இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.



    மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஷிர்தா சிவதாஸ் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம். மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சிறப்பாக வந்து இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து, அதிக கவனம் செலுத்தி, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்.” என்று கூறினார். #DhillukuDhuddu2 #Santhanam #ShirthaSivadas

    ×