search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. #TeamIndia #AUSvIND
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த உற்சாகத்தில் உள்ள இந்திய வீரர்கள், 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

    முதல் போட்டியில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். அதேபோல் இந்த போட்டியிலும் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.



    இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்,ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விகாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

    ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. #TeamIndia #AUSvIND
    வேகப்பந்து வீச்சாளர்களை பந்தய குதிரைகளை போல் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். #India #Australia #IndianCoach #BharatArun
    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்கும். இதையொட்டி பெரும்பாலான இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.



    பயிற்சி ஆட்டத்தின் போது இடது கணுக்காலில் காயமடைந்த பிரித்வி ஷா, முதலாவது டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு வேளை ரோகித் சர்மா உடல்தகுதிபெற முடியாமல் போனால், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளில் 14-ஐ இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி அசத்தினர். பெர்த்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிலெய்டு போட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடந்த தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணிலும் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியில் (இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்) இதுவும் ஒன்றாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை நன்றாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓரிருவர் மட்டுமல்ல, எல்லா பவுலர்களும் அசத்துகிறார்கள்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் மிகவும் மதிப்பு மிக்கவர்கள். அதனால் அவர்களை கவனமாக கையாள வேண்டும். அதாவது பந்தய குதிரையை பராமரிப்பது போல் இவர்களையும் எந்தவித காயத்துக்கும், பணிச்சுமைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த தொடர்களில், தொடர்ந்து சீராக பந்து வீசுவதில் குறைபாடு இருந்தது. அதை சரி செய்வதற்கு உண்மையிலேயே கடினமாக உழைத்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களது திட்டம் என்ன, அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை வகுத்து அதற்கு ஏற்ப வலை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    பெர்த் போன்ற ஆடுகளத்தில் பவுலர்கள் உற்சாகமாக பந்து வீசுவார்கள். இந்த ஆடுகளத்தை உன்னிப்பாக பார்க்கவில்லை. ஆனாலும் எத்தகைய ஆடுகளத்தன்மை, சீதோஷ்ண நிலை காணப்பட்டாலும் அதற்கு ஏற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.

    வயது அதிகரிக்க, அதிகரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் நன்கு பக்குவப்படுகிறார்கள். நாள்பட்ட ஒயினின் சுவை அதிகரிப்பது போன்று சுழற்பந்து வீச்சாளர்களும் மெருகேறுகிறார்கள். அடிலெய்டு டெஸ்டில் அஸ்வின் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினார். கிட்டத்தட்ட 90 ஓவர்கள் பந்து வீசி 147 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். இதற்கு மேல் அவரிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்க முடியாது. அஸ்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு பவுலர். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அது தான் நமக்கு அனுகூலமாகும்.

    இவ்வாறு பரத் அருண் கூறினார்.

    அடிலெய்டில் இருந்து பெர்த்துக்கு விமானத்தில் பயணித்த போது, விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தங்களது சொகுசு இருக்கையை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் விட்டுக்கொடுத்தனர். கோலியின் செயல் தன்னை வெகுவாக கவர்ந்தது என்று அதை நேரில் பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். #India #Australia #IndianCoach #BharatArun 
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில் நுட்பம் சரியானதல்ல என ஆஸ்திரேலியா கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #TimPaine
    அடிலெய்ட்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிம்பெய்ன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்யும் டி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் சரியானதல்ல. இந்த தொழில் நுட்பத்தில் எனக்கு பதில்கள் கிடைக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    எல்லோருக்கும் இது ஏமாற்றம் அளிப்பதாகவே நான் கருதுகிறேன். டி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்தில் பந்துகள் ஸ்டெம்புக்கு மேலே செல்வதாகவே காட்டுகிறது. ஆனால் உண்மையிலேயே அதுபோன்று நடக்காது என்பது எனக்கு தெரியும்.



    நாதன்லயன் பந்தின் உயரம் குறித்து தகவல்களை தருகிறார். நீங்கள் எல்லோருடைய தகவல்களையும் எடுத்துக் கொண்டு முடிவுகளை கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு 2 முறை தவறான தீர்ப்பு கிடைத்தது.

    மிச்சேல் ஸ்டார்க் நல்ல பார்மில் இருந்தால் அவரைவிட உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யாருமில்லை. பெர்த் மைதானத்தில் அவருக்கு மிகவும் உகர்ந்ததாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் டெஸ்டில் இந்திய வீரர் ரகானே கேட்ச் ஆனதாக நடுவர் தீர்ப்பு வழங்கினார். டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தபோது பேட்டில் படவில்லை என்பது தெரிந்தது. இதனால் அவுட் முடிவு திரும்ப பெறப்பட்டது.

    இதேபோல் புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட 2 அவுட்டுகள் டி.ஆர்.எஸ். முறையில் திரும்ப பெறப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி தான் ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். #AUSvIND #TimPaine
    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. #AUSvIND #ViratKholi
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு மைதானத்தில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தன. இந்தியா 2-வது இன்னிங்சில் 307 ரன் குவித்தது. 323 ரன் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 291 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் புஜாரா 194 ரன்னும் (123+71), ரகானே 83 ரன்னும் (70+13) எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும் (3+3), முகமது‌ஷமி 5 விக்கெட்டும் (2+3) கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 71 ஆண்டுகளில் (1971 முதல்) டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது இல்லை. தற்போது முதல் டெஸ்டில் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைத்தது. கடைசியாக 2008-ல் வெற்றி பெற்றது.

    ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது வெற்றியையும், அடிலெய்டு மைதானத்தில் 2-வது வெற்றியையும் பதிவு செய்தது.

    ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை வெற்றி பெற்ற விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. அதன் விவரம்:-



    டெண்டுல்கர்: இந்திய அணி டெஸ்ட் தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கி இருந்தது. ஒரு போதும் அழுத்தத்தை விட்டு விடக் கூடாது. புஜாராவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு இன்னிங்சிலும் அற்புதமாக ஆடினார். ரகானேயும் 2-வது இன்னிங்சில் நன்றாக ‘பேட்டிங்’ செய்தார். 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதை பார்க்கும் போது 2003-ம் ஆண்டு நடந்த போட்டி நினைவுக்கு வந்தது.

    கங்குலி: அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றி மிகவும் சிறந்தது. உண்மையிலேயே நம்பத்தகுந்தது. இந்த டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் முடிவு ஏற்படும்.

    ஷேவாக்: டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்த (பெஸ்ட்) கிரிக்கெட். ஆஸ்திரேலிய அணி கடைசி கட்டத்தில் கடுமையாக போராடியது. ஆனால் இந்திய அணி அதை விட சிறப்பாக செயல்பட்டது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன் என்ற நிலையில் இருந்து இந்தியா பெற்ற வெற்றி இந்த சிறப்பானது. புஜாராவும், பந்து வீச்சாளர்களும் மிகவும் அபாரமாக செயல்பட்டனர்.

    இது சிறப்பு டெஸ்ட் தொடராக இருக்கும் என்பது உறுதி.

    வி.வி.எஸ். லட்சுமண்: ஆஸ்திரேலிய பின்கள வீரர்கள் இந்த டெஸ்டில் மிகவும் கடுமையாக போராடினார்கள். இந்திய பவுலர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. இதே திறமையுடன் 2-வது டெஸ்டில் விளையாட வேண்டும்.

    ஹர்ஷா போக்ளே (டெலிவிசன் வர்ணனையாளர், விமர்சகர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் வெற்றி பெறுவது அரிதானது. இந்த போட்டி கிரிக்கெட்டில் அற்புதமானவை. நீண்ட நாள் நினைவில் இருக்கும். கடினமான போட்டிகள் எப்போதுமே மறக்க முடியாததாக இருக்கும்.

    இதேபோல் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், வார்னே, மிச்சேல் ஜான்சன் ஆகியோரும் இந்திய அணியை பாராட்டி உள்ளனர். #AUSvIND #ViratKholi
    முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    1947-ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்தை இந்திய அணியினர் நேற்று போக்கினார்கள்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பு மிக்க வெற்றியை தனதாக்கியது. பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது வீரர்களுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். நல்ல தொடக்கம் காண்பது நம்பிக்கையை அளிக்கும்.

    இந்த போட்டி தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் வலைப்பயிற்சியில் அதிக நேரத்தை செலவிடாமல் தவிர்க்க வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் அதிக வேகம் கொண்டதாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
    முதல் இன்னிங்சில் நமது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். புஜாரா மிகவும் அருமையாக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்ட் நன்றாக செயல்படுகிறார். நாதன் லயன் கேட்ச்சை கோட்டை விட்டது போன்ற தவறை அவர் மீண்டும் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். #AUSvIND #AdelaideTest #RishabhPant
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைவிட, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.

    இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தின் பங்களிப்பும் அணியின் வெற்றிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. நெருக்கடியான தருணங்களில் அவர் முன்னணி பேட்ஸ்மேன்களை கேட் பிடித்து அவுட் ஆக்கினார்.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 கேட்ச், இரண்டாம் இன்னிங்சில் 5 கேட்ச் என 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார்.



    1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேக் ரஸல் மற்றும் 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாப் டெய்லர் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), விர்திமான் சகா (இந்தியா)  ஆகியோர் 10 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். #AUSvIND #AdelaideTest #RishabhPant
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvAUS #AdelaideTest #ashwin
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடிய ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும் நாதன் லயன் மட்டும் தாக்குப்பிடித்து ஆடியதால், நேரம் செல்லச்செல்ல ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் மறுமுனையில் ஆடிய ஹாசில்வுட் 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.


    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்த இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

    ஆஸ்திரேலியாவின் கடைசி 4 விக்கெட் 135 ரன்களை எடுத்து இந்தியாவை சற்று தடுமாற வைத்து விட்டது. இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் முதல் இன்னிங்சில் 123 ரன்னும், 2-வது இன்னிங்சில் 70 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி 12-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தற்போது சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதற்கு முன்பு 11 முறையும் முதல் டெஸ்டில் வென்றது இல்லை. தற்போது அந்த வரலாற்றை மாற்றி அடிலெய்டு டெஸ்டில் சாதனையுடன் வெற்றி பெற்று கணக்கை தொடங்கி இருக்கிறது.

    இந்த வெற்றி மூலம் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. #INDvAUS #AdelaideTest #ashwin
    அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. #INDvAUS #AdelaideTest
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள்  விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.  தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆனால் அவர் 60 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14  ரன்களிலும் அவுட் ஆனார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தோல்வியைத் தவிர்க்க போராடி வருகின்றனர்.  #INDvAUS #AdelaideTest
    கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #AUSvIND

    4 -வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளில் எப்படி போராடி மீண்டோம் என்பது குறித்து விவாதித்தோம். இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அந்த மாதிரி நினைப்பது தான் நல்லது. நாளைய (இன்று) நாளில் முதல் பந்து, முதல் ஓவர், முதல் மணி நேரம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக மாற்ற வேண்டியது முக்கியம். எங்களது வீரர்கள் நெருக்கடியை பற்றி நினைக்காமல் உற்சாகமாக, நம்பிக்கையுடன் போராட வேண்டும்.

    ஷான் மார்ஷ், ஒரு சூப்பர் ஸ்டார். முதல்தர கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக நிறைய பந்து வீசியிருக்கிறேன். எனது பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் விரட்டியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடுவதில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். அவரும், டிராவிஸ் ஹெட்டும் கடைசி நாளில் ஹீரோவாக உருவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.’ என்றார். கடந்த மாதம் இதே மைதானத்தில் நடந்த முதல்தர கிரிக்கெட்டில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக இறங்கிய ஷான் மார்ஷ் 163 ரன்கள் விளாசி, 313 ரன்கள் இலக்கை எட்ட வைத்தது நினைவு கூரத்தக்கது.

    இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், ‘பின்வரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து குறைந்தது 25 ரன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இந்த பகுதியில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. 9, 10, 11-வது வரிசை ஆட்டக்காரர்கள் கொஞ்சமாவது சிறப்பாக ஆட வேண்டும். புஜாராவும், ரஹானேவும் தரமான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள். எப்போதெல்லாம் அவர்கள் நன்றாக ஆடுகிறார்களோ, அப்போது அணியும் வலுவான நிலைக்கு சென்று விடும்.

    கேப்டவுன் (தென்ஆப்பிரிக்கா), லண்டன் ஓவல் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்தில் நல்ல நிலைமையில் இருந்து தோல்வியை தழுவினோம். ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சவால் மிக்க அணியாக உணருகிறோம். இப்போது தேவை, முன்பு போல் அல்லாமல் தடையை வெற்றிகரமாக கடக்க வேண்டும்’ என்றார். #AUSvIND 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 3ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர். டிராவிஸ் ஹெட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 72 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3  விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

    இதையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.



    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் எடுத்தது.  முரளி விஜய் 18 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து லோகேஷ் ராகுல் 44 ரன்களில் அவுட்டானார். அப்போதுஅணியின் எண்ணிக்கை 76 ஆக இருந்தது.

    அடுத்து இறங்கிய புஜாரா பொறுப்புடன் நிதானமாக விளையாடினார். கேப்டன் விராட் கோலி - புஜாரா ஜோடி 71 ரன்களை கடந்த நிலையில் விராட் கோலி 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். 

    மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #AUSvIND
    அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது நேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது. #AUSvIND
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஸ்டார்க் அவுட் ஆனதும், சிறிதுநேரம் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. மழை விட்டதும் நிதானமாக ஆடிய ஹெட் சதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 72 ரன்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். அடுத்த பந்தில்  ஹேசில்வுட் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாதன் லயன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா இருவரும் தலா 3  விக்கெட்டுகள் எடுத்தனர். இஷாந்த் ஷர்மா, ஷமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்க உள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா 15 ரன்கள் பின்தங்கி உள்ளது. எனவே இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.  #AUSvIND

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி சீனாவை 11 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Australia #China
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் சீனா அணிகள் இன்று மோதின.

    தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோலாக்கினர். அவர்களது துல்லியமான ஆட்டத்துக்கு சீன வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி சீனாவை 11- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 3 கோல்கள் அடித்த பிளாக் கோவர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி புள்ளிப்பட்டியலில் பி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

    பி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 4 -2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த அயர்லாந்து அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #Australia #China
    ×